மேட்டூரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல்காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.
மேட்டூரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
Published on

மேட்டூர்

மேட்டூர் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஓட்டல்கள், பாஸ்ட்புட் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மேட்டூரில் உள்ள பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, தூக்கனாம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல், பாஸ்ட்புட் கடை, ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் காலாவதியான உணவு பொருட்கள், கெட்டுப் போன மீன், கோழி இறைச்சி, தடை செய்யபட்ட பாலிதீன் பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com