என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கண்ணன் கால் டாக்சி டிரைவராக உள்ளார். இவரும் மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பிரியா என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டி உள்ளனர். திருமண பேச்சு ஆரம்பித்த நேரத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு முடியும் வரை திருமணம் நடத்த வேண்டாம் என்று காதல் ஜோடி முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், ஊரடங்கு தொடர்ந்து நீடித்துக் கொண்டே வந்ததால் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
இதன்படி வீட்டின் அருகே இருந்த விநாயகர் கோவிலில் திருமணம் நடந்து உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.2000 பட்ஜெட்டில் திருமணம் முடிந்து விட்டது. இதில் பூமாலை, அர்ச்சனை பொருட்கள் உள்பட அனைத்தும் அடங்கும். பெண் வீட்டார் சார்பில் 2 பேர், ஆண் வீட்டார் சார்பில் 3 பேர் மற்றும் மணமக்கள் 2 பேர் உள்பட மொத்தம் 7 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்தே சென்று திருமணம் முடிந்த பிறகும் நடந்தே வீடு திரும்பி விட்டனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரை சேர்ந்த 8 பேர் மும்பையில் இருந்து நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்திற்கு ஒரு வாகனத்தில் வந்தனர். அப்போது அவர்களை அதிகாரிகள் மாவட்ட எல்லையில் தடுத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 41 வயதுடையவரும், அவரது 36 வயது மனைவிக்கும், இவர்களது 9 வயது மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அவர்களுடன் வந்த 43 வயதுடையவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.
மானாமதுரை:
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 23 பேர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே சாலையோர ஓட்டல் நடத்தி வந்தனர். ஊரடங்கு காரணமாக இவர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு மேற்குவங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அந்த மாநில அரசு தனியார் பஸ் மூலம் 23 பேரை தமிழகத்திற்கு அனுப்பியது. நேற்று அதிகாலை சிவகங்கை மாவட்ட எல்லைக்கு பஸ் வந்தது. அப்போது அதில் பயணம் செய்த சிவகங்கையை சேர்ந்த 7 பேர் இறக்கி விடப்பட்டனர். அவர்களை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து தனிமை முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து 16 பேருடன் அந்த பஸ் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புறப்பட்டது. பஸ்சில் இருந்தவர்கள் தாங்களும் தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவோம் என அஞ்சினர். மானாமதுரை அருகே வந்தபோது டிரைவரை கட்டாயப்படுத்தி பஸ்சை நிறுத்தினர். பின்னர் 16 பேரும் பஸ்சில் இருந்து இறங்கி தப்பினர்.
பஸ் டிரைவர் உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மானாமதுரை அருகே உள்ள திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், இடைக் காட்டூர், ராஜகம்பீரம் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி 10 பேரை பிடித்து தனிமை முகாமுக்கு அனுப்பினர். 6 பேரை தேடும் பணி நடந்து வந்தது.
மானாமதுரை அருகே 6 பேர் நிற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது 6 தொழிலாளர்களும் காரில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்றது தெரியவந்தது.
அவர்களை எச்சரித்த போலீசார் பார்த்திபனூர் அருகே உள்ள தனிமை முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி திருப்பத்தூரைச் சேர்ந்த 48 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 24 மணி நேரமும் டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் பூரண குணமடைந்தனர். படிப்படியாக அனைவரும் வீடு திரும்பினர்.
