என் மலர்
நீங்கள் தேடியது "salemdistrict:உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி Food Safety Department officials are in action"
- கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அசைவ ஓட்டல்களில் ஆய்வு
- சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 40 கிலோ சிக்கன், 5 கிலோ மீன், 2 கிலோ மட்டன், 3 கிலோ நண்டு, இறால் என மொத்தம் 52 கிலோ பறிமுதல்
சங்ககிரி
நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட மாணவி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அசைவ ஓட்டல்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஓட்டல்களில் ஆய்வு
அந்த வகையில் சங்ககிரி உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் தலைமையில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சங்ககிரி புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், பச்சகாடு, குப்பனூர் பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தாபாக்கள், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட உணவகங்களில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சில ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு சட்ட விதி மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 40 கிலோ சிக்கன், 5 கிலோ மீன், 2 கிலோ மட்டன், 3 கிலோ நண்டு, இறால் என மொத்தம் 52 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 4 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் 5 உணவு நிறுவனங்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.






