என் மலர்tooltip icon

    சேலம்

    • கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 166 கன அடியாக இருந்தது.
    • கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.

    இதையொட்டி காவிரி மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபடி தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் கர்நாடகா தண்ணீர் திறக்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகளிடையே எழுந்தது.

    ஆனால் கர்நாடக அரசு முறைப்படி 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கவில்லை. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி திறந்து விட வேண்டும் என கூறியும் தண்ணீர் திறந்து விடவில்லை. தற்போது 2-வது முறையாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி உத்தரவிட்டும் கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை.

    இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 6 ஆயிரத்து 16 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 2 ஆயிரத்து 674 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 97.08 அடியாக உள்ளது.

    கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 166 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று இந்த அணையில் இருந்து 1,663 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 75.97 அடியாக உள்ளது.

    2 அணைகளில் இருந்தும் நேற்று தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 834 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 4 ஆயிரத்து 674 கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரித்து கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது.

    இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதியான தம்மம்பட்டியில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது.
    • மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதியான தம்மம்பட்டியில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    சேலம் மாநகரில் இடி, மின்னலுடன் நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் பெய்த திடீர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியவர்கள் மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு திரும்பினர்.

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 38 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகரில் 14.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 52.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய உரிய தண்ணீரை திறந்து விடாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை மேட்டூர் அணைக்கு கைகொடுத்து வருகிறது. பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 844 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 2 ஆயிரத்து 938 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 40.38 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 39.75 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் மேலும் சரிந்து 39.13 அடியானது.

    நீர் திறப்பு தொடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • மூக்கனேரி யில்‌ கரைக்க திட்டமிட்டுள்ள வர்கள்‌ நாளை நண்பகல்‌ 12 மணிக்குள்‌ கொண்டு சென்று கரைத்திடல்‌ வேண்டும்‌.
    • விநாயகர்‌ சிலை கரைத்தல்‌ சம்மந்தமான பாதுகாப்பு பணிக்கு ஊர்க்காவல்‌ படையினர்‌ உட்பட மொத்தம்‌ 1232 காவலர்கள்‌ ஈடுபட உள்ளனர்‌.

    சேலம்:

    சேலம் மாநகரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (20-ந் தேதி) காலை 10 மணிக்குள் சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து எடுத்துச் சென்று, திட்டமிட்ட நீர்நிலைகளில் கரைத்திடல் வேண்டும்.

    இவற்றுள் மூக்கனேரி யில் கரைக்க திட்டமிட்டுள்ள வர்கள் நாளை நண்பகல் 12 மணிக்குள் கொண்டு சென்று கரைத்திடல் வேண்டும்.

    இந்து அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை காலை 11 மணிக்குள் சம்மந்தப்பட்ட பகுதிகளிலிருந்து எடுத்து, ஊர்வலம் புறப்படும் இடமான எல்லை பிடாரியம்மன் கோவில் அருகில் கொண்டு வந்து உரிய வழிமுறைகளைப் பின்பற்றி மாலை 6 மணிக்குள் மூக்கனேரியில் கரைத்திடல் வேண்டும்.

    மேற்படி விநாயகர் சிலை கரைத்தல் சம்மந்தமான பாதுகாப்பு பணிக்கு ஊர்க்காவல் படையினர் உட்பட மொத்தம் 1232 காவலர்கள் ஈடுபட உள்ளனர்.

    சேலம் மாநகரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலப் பாதையான எல்லை பிடாரியம்மன் கோவில் முதல் மூக்கனேரி வரையிலான சாலையில் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்தில் நாளை மாற்றம் செய்யப்படுகின்றது.

