என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உர மூட்டைகள்"

    • தருமபுரி ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் மூலம் 422 டன் யூரியா, 437 டன் டி.ஏ.பி. மற்றும் 446 டன் காம்ப்ளக்ஸ் என மொத்தம் 1,305 டன் உர மூட்டைகள் வந்தது.
    • விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரை யின்படி பயிருக்கு தேவை யான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் ரசீதுபெற்று பயன் பெறலாம்.

    தருமபுரி,

    தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து தருமபுரி ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் மூலம் 422 டன் யூரியா, 437 டன் டி.ஏ.பி. மற்றும் 446 டன் காம்ப்ளக்ஸ் என மொத்தம் 1,305 டன் உர மூட்டைகள் வந்தது.

    இந்த உரத்தை தருமபுரி மாவட்டத்தில் உள்ள உரக் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியை வேளாண்மை உதவி இயக்குனர் தேன் மொழி ஆய்வு மேற்கொண் டார்.

    ஆய்வின்போது தருமபுரி ஸ்பிக் விற்பனை அலுவலர் அர்சுணன், ஈஸ்வரன் மற்றும் மொத்த விற்பனை யாளர் பார்த்திபன் ஆகி யோர் உடன் இருந்தனர்.

    இதுகுறி்த்து வேளாண் இணை இயக்குனர் விஜயா கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கு 2955 டன் யூரியா, 2282 டன் டி.ஏ.பி மற்றும் 1373 டன் பொட்டாஷ், 7612 டன் காம்ப்ளக்ஸ், 397 டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவ சாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரை யின்படி பயிருக்கு தேவை யான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் ரசீதுபெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து 1320 மெ.டன் கிரிப்கோ யூரியா உர மூட்டைகள் ரெயில் மூலம் செவ்வாய்பேட்டை ரெயில்வே கூட்ஸ் செட்டிற்கு வரப்பெற்றது.
    • இந்த யூரியா சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    சேலம்:

    குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து 1320 மெ.டன் கிரிப்கோ யூரியா உர மூட்டைகள் ரெயில் மூலம் செவ்வாய்பேட்டை ரெயில்வே கூட்ஸ் செட்டிற்கு வரப்பெற்றது.

    இந்த யூரியா சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 800 மெ.டன் யூரியா வழங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 1587 மெ.டன் யூரியாவும், பொட்டாஷ் 544 மெ.டன், டி.ஏ.பி உரம் 890 மெ.டன், காம்ப்ளக்ஸ் உரம் 1591 மெ.டன் ஆக மொத்தம் 4612 மெ.டன் உரம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தற்போது போதுமான அளவு இருப்பு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உரத்தினை பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×