என் மலர்
நீங்கள் தேடியது "புகுந்த நாக பாம்பு"
- தீயணைப்புதுறையினர் பிடித்தனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு பாடம் நடத்திக் கொண்டி ருந்தனர். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடத்தை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப்பகுதியில் திடீரென்று நல்ல பாம்பு புகுந்தது. இதைபார்த்ததும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியை பத்மாவதியிடம் நாட்டறம்பள்ளி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் சென்று 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் ஏலகிரிமலை காப்பு காட்டில் பாம்பை கொண்டு போய் விட்டனர்.






