என் மலர்tooltip icon

    தேனி

    • மீனாட்சிபுரம் மற்றும் பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • சுமார் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் மற்றும் பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ராகவன் தலைமையில் போடி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள் பூதிப்புரம், மீனாட்சிபுரம் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    உணவு விடுதிகள் டீக்க டைகள், பெட்டிக்கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளில் மேற்கொண்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு கைப்பற்ற ப்பட்டது.

    சுமார் 1½ கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்ற ப்பட்டது. மேலும் சுமார் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

    இது மட்டுமின்றி பல்வேறு பெட்டிக்கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் தரமற்ற எண்ணையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பயன்பாட்டு காலம் முடிந்து விற்பனைக்கு தரமற்ற நிலையில் வைக்கப்பட்டி ருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.

    இதுபோன்ற பொரு ட்களை விற்ற வியாபாரி களிடம் இனியும் இது போன்று தொடர்ந்து நடந்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்து ரூ.9 ஆயிரத்து 500 வரை அபராதம் வசூலித்தனர்.

    • தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • சுமார் 30 வயது மதிக்கத்தக்க போதை வாலிபர் சேத மடைந்த சாலைகளை பார்வையிடாமல் அதிகாரிகள் சென்றுவிடுகிறார்கள் என கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கட மலை, மயிலை ஒன்றிய த்திற்குட்பட்ட சிங்கராஜ புரம், வருசநாடு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், மாண வர்களின் கற்றல்திறன், வருகை பதிவேடு பராமரிப்பு குறித்தும் ஆய்வுசெய்தார்.

    அங்கு வந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த பொதுமக்கள் கலெக்டரின் வாகனத்தை நிறுத்தி இங்கு டாஸ்மாக் கடை இருப்பதால் மாணவர்கள் மற்றும் தொழி லாளர்கள் பாதிக்கப்படு கின்றனர்.

    எனவே இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மதுமதி, செய ற்பொறியாளர் ரவிச்சந்தி ரன், ஒன்றிய ஆணை யாளர்கள் இளங்கோவன், பாலகிருஷ்ணன், பொறி யாளர்கள் ராமமூர்த்தி, நாகராஜ், பணிமேற்பா ர்வையாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க போதை வாலிபர் சேத மடைந்த சாலைகளை பார்வையிடாமல் அதிகாரி கள் சென்றுவிடுகிறார்கள். அரசு பள்ளி, பால்வாடி ஆகியவற்றை மட்டும் பார்க்காமல் சேதமடைந்த சாலைகளையும் பார்த்து மக்களிடம் அதிகாரிகள் குறைகளை கேட்கவேண்டும் என கூச்சலிட்டார்.

    உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    • கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
    • இந்த நிலையில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி சினேகா(21). கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. அப்போது இருந்தே இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    இதுகுறித்து தனது தாயிடம் போனில் தெரிவித்து அழுதுள்ளார். இந்த நிலையில் சினேகா வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விரைந்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர்.

    அங்கு அவர் இறந்துகிடந்ததை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல்விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டு ள்ளது.

    • மஉற்பத்தி செய்யப்படும் செங்கல்களை பல இடங்களில் இருப்பு வைக்க முடியாத நிலையில் பலர் கடனுக்கு செங்கலை விற்றுவிடுகின்றனர்.
    • கட்டுமான தொழிலுக்கு செங்கல் மிக முக்கியம் என்ற போதிலும் பொறியாளர்கள், காண்ட்ரா க்டர்கள் லாபம் ஈட்டினாலும் ஆலை உற்பத்தியாளர்க ளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்ைல.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டி பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட செங்கல் காள வாசல்கள் உள்ளன. குறி ப்பாக பிச்சம்பட்டி, கன்னி யபிள்ளைபட்டி, கதிர்நர சிங்கபுரம், ராஜகோபா லன்பட்டி, பாலகோம்பை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு செங்கல் காளவாசல்கள் உள்ளன.

    காளவாசலுக்கு தேவை யான வண்டல்மண் மற்றும் செம்மண் இப்பகுதியில் கிடைப்பதால் பலர் ஆர்வத்துடன் இந்த தொழிலை தொடங்கினர். ஒரு செங்கல் ரூ.7-க்கு விற்பனையாகி கொண்டி ருந்த நிலையில் தொழில் போட்டியால் தற்போது ரூ.5.50 வரை மட்டுமே விற்பனையாகிறது.

    உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை. இங்கி ருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செங்கல்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு மாத்ததிற்கு சராசரியாக 3 லட்சம் முதல் 12 லட்சம் வரை செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    ஆனால் உற்பத்தி செய்யப்படும் செங்கல்களை பல இடங்களில் இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் கடனுக்கு செங்கலை விற்றுவிடுகின்றனர். அந்த தொகையை வசூல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கட்டுமான தொழிலுக்கு செங்கல் மிக முக்கியம் என்ற போதிலும் பொறியாளர்கள், காண்ட்ரா க்டர்கள் லாபம் ஈட்டினாலும் ஆலை உற்பத்தியாளர்க ளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்ைல.

    இந்ததொழிலை நம்பி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல் உற்பத்தி அதிகரித்த போதிலும் வாகன வாடகை, தொழிலாளர்கள் சம்பளம், போக்குவரத்து செலவின ங்கள் அனைத்தும் உயர்ந்து விட்டது. ஆனாலும் காளவாசல் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்ைல என இதன் உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்

    • வருகிற 2-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்துகின்றன.
    • முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் உயர் கல்வி பயின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமை வருகிற 2-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்துகின்றன.

    இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் உயர் கல்வி பயின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். எனவே முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • இருந்தபோதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டமும் சீராக உயர்ந்தது.
    • நீர் மட்டம் இன்று காலை 121.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1321 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததால் அணையின் நீர் மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    இருந்தபோதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டமும் சீராக உயர்ந்தது. நேற்று 120.80 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 121.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1321 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணை நீர் மட்டம் 49.21 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாமல் இருந்த நிலையில் இன்று காலை 47 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.92 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 76.03 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 15, தேக்கடி 8.2, சண்முகா நதி அணை 1.2, உத்தமபாளையம் 0.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • கால்நடைகளுக்கு ஏற்படும் நோயைக் கண்டறிந்து, நோய் பரவாமல் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
    • தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்ற அனைத்து விதமான கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஏத்தக் கோவில் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

    கால்நடை பராமரிப்பு  மற்றும் வேளாண்மை ஆகிய இரு தொழில்கள் கிராமப்புறங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. மேலும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றிவருகிறது. தமிழர்களின் கலாச்சாரத்தில் கால்நடை வளர்ப்பு செல்வத்தின் குறியீடாக  திகழ்கிறது. இதனை பேணி காப்பதில் கால்நடை வளர்ப்பவர்களுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து கால்நடைகளை பாதுகாக்க பல்வேறு தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

    கால்நடைகளுக்கு ஏற்படும் நோயைக்  கண்டறிந்து, நோய் பரவாமல் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

    கால்நடைகளின் முக்கியத்துவம் கருதி நடத்தப்படும் இந்த கால்நடை சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பகுதியில் உள்ள அனைவரும் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்ற அனைத்து விதமான கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    கால்நடைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் பொழுது 1962 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்தால் கால்நடைத்துறை டாக்டர்கள் தங்களது இல்லத்திற்கே வந்து தேவையான முதலுதவிகளை செய்து, கால்நடை மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி அல்லது கால்நடை ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு சென்று தேவையான உயர் மருத்துவ சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் அதிகளவில் மாடுகள் வளர்க்கப்படுகிறது. தங்கள் மாடுகள் மூலம் கறக்கப்படும் பால்களை அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் தர முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    முகாமில் கால்நடைகளுக்கான ஆண்மை நீக்கம், அறுவை சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், ஸ்கேன் மூலம் பரிசோதனை, மலடு நீக்குதல், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கான சிறப்பு டாக்டர்கள் வருகை தந்து தங்களது கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை இங்கே தீர்த்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இளங்கன்றுகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினை நீக்குவதற்கான தாது உப்புகள் வழங்கப்படுகிறது. தங்கள் வளர்ப்புப் பிராணிகளை நோய் தாக்குதலின்றி எவ்வாறு வளர்ப்பது குறித்து உரிமையாளர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    • மாற்றுத்திறனாளி களுக்கான மாதம் ஒருமுறை நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • மாற்று த்திறனாளி கள் தங்கள் கோரிக்கை மனுவினை கொடுத்து பயன்பெறலாம்.

    தேனி:

    பெரியகுளம் வருவாய் கோட்ட த்திற்குட்பட்ட வட்டங்களில், வசிக்கும் மாற்று த்திறனாளி களுக்கான மாதம் ஒருமுறை நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை (27ந் தேதி) தேனி வட்டாட்சியர் அலுவல கத்தில் பெரியகுளம் வருவாய் கோட்டா ட்சியர் தலைமையில் நடைபெறு கிறது.

