என் மலர்
சேலம்
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டு கொட்டாய் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் வயது (28), தொழிலாளி. இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கொளஞ்சியப்பன் மகள் அகிலா (22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது .
இந்தநிலையில் மதியழகன் கடந்த 2-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்த அகிலா உறவினர்களிடம் ஆத்தூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அதன்பின்னர் இது வரை வீடு திரும்பவில்லை . இதையடுத்து உறவினர்கள் அக்கம் பக்கத்ததில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் மதியழகன் ஆத்தூர் புறநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து மாயமான அகிலாவை தேடி வருகிறார்கள்.
- பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
- 5 குழந்தைகள் உட்பட 20 பேர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து தங்களது குறைகளை எழுதி மனுக்களாக அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் கல்லுக் காட்டுவளவு சூரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மற்றும் அவரது தம்பி ராஜி மற்றும் உறவினர்கள் 20 பேர் தங்களது கை குழந்தையுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அவர்கள் தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வெள்ளையன் போலீசாரிடம் கூறியதாவது:-
சூரப்பள்ளி பகுதியில் எங்களுக்கு சொந்தமான 54 சென்ட் பூர்வீக சொத்து உள்ளது. இதனை கடந்த 1999-ம் ஆண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் நாங்கள் சமமாக பாகப்பிரிவினை செய்து கொண்டபோது நிலம் அளவு சரியாக இருந்தது.
இந்நிலையில் சிலர் எங்களது நிலத்தில் சுமார் 8 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து கொண்டனர். இது குறித்து கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும், அடித்தும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகினோம். என்ன செய்வது என்று தெரியாமல் வேறு வழியின்றி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளவே இங்கு வந்தோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு 8 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார், தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 20 பேரையும் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 குழந்தைகள் உட்பட 20 பேர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமசை 37ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
- தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி இறந்ததையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 5-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட உம்மன்சாண்டியின் மகனான சாண்டி உம்மன் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமசை 37ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
53 ஆண்டுகளாக புதுப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வாக உம்மன்சாண்டி இருந்தார். இந்நிலையில் தற்போது நடந்த இடைத் தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றிருக்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சாண்டி உம்மன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். முன்னதாக அவர் இன்று காலை சட்டசபை சபாநாயகர் ஷம்சீரை சந்தித்தார்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சற்று குறைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
- அணைக்கும் வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
சேலம்:
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு மற்றும் இரு மாநில எல்லை பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய உபரிநீரை முற்றிலுமாக நிறுத்திவிட்டது.
இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சற்று குறைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,479 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,550 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 2,266 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கும் வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 46.55 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 46.54 அடியானது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 45.90 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 15.32 டி.எம்.சி.யாக உள்ளது.
- ஏற்காட்டில் தொடர் மழையினால் கிளியூர் நீர் வீழ்ச்சியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
- தொடர் மழையினால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது.
சேலம்:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை மழை பொழிவு காலமாகும். சேலம் மாவட்டத்தில் 2 பருவமழைகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பெய்து வந்தது.
நடப்பாண்டு சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று இரவு 8 மணி அளவில் சாரல் மழை கொட்டியது. சேலம், செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலைம், ஜங்சன், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கோரிமேடு, சீலநாயக்கன்பட்டி என மாநகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. அதன் பிறகு விட்டு விட்டு லேசான மழை தூரல் காணப்பட்டது.
இதேப்போல் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு பரலாக மழை பெய்தது. எடப்பாடி, சங்ககரி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதில் அதிகபட்சமாக எடப்பாடி பகுதியில் 32 மி.மீட்டர் மழை பதிவானது.
தொடர் மழையினால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. ஏற்கனவே ஏரிகள் மிகவும் வறண்ட நிலையில் இருந்ததால் ஏரி, குளங்களில் மிக குறைந்த அளவே தண்ணீர் காணப்பட்டது. தற்போது இந்த மழையினால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.
ஏற்காட்டில் நேற்று இரவு பெய்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஏற்காட்டில் தொடர் மழையினால் கிளியூர் நீர் வீழ்ச்சியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது. இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.
மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையையொட்டி காலை முதலே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். அவர்கள் ஏற்காட்டில் நிலவி வரும் இதமான சீதோஷ்ண நிலையை ரசித்தபடி சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :-
எடப்பாடி-32 , சங்ககிரி-27, சேலம்-12.90, ஏற்காடு-10.60. பெத்தநாயக்கன்பாளையம்-9, கெங்கவல்லி-6, வீரகனூர்-6, ஆத்தூர்-5, கரியகோவில்-2.
மாவட்டம் முழுவதும் 110.50 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் பல இடங்களில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலைகளில் கழிவுநீர் ஓடியது.
