ஆவணி மாத அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.68.46 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

இன்று வியாழக்கிழமை ஆவணி மாத அமாவாசை ஆகும். இதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்கள் மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து படையலிட்டு சமைப்ப தற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.
ஆவணி மாத அமாவாசையையொட்டி  உழவர் சந்தைகளில் ரூ.68.46 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
Published on

அன்னதானப்பட்டி:

சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும்

மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டை யாம்பட்டி ஆகிய 11 இடங்க ளில் உழவர் சந்தைகள் உள்ளன.

அமாவாசை

இன்று வியாழக்கிழமை ஆவணி மாத அமாவாசை ஆகும். இதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள் மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து படையலிட்டு சமைப்ப தற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.

பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகை கள், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் விற்பனை ஆனது. இதேபோல் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

221.916 மெட்ரிக் டன் காய்கறிகள்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 920 விவசாயிகள் 619 வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்கள், பூக்களின் மொத்த வரத்து 221.916 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 53,565

நுகர்வோர் வாங்கிச் சென்ற னர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் 68 லட்சத்து 46 ஆயிரத்து 96 ரூபாய்க்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com