என் மலர்tooltip icon

    தேனி

    • பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆற்றுப்பகுதிக்கு வருபவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணை முழுகொள்ளளவை எட்டியதால் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மேலும் கல்லாறு, கும்பக்கரை, செலும்பாறு நீரும் அதிகரித்து உள்ளதால் வராக நதியில் இருகரைகளையும் ஒட்டியபடி தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றங்கரை பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    இதேபோல் போடி கொட்டக்குடி, போடி மெட்டு, முந்தல், குரங்கனி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆற்றுப்பகுதிக்கு வருபவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
    • அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 47 அடியாக குறைந்திருந்தது. அதனைதொடர்ந்து அரசரடி, வெள்ளிமலை, கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மேலும் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேலும் கனமழை தொடர்ந்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 3177 கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை மேலும் உயர்ந்து 6458 கனஅடி நீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 66.31 அடியாக உயர்ந்துள்ளது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கு அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

    ஆனால் திடீர் கனமழையால் அணையின் நீர்மட்டம் 66 அடியை கடந்ததால் முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 68 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், அதனைதொடர்ந்து 69 அடியை எட்டியவுடன் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறக்கப்படும்.

    தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றை கடக்கவோ முயற்சிக்க கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 125.50 அடியாக உள்ளது. அணைக்கு 1616 கனஅடிநீர் வருகிறது. தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் முல்லைபெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 105 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.93 அடியாக உள்ளது. வருகிற 462 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    பெரியாறு 12, தேக்கடி 4.6, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 26.6, சண்முகாநதி அணை 14.2, போடி 100.2, வைகை அணை 8, மஞ்சளாறு 27, சோத்துப்பாறை 51, பெரியகுளம் 55, வீரபாண்டி 107, ஆண்டிபட்டி 15.6, அரண்மனைப்புதூர் 37.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • அரிவாளுடன் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் சிவமூர்த்தி சரண் அடைந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது38). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டார்.

    இதனையடுத்து அவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே ராஜேஷ்குமார் வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மைத்துனர் சிவமூர்த்தி (30) என்பவர் அங்கு சென்று எனது அக்காவை விரட்டி விட்டு வேறு ஒருவருடன் வாழ்கிறாயா என சத்தம் போட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்று சிவமூர்த்தியின் வீட்டுக்கு ராஜேஷ்குமார் சென்றார். அங்கு சிவமூர்த்தி இல்லாததால் அவரது மனைவியிடம் இனிமேல் எனது பிரச்சினையில் உன் கணவர் தலையிடக்கூடாது என சத்தம்போட்டு வந்துள்ளார்.

    வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் சத்தம்போட்டதால் ஆத்திரம் அடைந்த சிவமூர்த்தி இன்று போடி அரசு உதவி பெறும் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த ராஜேஷ்குமாரை வழிமறித்து சத்தம் போட்டார். மேலும் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஷ்குமாரை வெட்டினார். உயிருக்கு பயந்து அவர் ஓட முயன்றபோதும் விடாமல் துரத்தி சென்ற சிவமூர்த்தி சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.

    பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் சிவமூர்த்தி சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு களில் தங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. இதில் 40 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, பரிசீலனை க்காக அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது.

    மேலும் வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாத நபர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் , திருத்தம் தொடர்பான படிவங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் கல்வி கடன் வேண்டியும், அடையாள அட்டை வேண்டியும், சுய தொழில் தொடங்க கடன் வேண்டியும் திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரக்கோருதல் என பல்வேறு விதமான கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

    பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, முன்னோடி வங்கி மேலாளர் மோகன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • துப்பாக்கி நடந்த இடத்தை தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • ஏ.எஸ்.பி. விவேகானந்தன் உயிரிழந்த ஈஸ்வரன் குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு ட்பட்ட லோயர்கேம்ப், கப்பாமடை பீட்டு, வண்ணாத்திப்பாறை, காப்புக்காடு, முடாரிசரகம் ஆகிய பகுதிகளில் ஒருசிலர் அனுமதியின்றி மின் வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்தன.

    இதனையடுத்து வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கடந்த மாதம் 29ந் தேதி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனக்காவலரை தாக்க முயன்றதாக கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (52) என்பவர் மீது துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் சாலை மறியல், போராட்டங்கள் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஈஸ்வரன் உடலில் எந்த இடத்தில் குண்டு பாய்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தியதுடன் பிரேத பரிசோதனை நடத்தவும் ஒத்துழைப்பு அளிக்க உறவினர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இந்நிலையில் ஏ.எஸ்.பி. விவேகானந்தன் உயிரிழந்த ஈஸ்வரன் குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் கூடலூர் போலீஸ் நிலையத்திலும் ஈஸ்வரன் இறப்பு குறித்து பதியப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் இறந்து கிடந்த இடம் மற்றும் சம்மந்தப்பட்ட வனத்துறையினரிடமும் விசாரணை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    • வீட்டைவிட்டு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள பங்காளபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு ராஜேஸ்வரி (வயது27) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி பழனியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு மாயமானார்.

    இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொட்டக்குடி, பீச்சாங்கரை, குரங்கணி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
    • கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. அருவியில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தற்போது கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை பின்னர் படிப்படியாக அதிகரித்து இரவில் கன மழையாக கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொட்டக்குடி, பீச்சாங்கரை, குரங்கணி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் தடுப்புகளை தாண்டி தண்ணீர் செல்கிறது. பொதுமக்கள் அங்கு செல்லவோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் அங்கு செல்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதேபோல் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதனையடுத்து அருவியில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

    தொடர் மழை காரணமாக ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் முழு கொள்ளளவை எட்டி அதில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.05 அடியாக உள்ளது. வரத்து 1565 கன அடி. திறப்பு 511 கனஅடி. இருப்பு 3629 மி.கன அடி.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.12 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 4658 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.50 அடி. வரத்து மற்றும் திறப்பு 100 கன அடி. இருப்பு 366 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடி. அணைக்கு வரும் 129 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடி.