கொல்லிமலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதைகளில் ஆங்காங்கே உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொல்லிமலை அடிவார பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இதேபோல் வெண்ணந்தூர் பகுதியில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் 6 மணிக்கு மழை பெய்ய தொடங்கி 7 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளிலும், வயல்வெளிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் குளிர்ந்த காற்று வீசியது.
ராசிபுரம் பகுதியில் லேசான மழையும், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இரவில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழையும் பெய்தது. மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதேபோல் திம்மநாயக்கன்பட்டி, ஆயில்பட்டி, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை முதல் மாலை கடும் வெயிலால் பொதுமக்கள் வாடினர். பின்னர் மாலை சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
மங்களபுரம்-33.20 மி.மீ, புதுச்சத்திரம்-25.30, ராசிபுரம்-26.20, சேந்தமங்கலம்-4, கொல்லிமலை செம்மேடு-27.
ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 115.70 மில்லி மீட்டர் மழை பதிவானது.
- சந்துரு (வயது 32). இவர் குகையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
- நகைக் கடை உரிமையாளருக்கு போன் செய்து கடை ஊழியர் சந்திரசேகரனை விடுவிக்க ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டினர்.
சேலம்:
குகை எஸ்.எம்.சி. காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் என்ற சந்துரு (வயது 32). இவர் குகையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
பணம் கேட்டு கடத்தல்
கடந்த 7-ந்தேதி குகையை சேர்ந்த விமல்குமார் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு செவ்வாய்ப் பேட்டைக்கு வருமாறு அவரை அைழத்தார். அதன்படி சந்திரசேகரன் அங்கு சென்றார். அப்போது அவரை 6 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு கடத்திச் சென்றது.
இதையடுத்து கடத்தல் கும்பல் நகைக் கடை உரிமையாளருக்கு போன் செய்து கடை ஊழியர் சந்திரசேகரனை விடுவிக்க ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டினர். இது குறித்து அவர் செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்திரசேகரனை மீட்டனர். அப்போது கடத்தல் கும்பலை சேர்ந்த விமல்குமார், மாரியப்பன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
பிரபல ரவுடி கைது
மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய விக்னேஷ், மாதையன், இளையராஜா மற்றும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனி பகுதியை சேர்ந்த இளையராஜா (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் உள்ளதும், பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது.
கைதான ரவுடி இளையராஜாவை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
- இமானுவேல் சேகரனாருக்கு நினை வஞ்சலி செலுத்தவுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
- சேலம் மாநகர போலீசில் இருந்து துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், உதயகுமார், 4இன்ஸ்பெக்டர்கள், 230 போலீசார், ராமநாத புரத்திற்கு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.
சேலம்:
இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (11-ந் தேதி) அனுசரிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பி னரும் வந்து, இமானுவேல் சேகரனாருக்கு நினை வஞ்சலி செலுத்தவுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
சேலம்
சேலம் மாநகர போலீசில் இருந்து துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், உதயகுமார், 4இன்ஸ்பெக்டர்கள், 230 போலீசார், ராமநாத புரத்திற்கு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். இதேபோல், சேலம் மாவட்ட போலீசில் இருந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் அமலஎட்வின், சண்முகம், 7 இன்ஸ்பெக் டர்கள், 300 போலீசார், குமாராசாமிபட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
ராமநாதபுரம், பரமக்குடி பகுதியில் சேலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசாரும் சென்றுள்ளனர். அவர்கள் வாகன போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
- வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்திக்கான பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
- ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தியானது ரூ.6,909 முதல் ரூ.7,399 வரை விலை போனது.
எடப்பாடி:
எடப்பாடி- நெடுங்குளம் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்திக்கான பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 1161 பருத்தி மூட்டைகள் ரூபாய் 29 லட்சத்து 54 ஆயிரத்து 29-க்கு விற்பனையானது. ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தியானது ரூ.6,909 முதல் ரூ.7,399 வரை விலை போனது. கோவை, ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த பருத்தி வியாபாரிகள், சுமார் 410 குவிண்டால் அளவுள்ள பருத்தியினை கொள்முதல் செய்தனர்.
- ராமசாமி. விவசாயி. இவருடைய மனைவி அத்தாயம்மாள் (வயது 65). கணவன் - மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வந்தனர்.
- அதிகாலை வீட்டின் முன்பு படுத்திருந்த அத்தாயம்மாளை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்ம நபர்கள் கொலை செய்தனர்.
நங்கவள்ளி:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஏழுபரணைகாடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவருடைய மனைவி அத்தாயம்மாள் (வயது 65). கணவன் - மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வந்தனர்.
கொலை
கடந்த 7-ந்தேதி அதிகாலை வீட்டின் முன்பு படுத்திருந்த அத்தாயம்மாளை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்ம நபர்கள் கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடும், வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.1.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த கொடூர கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு, மர்ம கும்பலை விரைந்து பிடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் அத்தாயம்மாள் கணவர் ராமசாமி மற்றும் அக்கம், பக்கத்தில் குடியிருக்கும் மக்களிடம் இது கொலை பற்றி விசாரணை நடத்தினார்.