    மாற்று வழிப்பாதை விவரம்

    ஊர்வலப்பாதை சுந்தர் லாட்ஜ் முதல் அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மாற்றுபாதை அண்ணா பூங்கா, 4 ரோடு, ராமகிருஷ்ணா ரோடு மற்றும் அஸ்தம்பட்டி. வழியாக போக்குவரத்து மாற்றபட்டுள்ளது. இதேபோல் அஸ்தம்பட்டி முதல் மூக்கனேரி வரையான ஊர்வலப்பாதை மாற்றாக அஸ்தம்பட்டி, கலெக்டர் பங்களா, ஐயந்திருமாளிகை, மற்றும் கன்னங்குறிச்சி வழியாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு மாநகர போலீஸ் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிச்சிபாளையத்திற்கு செல்ல இந்த சாலை தான் பிரதான சாலையாக உள்ளது.
    • 5 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான கருவாட்டு பாலம் அருகில் சுமார் 10 மீட்டர் தூரத்திறகு தார் சாலை போடப்படாமல் கடந்த 5 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிச்சிபாளையத்திற்கு செல்ல இந்த சாலை தான் பிரதான சாலையாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் மழைநீர் தேங்கி நிற்கும் குழியில் நிலைத்தடுமாறி பலர் கீழே விழுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கருவாட்டு பாலம் அருகில் 10 மீட்டர் மட்டும் சாலை போடாமல் விட்டுள்ளனர்.

    குண்டும் குழியுமாக காணப்படும் இந்த சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடங்கிறது. இங்கு மட்டும் ஏன் சாலை போடவில்லை என்று தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
    • விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் கடந்த 18-ந் தேதி முதல் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    சேலம்:

    தேர்தல் வாக்குறுதியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    அதன்படி கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    இந்த நிலையில் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த சுமார் 56 லட்சம் பெண்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் கடந்த 18-ந் தேதி முதல் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் இ-சேவை மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்காத பெண்கள் இன்று முதல் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்ய ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அப்போது வட்டாச்சியர் அலுவலகத்தின் இ-சேவை முடங்கியது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    முற்றுகை

    தொடர்ந்து அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் பெண்கள் தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிட்ம அதிகாரிகள் கூறும்போது, இ-சேவை முடங்கியதால் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. இது சரியானதும் அனைவரும் காத்திருந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தனர்.

      சேலம்:

      சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூலக்கடை பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் ஏதும் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

      இதையடுத்து மத்திய நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நல்லுகாரர் வீதி முதல் மூலக்கடை வரை கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் இப்பணிகள் முழுமை பெறுவதற்கு முன்னதாகவே பணிகள் நிறைவு பெற்றதாக கூறி கல்வெட்டு ஒன்றை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது, கழிவுநீர் முறையாக செல்ல வழி இல்லாததால் கழிவு நீர் முழுவதும் சாலையில் தேங்குவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சல், மலேரியா, டெங்கு, தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

      இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுரோட்டில் இருந்து முத்துநாயக்கன்பட்டி செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

      • சம்ப வத்தன்று மதியம் ஜோதி துணி துவைத்து விட்டு துணியை அங்கு வழக்கம் போல் காய வைக்கும் கம்பியில் போட்டுள்ளார்.
      • அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்து ள்ளார்.

      தாளவாடி:

      தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (50) கூலித்தொழிலாளி. இவரது மகள் ஜோதி (26). இவருக்கும் கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டம் எம்சள்ளி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (33) என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

      இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தில் தனது தந்தை வீட்டில் 8 மாதமாக குழந்தையுடன் ஜோதி வசித்து வந்தார்.

