என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • குறைந்த விலையில் விற்கப்படுகிறது
    • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்

    திருப்பத்தூர்:

    தக்காளி விலை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்படுவ தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

    திருப்பத்தூர் கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று குறைந்த விலையில் தக்காளி விற்பனையை திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.பெ. முருகேசன் தொடங்கி வைத்தார். அப்போது பொது மக்க ளுக்கு 1கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தக்காளியை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் பொது வினியோக திட்ட துணை பதிவாளர் சம்பத், கூட்டுறவு சார்பதிவாளர்கள் சதாசிவம், தர்மேந்திரன், ராமசந்திரன், முதுநிலை ஆய்வாளர் திப்புதிலீ பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதியில் மேலும் 4 கூட்டுறவு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

    • காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்
    • உயர் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள பசலிக்குட்டை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டு சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்காவடி, பன்னீர் காவடி, பால் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 5 அடிமுதல் 20 அடி வரை உள்ள வெள்ளி வேல் அலகு குத்தியும், சிறிய மற்றும் பெரிய தேரை இழுத்து வந்தும், அந்தரத்தில் தொங்கிய படி பறக்கும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருப்பத்தூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி பகுதி களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூரில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலுக்கு செல்லும் வழி முழுவதும் பலர் அன்னதானம் செய்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக சேவலை கோவில் மீது சூறை யிட்டு விட்டு சென்றனர்.

    ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் அங்கு விழாக்கோலம் பூண்டது. திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
    • ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிதி ஒதுக்கீடு

    ஜோலார்பேட்டை:

    இந்தியா முழுவதும் ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் 'அம்ரீத் பாரத்' ரெயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரெயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.

    ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணி களின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரெயில்நிலையங்கள் நவீனமயமாக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, கூடு வாஞ்சேரி ஜோலா ர்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    இந்த அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்ட பணிகளை வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் அதற்கான பணிகளை ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த காணொளி காட்சி மூலம் திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. தேவராஜ் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    • மாங்காய்க சிதறி கிடந்தது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால், லாரி டிரைவர். இவர் இன்று அதிகாலை வேலூரில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மண்டிக்கு, லாரியில் மாங்காய்களை லோடு ஏற்றிக்கொண்டு சென்றார்.

    ஆம்பூர் நெடுஞ்சாலை யில் சென்றபோது, லாரி மீது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 5 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

    விபத்தால் சாலை முழுவதும் மாங்காய் சிதறி கிடந்தது. அதனை பொதுமக்கள் அள்ளி சென்றனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது
    • பல்வேறு கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மிட்டாளம் ஊராட்சி பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஊட்டல் தேவஸ்தான கோவிலில் ஆடி பெருக்கு முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.

    இந்த கோவிலில் இன்று குளத்தில் உள்ள புனித நீர் தொட்டியில் உள்ள நீரை தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்கள் தலை மேல் ஊற்றி பிறகு அங்குள்ள பல்வேறு கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    • டெல்லி குழுவினர் ஆய்வு
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்தவும், வறட்சியை செழிப்பாக்கவும், விவசாயங்களை மேம்படுத்தவும், குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் நடவடிக்கை எடுக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 204 ஊராட்சிகளில் 1,400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்தப் பணி ஆனது தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும்தான் அதிக அளவில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாவட்ட முழுவதும் பண்ணை குட்டைகள் வெட்டப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து வந்துள்ள குழுவினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து மாவட்ட முழுவதும் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலையில் ஊராட்சியில் 6 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெற்று வரும் பணியை டெல்லியில் இருந்து வந்த டாக்டர் எஸ்வந்த் சாய் ஆய்வு செய்தார்.

    அப்போது பண்ணை குட்டையில் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை அளவீடு செய்தனர். அப்போது பண்ணை குட்டைகள் அமைப்பதால் நிலத்தடி நீர் உயர்வதோடு, குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும், விவசாயம் செழிக்கும், வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இதனால் பண்ணை குட்டை பயனுள்ள ஒன்று என ஆய்வு மேற்கொண்டவர்கள் அங்குள்ள பொது மக்களுக்கு தெரிவித்தனர்.

    மேலும் இந்த ஆய்வின் போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார், உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
    • வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர்குப்பம் பகுதியில் வசிப்பவர் சித்தன். இவரது வீட்டிற்குள் சாரை பாம்பு ஒன்று நுழைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து வீட்டில் இருந்த வர்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலை மையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் நுழைந்த 6 அடி நீள சாரை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • கலசம் எடுத்துச் செல்லுதல் தொடர்பாக நடந்தது
    • தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் கிராமத்தில் நாளை (வியாழன்) ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு ஸ்ரீ பன்னீர் முருகன் கோவிலுக்கு அபிஷேக கலசம் எடுத்துச் செல்லுதல் தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    இது குறித்து நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போலீஸ் பாதுகாப்பு டன் திருவிழாவினை நடத்த இரு தரப்பினரிடம் அறிவுறுத்தி எழுத்துமூலம் ஒப்புதல் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், தலைமை யிடத்து துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.3.50 கோடியில் அமைக்கப்படுகிறது
    • அதிகாரிகளுடன் நகரமன்ற தலைவர் ஆய்வு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நகரின் பிரதான சாலைகளை இணைக்கும் பகுதியான ஜண்டாமேடு பகுதியில் உள்ள பாலம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டு வருகிறது.

    இந்தப் பாலத்தின் வழியாகதினமும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாண விகள், பொதுமக்கள், விவசாயிகள் சென்று வருகின்றனர்.

    எனவே அந்த பகுதியில் புதிய பாலம் அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி நகர மன்ற தலைவர் உமாசிவாஜி கணேசன், நகர தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் ஆகியோர் முயற்சியால் இக்பால் ரோடு- ஜண்டாமேடு பகு தியை இணைக்கும் பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு புதிதாக சி.ஜி.எப் நிதியின் கீழ் ரூ.3.50 கோடி செலவில் புதிய பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதற்கான ஆயத்த பணிகளை நகராட்சி அதிகாரிகளுடன் நகரமன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன், நகர தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாலம் விரைவில் கட்டப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.

    • பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆம்பூர்:

    ஆம்பூர் நேதாஜிரோடு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரபல துணிக்கடை அமைந்துள்ளது. இந்த துணிக்கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கடையில் இருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து

    விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தனியார் துணி கடைக்கு வேலைக் சென்றார்
    • போலீஸ் நிலையத்தில் புகார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்த (17 வயது) இளம் பெண்.

    இவர் கடந்த 29-ந் தேதி ஆம்பூர் உள்ள தனியார் துணி கடைக்கு வேலைக் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வரவில்லை. இதுகுறித்து இளம்பெண் பெற்றோர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேய்ந்து கொண்டிருந்த போது தடுமாறி விழுந்தது
    • தீயணைப்பு துறையினருக்கு தகவல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் இர்பான். நேற்று வீட்டின் அருகே 30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்று பகுதியில் இவரது பசுமாடு மேய்ந்து கொண்டிருந்த போது தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தது.

    உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித் துள்ளனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் சென்று கிணற்றில் இருந்து மாட்டை உயிருடன் மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    ×