என் மலர்
நீங்கள் தேடியது "கட்டையால் கிருஷ்ணமூர்த்தியை"
- கிருஷ்ணமூர்த்தி (40), பள்ளப்பட்டியை சேர்ந்தவர் பிரபு (29) இருவரும் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர்.
- திருடி வந்த தங்க மோதிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை விற்ற பணத்தை பங்கு பிரித்தனர்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி களர்காட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (40), பள்ளப்பட்டியை சேர்ந்தவர் பிரபு (29) இருவரும் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர்.
பங்கு
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நெல்லைக்கு வேலைக்கு சென்ற அவர்கள் அங்கு தங்க மோதிரம், வெள்ளி பொருட்களை திருடிவிட்டு சேலம் வந்தனர். இருவரும் நேற்று புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டு 5 ரோட்டில் உள்ள அர்த்தநாரி கவுண்டர் தெரு பகுதியில் உள்ள முட்புதரில் திருடி வந்த தங்க மோதிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை விற்ற பணத்தை பங்கு பிரித்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போதை தலைக்கேறிய நிலையில் பிரபு, கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்த பணத்தை கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை, பிரபு கட்டையால் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் பிரபுவை கைது செய்தனர். தொடர்ந்து பிரபு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
2 பேரும் பல்வேறு பகுதிகளுக்கு ஒன்றாக வேலைக்கு செல்வோம், இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருநெல்வேலிக்கு வேலைக்கு சென்றோம்.
அங்கு ஒரு வீட்டில் வேலை செய்த போது திருடிய பொருட்களை சேலத்துக்கு கொண்டு வந்தோம் . அதனை விற்று சரியாக பங்கு தராததால் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டேன். இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து நான் கட்டையால் கிருஷ்ணமூர்த்தியை தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் இன்று சிறையில் அடைக்கிறார்கள்.






