என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salemdistrict: ரூ.446 கோடி மதிப்பில் சாலை விரி வாக்கம் செய்யும் பணி Road widening work worth Rs.446 crore"

    • சாலை விரிவாக்கம் செய் யும் பணி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது.
    • மொத்தம் 51.7 கிலோமீட்டர் தொலைவில் விரிவாக்கம் செய்யப்படு கிறது.

    சங்ககிரி

    சென்னை-கன்னியா குமரி தொழிற்தடத்திட்டம் மூலம் சேலம் மாவட்டம் ஓமலூர், தாரமங்கலம், சங்ககிரி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வரை ரூ.446 கோடி மதிப்பில் சாலை விரி வாக்கம் செய் யும் பணி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது.

    90 சதவீதம் நிறைவு

    மொத்தம் 51.7 கிலோமீட்டர் தொலைவில் விரிவாக்கம் செய்யப்படு கிறது. இந்த சாலையானது 28 மீட்டரில் இருந்து 35 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இப்பணி 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது சங்ககிரி ஆர்.எஸ் பகுதி அருகே ரெயில்வே மேம்பா லம் அமைக்கும் பணிக்காக கான்கிரீட் தளங்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டால் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் வெப்படை வழியாக சுற்றிச் செல்லாமல் வாகனங்களின் பயண தூரமும், எரிபொரு ளும் வெகுவாக குறையும். இது குறித்து நெடுஞ் சாலை துறை அதி காரிகள் கூறுகையில், சாலைப்பணி யானது தரமாகவும், பாது காப்பாகவும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட் டிற்கு விடப்படும் என்றனர்.

    ×