    பெரியாறு 27.4, தேக்கடி 11.2, கூடலூர் 5.4, உத்தமபாளையம் 11.4, சண்முகாநதி அணை 6.6. போடி 5.8, வைகை அணை 30, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 46, பெரியகுளம் 25, வீரபாண்டி 22.6, அரண்மனைப்புதூர் 6, ஆண்டிபட்டி 34.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன.
    • ஆக்கிரமிப்பில் இயங்கிய ஆட்டு இறைச்சி கடைகள் நகராட்சி மூலம் அகற்றப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன.

    ஆட்டு இறைச்சி விற்பதற்கும் கடை நடத்துவதற்கும் உரிய நகராட்சி அனுமதி இல்லாமல் நடப்பதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஆட்டு இறைச்சி தரம் உள்ளது என்றும், புதிதாக வெட்டப்பட்டது என்பதற்கும் நகராட்சி மூலம் ஒப்புதல் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும் என்பது நடைமுறை.

    ஆனால் போடியில் தற்போது புற்றீசல் போல பெருகிவரும் ஆட்டிறைச்சி கடைகள் உரிய அனுமதி இன்றியும் நகராட்சி அனுமதி பெறாமல் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்தன.

    மேலும் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனவே நகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று கடைகள் நடத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனையடுத்து ஆக்கிரமிப்பில் இயங்கிய ஆட்டு இறைச்சி கடைகள் நகராட்சி மூலம் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • உத்தமபாளையம் மற்றும் வண்ணாத்திபாறை ஆகிய 2 துணை மின்நிலை யங்களிலும் நாளை (4-ந்தேதி) பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் கோட்டத்திற்குட்பட்ட உத்தமபாளையம் மற்றும் வண்ணாத்திபாறை ஆகிய 2 துணை மின்நிலை யங்களிலும் நாளை(4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலா புரம்,

    ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்க முத்தன்பட்டி, சுருளிபட்டி, நாராயண த்தேவன்பட்டி, லோய ர்கேம்ப், மேல்மணலார், கீழ்மணலார், ைஹவேவிஸ், மகாராஜாமெட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்வினி யோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சந்திர மோகன் தெரிவித்துள்ளார்.

    • பள்ளியின் காம்பவுண்டு சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர அச்சமடைந்தனர்.
    • பழமையான சுவர் இடித்து அகற்றப்பட்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து புதிய சுவர் கட்ட நடவடிக்கை எடுத்ததால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பழமையான இந்த பள்ளியின் காம்பவுண்டு சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர அச்சமடைந்தனர்.

    சுமார் 170-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவரும் இங்கு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சுவரை இடித்து அகற்றிவிட்டு புதிய சுவர் கட்டவேண்டும் என பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். பழமையான சுவர் இடிந்துவிழும் நிலையில் இருந்ததால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், தயக்கம் காட்டி வந்தனர்.

    இந்நிலையில் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று காம்பவுண்டு சுவர் இடித்து அகற்றப்பட்டது. இதனைதொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் பொதுநிதியில் இருந்து விரைவில் புதிய சுவர் கட்டப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

    பழமையான சுவர் இடித்து அகற்றப்பட்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து புதிய சுவர் கட்ட நடவடிக்கை எடுத்ததால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பஸ் வெளித்தோற்றத்தில் புதிய ஆம்னிபஸ் போல காட்சியளித்தாலும் உள்ளே ஏறும் பயணிகளுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது.
    • வெகு தூரம் அமர்ந்து செல்லும் இருக்கைகள் சேதம் அடைந்தும் உள்ளிருக்கும் கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கம்பம் அரசு போக்குவரத்து கழக பனிமனையில் இருந்து தினந்ேதாறும் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை உடைசலான நிலையில் இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இருக்கை சேதம்அடைந்தும், கம்பிகள் துரு பிடித்தும் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது. உள்ளூர் பஸ்கள் என்றால் சில மணி நேரத்தில் பயணிகள் இதனை பொறுத்துக் கொண்டு தங்கள் இடத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் ெதாலைதூரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் இதே நிலையில் இருப்பதால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    கம்பத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் காலை 6.50க்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் வெளித்தோற்றத்தில் புதிய ஆம்னிபஸ் போல காட்சியளித்தாலும் உள்ளே ஏறும் பயணிகளுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது.

    வெகு தூரம் அமர்ந்து செல்லும் இருக்கைகள் சேதம் அடைந்தும் உள்ளிருக்கும் கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளது. தூக்கத்தில் அந்த கம்பியில் இடித்தால் பயணிகளின் தலையை இருக்கை பதம் பார்த்து விடும். இதனால் தூங்காமலேயே பயணம் செய்யும் நிலை உள்ளது. தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் இடைநில்லா பஸ்களையாவது தரமான முறையில் பராமரித்து இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சரியாக படிக்காததால் மாணவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் வெளியே சென்ற மாணவன் திடீரென மாயமானார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே எட்டப்பராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் மகன் சூர்யா (வயது13). இவர் ஜி.உசிலம்பட்டி அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் சூர்யா திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடை க்காததால் கண்டமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    ×