என் மலர்
நீங்கள் தேடியது "ஏற்காடு சிறுவர் பூங்கா"
- ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது.
- இரவு 11 மணியில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கன மழையாக கொட்டியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
குறிப்பாக சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதியான மேட்டூர், ஏற்காடு, சங்ககிரி, ஓமலூர், எடப்பாடி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 12 மணிக்கு தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது. பின்னர் விடிய விடிய மழை தூறலாக நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 7 மணிக்கு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது.
இரவு 11 மணியில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கன மழையாக கொட்டியது. இதனால் ஏற்காட்டில் உள்ள சிறுவர் பூங்காவில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளதால் சிறுவர்கள் விளையாட முடியாமல் தவித்து வருகிறார்கள். ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் கன மழையால் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மழை மற்றும் குளிர் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 47.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காட்டில் 17.4, சங்ககிரியில் 17.10, ஓமலூரில் 15, எடப்பாடி 14.4, காடையாம்பட்டி 9 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலை மாவட்டம் முழுவதும் வெயில் அடித்தபடி இருந்தது.