    மாற்று த்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் இந்த கூட்டத்தில் தேனி வட்டார ப்பகுதியில் வசிக்கும் மாற்று த்திறனாளி கள் தங்கள் கோரிக்கை மனுவினை கொடுத்து பயன்பெ றலாம்.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தி 2024 ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது
    • பொது மக்கள் தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவை யான விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தேனி:

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்திரவின்படி, 2024 ஜனவரி 1-ஆம் நாளை தகுதியேற்பு நாளாகக் கொண்டு, தேனி மாவட்ட த்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தி 2024 ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    இதனை முன்னிட்டு முன் திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களும் சரிபார்க்க ப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்த்தல், திருத்தல் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச் சாவடிகள் பிரித்தல்,

    இடம் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். முத ற்கட்ட பணியாக 21.07.2023-முதல் 21.08.2023 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவ ரங்களை சரிபார்க்க உள்ளனர்.

    இத்திட்டத்தினை சிறப்பாக, விரைவாக மற்றும் 100 சதவீத உண்மை யாகவும், முடிக்கும் வகை யில், பொது மக்கள் தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவை யான விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கேட்டுக்கொ ண்டுள்ளார்.

    • பஞ்சந்தாங்கி மலை யில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று வேகமாக வீசியதால் காட்டுத் தீ மளமளவென பரவி வருகிறது.
    • வனத்துறையினர் அதிநவீன எந்திரங்களை வரவழைத்து தீயை கட்டுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு வனச்சரகத்துக்கு உட்பட்டது பஞ்சந்தாங்கி மலை. இப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்கள், வன விலங்குகள் உள்ளன. கடந்த சில நாட்க ளாக ஆடி மாத காற்று அதிக வேகத்தில் வீசி வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை பஞ்சந்தாங்கி மலை யில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று வேகமாக வீசியதால் காட்டுத் தீ மளமளவென பரவி வருகிறது. நேற்று இரவு தொடங்கிய காட்டுத்தீ இன்றும் தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் ஊருக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர்.

    மேலும் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைகள் எரிந்து வருவதால் வேதனையடைந்துள்ளனர். வழக்கமாக இந்த மாதத்தில் தென் மேற்கு பருவ மழை பெய்யும். இதனால் காற்று அதிகமாக வீசினாலும் உடனுக்குடன் தீ பரவுவது கட்டுபடுத்தப்படும்.

    ஆனால் தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை அவ்வப்போது பெய்தாலும் தீயின் வேகத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு பெய்யவில்லை. இதனால் மேலும் தீ பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    வனத்துறையினர் அதிநவீன எந்திரங்களை வரவழைத்து தீயை கட்டுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முறையான பராமரிப்பு இல்லாததால் பார்த்தீனியம் செடிகள் மற்றும் புதர் மண்டி காணப்படுகிறது.
    • மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என மலை கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமை ந்துள்ளது கொட்டக்குடி கிராமம். இந்த மலை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இவர்களது முக்கிய தொழில் விவசாயமாகும். இதனால் மலை கிரா மங்களில் தங்கி தோட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான மருத்துவ வசதி இல்லாததால் குரங்கணி மற்றும் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

    மேலும் போக்குவரத்து வசதியும் இல்லாததால் சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக அரசு துணை சுகா தார மையம் கட்டப்பட்டது.

    ஆனால் பல மாதங்கள் ஆகியும் இங்கு பணிகள் தொடங்கப்படவில்லை. மேலும் முைறயான பராமரிப்பு இல்லாததால் பார்த்தீனியம் செடிகள் மற்றும் புதர் மண்டி காணப்படுகிறது.

    இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என மலை கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வடபுதுப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • 2 நாட்களாக மாவட்டத்தில் சுமார் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்ய முதற்கட்டத்தில் 259 முகாம்கள் மற்றும் 2-ம் கட்டமாக 258 முகாம்கள் என மொத்தம் 517 முகாம்கள் நடைபெற உள்ளது.

    தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் வட்டத்தி ற்குட்பட்ட 259 பகுதிகளில் முதற்கட்ட விண்ணப்பதிவு முகாம்கள் 24ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் சுமார் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பொது மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் இணைய பதிவு மேற்கொள்ளப்படும். பெறப்பட்ட விண்ணப்ப ங்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதற்கான ஒப்புதல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு குறுஞ் செய்தியாக வரும்.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ,டோ க்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் பொதுமக்கள் வருகை தந்து தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×