50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
இந்த கொலை குறித்து துப்பு துலக்க மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மரிய முத்து (மேட்டூர்), ராஜா (சங்ககிரி), சங்கீதா (ஓமலூர்), ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மேட்டூர் சுப்பிரமணி, கொளத்தூர் தேவராஜ், மேச்சேரி சண்முகம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
கொலையை யார் செய்தார்கள்? என இதுவரையிலும் தெரியாமல் உள்ளது. இதனால் ஏழுபரணைகாடு பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள், மேட்டூர், கொளத்தூர் பகுதிகளில் ெகாலை, கொள்ளையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள், காட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள், ராமசாமிக்கு சொந்தமான ேதாட்டத்தில் வேலை செய்பவர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலை நடந்த இடத்தில் அருகே உள்ள சாலைகளில் சென்று வந்த வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து தகராறு
இதனிடையே உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது மகன் மற்றும் மகளுக்கு சொத்தை பிரித்துக் கொடுப்பதில் அத்தாயம்மாளுக்கும், அவருடைய கணவர் ராமசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிய வந்துள்ளது.
இதனால் இந்த கொலையில் அவர்க ளுடைய உறவினர்கள் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்ற கோணத்திலும் இந்த கொலைக்கு கூலிப்படைக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சைபர்கிரைம் உதவியையும் தனிப்படை போலீசார் நாடி உள்ளனர். செல்போனில் பதிவான அழைப்புகளை வைத்து சைபர் கிரைம் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உளவுப்பிரிவு
மேலும் எஸ்.பி.சி.ஐ.டி., ஓ.ஐ.சி.யூ, போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு உள்ளிட்ட உளவு பிரிவு போலீசாரும் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு வயதான தம்பதியிடம் பணம் இருப்பதை தெரிந்து யாராவது அவர்களிடம் உள்ள பணத்தை கொள்ளை யடித்து செல்லும் நோக்கத்தில் கொலையை செய்துள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
- ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்ட அளவில் 2433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
- இதற்காக மொத்தம் 122 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
சேலம்:
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 33 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வு சேலத்தில் 7 மையங்களில் நடைபெறுகின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்ட அளவில் 2433 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக மொத்தம் 122 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதேபோன்று யூ.பி.எஸ்.சி உதவித்தொகை முதல் நிலை தேர்வு சேலம் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெறுகின்றன. இந்த தேர்வில் பங்கேற்க 2175 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஓ.எம்.ஆர். வினாத்தாள் மூலம் நடைபெறும் இந்த 2 தேர்வுகளிலும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி தேர்வு அறைக்குள் வரவேண்டும். தேர்வு எழுதும் போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் சுந்தரம் வரவேற்றார்.
- திருமனுார் ஊராட்சி மன்ற தலைவர் கே.காளியப்பன் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் சுந்தரம் வரவேற்றார். மருத்துவ அலுவலர் தா.சிமி தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் முன்னிலையில், திருமனுார் ஊராட்சி மன்ற தலைவர் கே.காளியப்பன் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். சேலம்அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் ரவீந்திரன், ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிசாமி, திருமனூர் அரிமா சங்க பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டனர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
- வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
- மர்ம நபர் ஒருவர் பெண் குரலில் பேசி, தான் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் இருப்ப தாகவும், தன்னை வந்து சந்திக்கும்படியும் கூறியுள்ளார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி சந்தைப் பேட்டை அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு சம்பவத்தன்று இரவு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பெண் குரலில் பேசி, தான் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் இருப்ப தாகவும், தன்னை வந்து சந்திக்கும்படியும் கூறியுள்ளார்.
செல்போன் பறிப்பு
அதை உண்மை என நம்பிய அந்த வாலிபர் சம்பந்தப்பட்ட நபர் சொன்ன இடத்திற்கு சென்ற போது அங்கு இருளில் மறைந்திருந்த மேலும் 2 பேர் ஒன்று சேர்ந்து வாலிபரை கல்லால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த வெள்ளி நகைகளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த வாலிபர் அவ்வழியாக வந்த வாகனத்தில் உதவி கேட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணை யில் வாலிபரை தாக்கி, அவரிடமிருந்து நகை மற்றும் செல்போனை பறித்து சென்றதும், எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (22), திருச்சி, காந்தி பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் (21) மேலும் 17வயது சிறுவன் ஆகியோர் என்பதும் அவர்களில் 17 வயது சிறுவன் தான் வாலிபரை செல்போனில் பேசி வரவழைத்து நகை, செல்போனை பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






