என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    X

    சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் உள்ளார்.

    சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

    • பதிவேடுகளை பார்வையிட்டு தணிக்கை செய்து 3 மாதத்திற்கு மேல் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல்களை விரைந்து முடிக்க வேண்டும்
    • வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று ஆய்வு

    சங்ககிரி

    சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் ஆய்வு செய்து வருகிறார்.

    அதன் தொடர்ச்சியாக சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு தணிக்கை செய்து 3 மாதத்திற்கு மேல் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறவுறுத்தினார்.

    முன்னதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு வாகன டிரைவர் உரிமம் மற்றும் வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்குவது குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், சங்ககிரி ஆர்.டி.ஓ. லோகநாயகி, தாசில்தார் அறிவுடைநம்பி, ஆதிதிராவிட நல தனி தாசில்தார் லெனின், வட்ட வழங்கல் அலுவலர் அமுதா, மண்டல துணை தாசில்தார் ரமேஷ், ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் முத்துசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சிராஜூதின், வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×