என் மலர்
சிவகங்கை
சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
சிவகங்கை:
தமிழ் ஆட்சிமொழி, தமிழ் கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையின் கீழ் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் பி.சந்திரமோகன் வழிகாட்டுதலில், மாநில தொல்லியல் துறை ஆராய்ச்சி ஆலோசகர் பேராசிரியர் கே.ராஜன் மற்றும் கீழடி அகழாய்வு இயக்குனர் ஆர்.சிவானந்தம் ஆகியோர் மேற்பார்வையில் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, ஈரோடு மாவட்டம் கொடுமலை, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய 7 இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.
சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பண்டைய மக்கள் விளையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், ஓடுகளால் செய்யப்பட்ட அணிகலன்கள், மண் பாத்திரங்கள், நெசவாளர் கருவிகள், கையால் தயாரிக்கப்பட்ட ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை தொல்லியல் துறை வெளிக்கொணர்ந்து வருகிறது.
கீழடி 7-ம் கட்ட அகழாய்வில் சில தினங்களுக்கு முன்பு 3 அடுக்குகளை கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. உறை கிணற்றின் வெளிப்புறத்தில் கயிறு வடிவில் 2 டிசைன்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் மேலும் ஒரு உறை கிணறு கீழடியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உறை கிணற்றிலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கிழக்கில் இருந்து மேற்காக 58 செ.மீ. நீளமும், அதன் பெரும்பான்மையான பகுதி தெற்கு பகுதியின் உள்ளே செல்லும் வகையிலும் இருக்கிறது.
தெற்கு பகுதியில் செங்குத்தாக இது 18 செ.மீ. நீளமும் உள்ளது. அலங்காரம் செய்யப்பட்ட விளிம்பின் தடிமன் 3 செ.மீ. ஆகும். அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழியின் தென்கிழக்கு மூலையில் இந்த உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த குழியின் பிற பகுதிகளில் மண்ணில் செய்யப்பட்ட பொருட்களோ, கலைப்பொருட்களோ எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நதியின் வண்டல் மண் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி செயலர்களின் குழந்தைகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நிதியுதவி வழங்கினார்.
சிவகங்கை:
கொரோனா 2-ம் அலையின்போது சிவகங்கை மாவட்டத்தில் கல்லல் ஒன்றியம், கருங்குளம் ஊராட்சி செயலாளர் ஜெயசுதா, திருப்புவனம் ஒன்றியம், சொட்டதட்டி ஊராட்சி செயலாளர் பாக்கியராஜ், சிங்கம்புணரி ஒன்றியம் எருமப்பட்டி ஊராட்சி செயலாளர் முருகன் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களது பிள்ளைகளுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மொத்தம் ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதற்கான விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி செயலாளர்களின் குழந்தைகளுக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ரூ.6 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
பின்னர் அவர் தனது சொந்த பணத்தில் இருந்து ஊராட்சி செயலாளர்களின் 5 குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில இணைச் செயலாளர் நாகராஜன், மாநில துணைச் செயலாளர் வடிவேலன், மாவட்ட தலைவர் பாக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் ராமநாதன், மாவட்ட பொருளாளர் மாரிமுத்து மற்றும் பள்ளத்தூர் ரவி, நகர தி.மு.க. செயலாளர் துரை ஆனந்த், ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 2½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
திருப்புவனம்:
தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் திருப்புவனத்தில் உள்ள தனியார் திருமண மகாலில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மதுரை மண்டல தொழிலாளர் நலத்துறை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் அனைவரையும் வரவேற்றார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தை பொறுத்தவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய நடவடிக்கையால் செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் நாளொன்றுக்கு 2 கோடி தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் அளவிற்கு உட்கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளன. தடுப்பூசி தயாரிக்க அனுமதி கேட்டு முதல்-அமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரும் தடுப்பூசி மருந்துகளை மாவட்டம் தோறும் பிரித்து அனுப்பப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
சிவகங்கை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 2½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதத்திற்குள் 100 சதவீதம் தடுப்பூசி அனைவருக்கும் போடப்படும். எனினும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் 3 ஆயிரத்து 702 கட்டிட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.