கடந்த மாதம் 19-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை அதாவது 25 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் காரைக்குடி ரெயில்வே குட்ஷெட் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கொரோனா பாதித்த பெண் சமீபத்தில் மும்பையில் இருந்து காரைக்குடி திரும்பியது தெரிய வந்துள்ளது. அவர் வசித்து வந்த பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கிய சிவகங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது32). இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக சாக்கோட்டை போலீஸ் சரகம் மணியாரம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன்(45) என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் கொடுத்துள்ளார் .நாட்கள் பல கடந்தும் சுப்பிரமணியன் ராமலிங்கத்தை அனுப்ப எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
இதுகுறித்து ராமலிங்கத்தின் புகாரின் பேரில் சுப்பிரமணியத்தின் மீது கடந்த 2013-ம்ஆண்டு சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் சுப்பிரமணியன் கோர்ட்டில் ஜாமீன் பெற்றார். அதன்பின் வழக்கு விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில் 7 வருடங்கள் கழிந்த நிலையில் நேற்று அதிகாலை சாக்கோட்டை போலீசார் சுப்பிரமணியத்தை அவரது வீட்டில் கைது செய்தனர்.
இதேபோன்று சாக்கோட்டை போலீஸ் சரகம் தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சீதாராமன், சீதா லட்சுமணன் இருவரும் இரட்டையர்கள். இவர்கள் தாய் இறந்த பிறகு அவரது நகையினை சீதாராமன் வைத்துக்கொண்டாராம். இதுகுறித்து இருவருக்கும் தகராறு முற்றவே சீதாராமன், சீதாலெட்சுமணனை அரிவாளால் வெட்டி உள்ளார்.
இதுகுறித்து கடந்த 2017-ம் ஆண்டு சாக்கோட்டை போலீசார் சீதாராமனை கைதுசெய்தனர். இந்த வழக்கில் சீதாராமன் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சீதாராமனை சாக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் உத்தரவின்பேரில் வாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகர்ப்ப குதியில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக பொது மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாக்கும் வகையிலான ஓரக் கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் பொது மக்களுக்கு ஓரக்கசாயம் மற்றும் பத்து கிராம் பாக்கெட் சுவாசப்பொடி ஆகியவற்றை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் பாதிப்பு அனைத்து இடங்களிலும் இருந்து வருவதால் இந்தக்கொடிய நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொது சுகாதாரத்துறை பல்வேறு கட்ட தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன் பொது மக்களுக்கு தேவையான வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறது.
அந்தவகையில் மேலும் பொதுமக்களுக்கு நோய் தாக்காமல் இருக்க ஒவ்வொரு வருக்கும் மிக முக்கியமான ஒன்றான நோய் எதிர்ப்புச்சக்தி ஒவ்வொருவரின் உடம்பிலும் இருக்கும் வகையில் அதற்கேற்ப உணவுகளை உட்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகின்றன.
தொடர்ந்து சித்தா மருத்துவத்துறையின் மூலம் கபசுரக்குடிநீர், நிலவேம்பு குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஓரக்கசாயம் மற்றும் சுவாசப்பொடி வழங்கப்படுகிறது.
ஓரக் கசாயம் ஒவ்வொருவரும் 10 எம்எல் வீதம் 3 நாள் பருக வேண்டும். சுவாசப்பொடியை தொண்டைப்பகுதியில் வைத்து உமிழ்நீராகப் பருக வேண்டும். உடம்பிலுள்ள சளி, இருமல் நீங்குவதுடன் ஒவ்வொருவருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வழங்கும் சித்தா மருத்துவத்துறையின் மருந்துகளை முழுமையாக பயன்படுத்தி நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கி அனைவரும் ஆரோக்கியமாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் இராசி இயற்கை உணவுகள் பயிற்சி மையம் மூலம் ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் 1000 நபர்களுக்கு வழங்கப்பட்ட ஓரக்கசாயம் மற்றும் சுவாசப் பொடியினை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, சிவகங்கை நகராட்சி ஆணையர் கார்த்திகேயன், ராசி இயற்கை உணவுகள் பயிற்சி மைய மேலாளர்கள் சரவணன், ராஜரீகா, சமூக ஆர்வலர் அயோத்தி, சிவகங்கை அரண்மனை இளைய மன்னர் மகேஷ் துரை, கூட்டுறவு விற்பனை பண்டகச்சாலை சங்கத் தலைவர் ஆனந்தன், சிவகங்கை வட்டாட்சியர் மைலாவதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