      இந்நிலையில் சம்ப வத்தன்று மதியம் ஜோதி துணி துவைத்து விட்டு துணியை அங்கு வழக்கம் போல் காய வைக்கும் கம்பியில் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்து ள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

      அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே ஜோதி இறந்து விட்டதாக தெரி வித்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

      • வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 8 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்து பிரசாதம் படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
      • முன்னதாக ஏற்காடு செல்வ விநாயகர் கோவில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

      ஏற்காடு:

      சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 8 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்து பிரசாதம் படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. முன்னதாக ஏற்காடு செல்வ விநாயகர் கோவில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல ஏற்காடு லாங்கில்பேட்டை முத்துமாரியம்மன் கோவில், ஜெரினாகாடு பெரியமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

      • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
      • அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

      சேலம்:

      சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

      கன மழை

      குறிப்பாக மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கெங்கவல்லி, மேட்டூர், ஆனைமடுவு, தம்மம்பட்டி, தலைவாசல் உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

      சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வயல்வெளிகள் உள்பட எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. தொடர் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளர்ந்து வருவதால் விவாசயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      சேலம், ஏற்காட்டில் சாரல்

      சேலம் மாநகரில் நேற்று சாரல் மழை பெய்தது. இந்த மழையால் மாநகரில் குளிர்ந்த காற்று வீசியது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டில் நேற்று மாலையும் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் முக்கிய பகுதிகளில் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

      மாவட்டத்தில் அதிக பட்சமாக கெங்கவல்லியில் 25 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேட்டூர் 21.6, ஆனைமடுவு 20, தம்மம்பட்டி 15, தலைவாசல் 12, வீரகனூர் 9, சேலம் 5.3, ஓமலூர் 5, காடையாம்பட்டி 5, ஏற்காடு 4.4, கரியகோவில் 4, ஆத்தூர் 4, எடப்பாடி 3, சங்ககிரி 2.4, பெத்தநாயக்கன் பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 136.7 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.   

      • அனல் மின் நிலையத்திற்கு வரும் லாரிகள் பவானி செல்லும் சாலையில் 4 ரோடு பேருந்து நிறுத்தம் முதல் மாதையன்குட்டை வரை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
      • இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது.

      மேட்டூர்:

      மேட்டூரில் அனல் மின் நிலைய தொழிற்சாலையில் நிலக்கரி எரிப்பதன் மூலம் வெளியேறும் சாம்பல் பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அனல் மின் நிலையத்திற்கு வரும் லாரிகள் பவானி செல்லும் சாலையில் 4 ரோடு பேருந்து நிறுத்தம் முதல் மாதையன்குட்டை வரை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இங்கு லாரி பழுது நீக்கும் பட்டறைகளும், உணவகங்களும் உள்ளதால் சாலையோரத்தில் ஓட்டுனர்கள் வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர் . இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது.

      இப்பகுதியில் அரசு தொழில் பயிற்சி நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். விபத்து ஏற்படும் போது மட்டும் லாரிகள் மீது அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மற்ற நேரங்களில் வாகன தணிக்கை என்ற பெயரில் அபராதம் விதிப்பதிலேயே போலீசார் குறியாக செயல்படுகின்றனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாலையோரம் கனரக வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

      • சிலை பாதுகாப்பு பணியில் இருந்த விழாக்குழு இளைஞர்கள் உணவு சாப்பிடுவதற்காக சென்றிருந்த வேளையில் மர்மநபர்கள் சிலையை தூக்கிச் சென்றனர்.
      • வாழப்பாடியில் நள்ளிரவில் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      வாழப்பாடி:

      சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சடையப்பர் தெருவில் பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் குணா என்கிற குணசேகரன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை விநாயகர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

      இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் சிலை பாதுகாப்பு பணியில் இருந்த விழாக்குழு இளைஞர்கள் உணவு சாப்பிடுவதற்காக சென்றிருந்த வேளையில் அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் சிலர் விநாயகர் சிலையை தூக்கிச் சென்றனர். பின்னர் அதனை சாலையில் போட்டு உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

      இதுகுறித்து தகவல் பரவியதால் அப்பகுதியில் பா.ஜ.க. தொண்டர்களும் விழாக் குழுவினரும் குவிந்தனர். வாழப்பாடி போலீசாரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். இன்ஸ்பெக்டர் உமா சங்கர் தலைமையிலான போலீசார் விநாயகர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

      வாழப்பாடியில் நள்ளிரவில் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      ×