இதில் மதுரை மண்டல தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சுப்பிரமணியன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் ராஜ்குமார், கோட்டீஸ்வரி, காரைக்குடி அப்போலோ மருத்துவமனை நிர்வாக அலுவலர் லாவண்யா, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 483 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 47 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
கீழடியில் நடந்துவரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணால் ஆன உறை கிணறு வெளிவந்துள்ளது. அதில் உள்ள நுட்பமான வடிவமைப்பை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
கீழடியில் மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மண்ணுக்குள் புதைந்திருந்த பாசிமணிகள், சிறிய, பெரிய பானைகள், பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணம் உள்பட ஏராளமான பழங்கால பொருட்கள் எடு்க்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கீழடியில் அகழாய்வில், அழகிய வேலைப்பாடுடன் கூடிய சுடுமண்ணால் ஆன உறை கிணறு தற்போது வெளிப்பட்டுள்ளது.
இந்த உறை கிணறு 3 அடுக்குகளை கொண்டதாக உள்ளது. இரும்பு சங்கிலி போன்ற நுட்பமான வடிவமைப்பு அதில் உள்ளது.
இந்த தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அங்கு வந்து ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.
பண்டைய காலத்திலேயே கீழடியில் வாழ்ந்த தமிழர்கள் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு இது போன்ற உறை கிணறுகள் முக்கிய ஆதாரமாக கிடைத்து வருகின்றன. ஆனால், 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை.
கடந்த ஆண்டு நடந்த 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது 38 அடுக்குகளை கொண்ட பெரிய உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் அருகே கொட்டகைக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே திருவுடையார்பட்டியைச் சேர்ந்தவர் சாத்தையா (வயது 63). இவரது மகள் முத்துமாரியை கீழப்பட்ட மங்கலத்தை சேர்ந்த செல்வம் திருமணம் செய்து உள்ளார். குடும்ப தகராறு காரணமாக முத்துமாரியை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார். இது தொடர்பாக முத்துமாரி திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். இதனால் போலீசார் செல்வத்தை விசாரணைக்கு அழைத்து உள்ளனர். ஆத்திரம் அடைந்த செல்வம் திருவுடையார்பட்டிக்கு வந்து சாத்தையா வீட்டு அருகே உள்ள கொட்டகைக்கு தீ வைத்து தப்பி ஓடி விட்டார். இதில் கொட்டகையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து திருப்பத்தூர் போலீசில் சாத்தையா கொடுத்த புகாரின் பேரில் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
கோவில் நிலத்தில் 12 வீடுகள், ஒரு கடை என 13 கட்டிடங்கள் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.
சிவகங்கை:
சிவகங்கை நகரில் மேலூர் ரோட்டில் உள்ள கவுரி பிள்ளையார் கோவிலுக்கு 142 ஏக்கர் நிலம் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை தனியார் பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதற்கிடையே இந்த நிலம் தொடர்பாக ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் இது கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 9 ஏக்கர் 58 சென்ட் இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து சில மாதங்களாக கட்டிடம் கட்டி வந்தார். இதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த கட்டிடங்களை எந்திரம் மூலம் இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர். மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலுக்கு சொந்தமான மற்ற இடங்களை மீட்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
கோவில் நிலத்தில் 12 வீடுகள், ஒரு கடை என 13 கட்டிடங்கள் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 13 கட்டிடங்களும் உள்ள இடம் கோவிலுக்கு சொந்தமானது என்றும், எனவே ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை அகற்றி நிலத்தை கோவில் வசம் ஒப்படைக்கவேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வி, கோவில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள் உள்பட 13 கட்டிடங்களையும் அகற்றி நிலத்தை வருகிற 15-ந்தேதிக்குள் கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கான நோட்டீசை ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள 12 வீடுகள், ஒரு கடையின் முன்பக்கத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று ஒட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மங்குஸ்தான் பழங்கள் கொடைக்கானல், கேரளா உள்ளிட்ட பகுதியில் இருந்து காரைக்குடி, பர்மா காலனி, கோட்டையூர், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காரைக்குடி:
ஒவ்வொரு நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்றவாறு அந்த நாட்டில் செடிகள், மரங்கள் வளர்கின்றன. அப்படிப்பட்ட மரங்கள் மனிதர்களுக்கு அதிக சத்துக்களை தரும் வகையில் சுவையான பழங்களை தருகிறது. அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், அதிகம் விரும்பி சாப்பிடப்படும் பழமாகவும் உள்ளது மங்குஸ்தான் பழங்கள்.
