search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவான 2 பேர் கைது

    வாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவான 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்குடி:

    இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது32). இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக சாக்கோட்டை போலீஸ் சரகம் மணியாரம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன்(45) என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் கொடுத்துள்ளார் .நாட்கள் பல கடந்தும் சுப்பிரமணியன் ராமலிங்கத்தை அனுப்ப எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

    இதுகுறித்து ராமலிங்கத்தின் புகாரின் பேரில் சுப்பிரமணியத்தின் மீது கடந்த 2013-ம்ஆண்டு சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் சுப்பிரமணியன் கோர்ட்டில் ஜாமீன் பெற்றார். அதன்பின் வழக்கு விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில் 7 வருடங்கள் கழிந்த நிலையில் நேற்று அதிகாலை சாக்கோட்டை போலீசார் சுப்பிரமணியத்தை அவரது வீட்டில் கைது செய்தனர்.

    இதேபோன்று சாக்கோட்டை போலீஸ் சரகம் தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சீதாராமன், சீதா லட்சுமணன் இருவரும் இரட்டையர்கள். இவர்கள் தாய் இறந்த பிறகு அவரது நகையினை சீதாராமன் வைத்துக்கொண்டாராம். இதுகுறித்து இருவருக்கும் தகராறு முற்றவே சீதாராமன், சீதாலெட்சுமணனை அரிவாளால் வெட்டி உள்ளார்.

    இதுகுறித்து கடந்த 2017-ம் ஆண்டு சாக்கோட்டை போலீசார் சீதாராமனை கைதுசெய்தனர். இந்த வழக்கில் சீதாராமன் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சீதாராமனை சாக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் உத்தரவின்பேரில் வாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×