என் மலர்
நீங்கள் தேடியது "Plastic covers"
- காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல்
- காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.
மேட்டூர்
மேட்டூர் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஓட்டல்கள், பாஸ்ட்புட் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மேட்டூரில் உள்ள பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, தூக்கனாம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல், பாஸ்ட்புட் கடை, ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் காலாவதியான உணவு பொருட்கள், கெட்டுப் போன மீன், கோழி இறைச்சி, தடை செய்யபட்ட பாலிதீன் பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.
- 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு.
- தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
14 பொருட்களுக்கு தடை விதித்து 2018ல் உத்தரவிட்ட நிலையில், உணவுப் பொருட்களை அடைக்கும் கவர்களுக்கு 2020ல் தடை விதித்ததையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அதில், " பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை" என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "அன்றாட உணவுப் பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், அதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக" அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- வழக்கம்போல் பிளாஸ்டிக் கவர்கள் புழங்குகின்றன.
- மக்கள் மனது வைத்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கலாம்.
திருப்பூர்:
சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கவர்கள், பாலிதீன் பொருட்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு ஜூலை 1 முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.ஆனால் தடை உத்தரவை மீறி, திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவை தடையின்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முந்தைய ஆட்சிக்காலங்களில் இதுபோன்ற தடை உத்தரவுகள் பலமுறை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை பெயரளவுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டன.
தற்போது வழக்கம்போல் பிளாஸ்டிக் கவர்கள் புழங்குகின்றன.கடந்த ஓராண்டுக்கு முன் தடை உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டபோது பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இனி கிடைக்காது என்ற முடிவுக்கு வந்த பொதுமக்களும், துணி பைகளுக்கு மாறினர். இதனால் துணிப்பைகளின் பயன்பாடு அதிகரித்து, ஜவுளி உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது காலமே நீடித்தது. மீண்டும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது.
மக்கள் மனது வைத்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கலாம். தடை உத்தரவை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள், இவற்றை கண்காணித்து பிளாஸ்டிக் பைகளை அழிப்பதுடன் மொத்த வியாபாரிகளை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






