search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில்டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு 260 படுக்கைகளுடன் தனி வார்டு
    X

    சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக கொசு வலையுடன் தனி படுக்கைகள் தயார் நிலையில் உள்ள காட்சி. 

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில்டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு 260 படுக்கைகளுடன் தனி வார்டு

    • தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து காய்ச்சல் சளித்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து காய்ச்சல் சளித்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுச்சேரியில் நேற்று டெங்கு பாதிப்புக்கு 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இதை அடுத்து தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் டெங்கு காய்ச்சல் நல்ல தண்ணீரில் பரவும் என்பதால் தண்ணீரை மூடி வைத்து சுத்தமாக பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு சிறப்பு முகாம் நடத்தவும் அமைச்சர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

    அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு பாதித்தவர்கள் சிகிச்சை பெற படுக்கைகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதில் சிலருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு அதிக அளவில் இல்லை. இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 260 படுக்கைகள் நேற்று முதல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதித்தவர்களுக்கு அங்கு அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாவட்டம் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தண்ணீர் தேங்குவதை தடுக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Next Story
    ×