இந்த பழங்கள் கொடைக்கானல், கேரளா உள்ளிட்ட பகுதியில் இருந்து காரைக்குடி, பர்மா காலனி, கோட்டையூர், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பழம் கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பழங்கள் கொடைக்கானல், கேரளா உள்ளிட்ட குளிர் பகுதியில் அதிகஅளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பழங்களை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் வகையில் உள்ளது. உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் சராசரி எடையை பெறும். மனித உடலில் வைட்டமின் சி சத்து சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலில் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து பல்வேறு நோயில் இருந்து காக்க உதவும்.
இந்த வகையில் இந்த மங்குஸ்தான் பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகஅளவில் உள்ளதால் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இதுதவிர மூலம், நாட்பட்ட மலச்சிக்கல், குளிர்ச்சி தன்மை, இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கும் சிறந்த பலனை கொடுக்கும்.
இந்த பழங்கள் கொடைக்கானல், கேரளா உள்ளிட்ட பகுதியில் இருந்து காரைக்குடி, பர்மா காலனி, கோட்டையூர், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பழம் கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 60 ஆண்டு காலமாக இயங்கும் இந்த ஓட்டு கட்டிட நூலகம் தற்போது கொரோனாவால் மூடப்பட்டு உள்ளன. அவ்வப்போது பெய்யும் மழையால் ஓடுகளின் வழியாக கசியும் மழைநீர் அங்குள்ள புத்தகங்களை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டு கொட்டகையில் நூலகம் அமைக்கப்பட்டது. சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நூலகத்தில் சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 10 பேர் நூலகத்தில் உட்கார்ந்து படிக்கலாம்.
நூலகத்தின் வெளியே திறந்தவெளி முள்வேலி அமைக்கப்பட்ட 10 சென்ட் பரப்பளவு உண்டு. நூலகத்துக்கு வரும் வாசகர்கள் அன்றைய காலக்கட்டத்தில் மரத்தின் நிழல்களில் உட்கார்ந்து படித்தனர். கடந்த சில ஆண்டுகளாக நூலகத்தின் வெளிப்பகுதியில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டு காலமாக கொரோனா ஊரடங்கால் நூலகம் பூட்டப்பட்டு உள்ளன. இது குறித்து சமூக ஆர்வலரும், நூலக வாசகருமான பாலசுப்ரமணியம் கூறியதாவது:-

எனவே ஓட்டு கட்டிடத்தில் இயங்கும் நூலகத்தை கான்கிரீட் கட்டிடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதால் நூலகத்தையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டால் ஏராளமான பழைய புத்தகங்கள் மழைநீரில் நனைந்து சேதமாக வாய்ப்பு உள்ளது. எனவே பேரூராட்சியில் இயங்கும் நூலகத்தை கான்கிரீட் கட்டிடத்தில் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் லாட்டரி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக பூச்சியநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 62), இளையான்குடியை சேர்ந்த அப்துல் காதர் அல்ஹாப் (43), ஜாபர் அலி(60) முகம்மது மாலிக் (51.) ஆகிய 4 பேரை இளையான்குடி போலீசார் கைது செய்தனர். அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றதாக வழக்கு பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 549 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 86 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மேலும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காளையார்கோவிலில் 696 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
காளையார்கோவில்:
காளையார்கோவில் நகர் வர்த்தக சங்கம், சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து வர்த்தகர்கள், வர்த்தக பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை காளையார்கோவில் நகர் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடத்தியது. முகாமுக்கு நகர வர்த்தக சங்க தலைவர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜான்போஸ்கோ, மாவட்ட இணைச் செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 565 வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்பட 696 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. முகாம் ஏற்பாடுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர் பூமிநாதன், நகர் வர்த்தக சங்க செயலாளர் செந்தில், பொருளாளர் ஷாஜகான் மற்றும் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.