search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கம்புணரியில் ஓட்டு கட்டிடத்தில் இயங்கும் நூலகம்.
    X
    சிங்கம்புணரியில் ஓட்டு கட்டிடத்தில் இயங்கும் நூலகம்.

    60 ஆண்டு கால நூலகம் பாதுகாக்கப்படுமா?- வாசகர்கள் எதிர்பார்ப்பு

    கடந்த 60 ஆண்டு காலமாக இயங்கும் இந்த ஓட்டு கட்டிட நூலகம் தற்போது கொரோனாவால் மூடப்பட்டு உள்ளன. அவ்வப்போது பெய்யும் மழையால் ஓடுகளின் வழியாக கசியும் மழைநீர் அங்குள்ள புத்தகங்களை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டு கொட்டகையில் நூலகம் அமைக்கப்பட்டது. சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நூலகத்தில் சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 10 பேர் நூலகத்தில் உட்கார்ந்து படிக்கலாம்.

    நூலகத்தின் வெளியே திறந்தவெளி முள்வேலி அமைக்கப்பட்ட 10 சென்ட் பரப்பளவு உண்டு. நூலகத்துக்கு வரும் வாசகர்கள் அன்றைய காலக்கட்டத்தில் மரத்தின் நிழல்களில் உட்கார்ந்து படித்தனர். கடந்த சில ஆண்டுகளாக நூலகத்தின் வெளிப்பகுதியில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டு காலமாக கொரோனா ஊரடங்கால் நூலகம் பூட்டப்பட்டு உள்ளன. இது குறித்து சமூக ஆர்வலரும், நூலக வாசகருமான பாலசுப்ரமணியம் கூறியதாவது:-

    கடந்த 60 ஆண்டு காலமாக இயங்கும் இந்த ஓட்டு கட்டிட நூலகம் தற்போது கொரோனாவால் மூடப்பட்டு உள்ளன. அவ்வப்போது பெய்யும் மழையால் ஓடுகளின் வழியாக கசியும் மழைநீர் அங்குள்ள புத்தகங்களை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது.

    எனவே ஓட்டு கட்டிடத்தில் இயங்கும் நூலகத்தை கான்கிரீட் கட்டிடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதால் நூலகத்தையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டால் ஏராளமான பழைய புத்தகங்கள் மழைநீரில் நனைந்து சேதமாக வாய்ப்பு உள்ளது. எனவே பேரூராட்சியில் இயங்கும் நூலகத்தை கான்கிரீட் கட்டிடத்தில் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    Next Story
    ×