என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salemdistrict: சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா காட்சியை வைத்து தீவிர விசாரணை A thorough investigation was conducted at the scene using the CCTV footage"

    • பிரசாந்த் ஜோதிடம் பார்ப்பதாக கூறி தோஷம் உள்ளது என்று கூறி பூஜை செய்தால் நிவர்த்தி ஆகும்
    • செல்வராஜ் வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கலி மற்றும் ரூ. 2 ஆயிரம் கொண்டு வைத்தனர்

    மேட்டூர்

    மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே காப்பரத்தாம்பட்டியில் வசிக்கும் பழனிசாமி மகன் செலவராஜ் (29) கட்டிட வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மதியம் 12 மணி அளவில் செல்வராஜ் வீட்டிற்கு வந்த பிரசாந்த் (23) என்கிற வாலிபர் ஜோதிடம் பார்ப்பதாக கூறியுள்ளார் உங்களுக்கு தோஷம் உள்ளது என்று கூறி பூஜை செய்தால் நிவர்த்தி ஆகும் என்று கூறியுள்ளார்.இதனை நம்பிய செல்வ ராஜ் மற்றும் அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்து வீட்டுக்கு உள்ளே பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது ஜோதிடம் பார்க்கும் பிரசாந்த் உங்கள் வீட்டில் உள்ள நகை பணத்தை பூஜையில் வைக்க வேண்டும் பூஜை முடிந்தயுடன் திருப்பி தருவதாக கூறியுள்ளார்.

    பின்பு பூஜையில் செல்வராஜ் வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கலி மற்றும் ரூ. 2 ஆயிரம் கொண்டு வந்து பூஜையில் வைத்துள்ளனர். அப்போது ஜோதிடம் பார்த்த பிரசாந் மந்திரம் சொல்லி விட்டு குடிக்க தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று கூறி நகை பணத்தை சுருட்டி கொண்டு தப்பியுள்ளார்.மேலும் இந்த சம்பவம் குறித்து ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் செல்வராஜி புகார் செய்துள்ளார். ஜலகண்டா புரம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா காட்சியை வைத்து தீவிர விசாரணை செய்ததில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பிர சாந்தை அடையாளம் கண்டு வாகன என்னை வைத்து தேடிவந்த நிலையில் நகை பணம் கொள்ளையடித்த பிரசாந்த் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் மகன் என்பது தெரியவந்துள்ளது.

    பின்பு ஜலகண்டாபுரம் போலீசார் விரைந்து சென்று திருச்சியில் பிரசாந்த்தை கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கலியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ×