என் மலர்
ராணிப்பேட்டை
- கலச பூஜைகள் நடந்தது
- ஏராளமானோர் தரிசனம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்த நவராத்திரி இன்னிசை நிறைவு விழா, பாலாபீடாதிபதி நெமிலி கவிஞர் எழில்மணி தலைமை யில் நேற்று முன்தினம் நடை பெற்றது.
விழாவில் திரைப்பட இசைய மைப்பாளர் பாலரத்னா ஆர். கே.சுந்தர் தமது குழுவினருடன் கலந்துகொண்டு பக்தி பாடல் களை வழங்கினார். அன்னை பாலாவிற்கு பாலா பீட நிர்வாகி மோகன்ஜி பத்து நாளும் தச மகாலட்சுமி அலங்காரம் செய்து பாலா கலச பூஜைகளை நடத்தினார்.
விஜயதசமியை முன்னிட்டு நெமிலி குருஜி பாபாஜி பள்ளி யில் சேரும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் செய்து வைத்தார். பீடாதிபதியின் துணைவியார் நாகலட்சுமி எழில் மணி, சுஹாசினி பூஜை செய்து சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ வளையல், புடவை மற்றும் ரவிக்கை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பக்தர்கள் நவராத்திரி கலசத்தில் அமைந்த அன்னை பாலாவை தரிசனம் செய்தார்கள்.
பாலா பீட செயலாளர் முரளிதரன் தலைமையில் அன் னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாலா ஆத்மீக குடும்பங்கள் மற்றும் நெமிலி இறைப்பணி மன்ற அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.
- முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோதியது
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ஆற்காடு பெரிய தண்டுகாரன் தெரு பகுதியை சேர்ந்தவர் வில்லாளன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவர் ராணிப்பேட்டை பெல் பகுதியில் இருந்து, ஆற்காடு நோக்கி எம்.பி.டி.சாலையில் ஆட்டோவில் வந்துகொண்டிருந்தார்.
சிப்காட் அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக இவரது ஆட்டோ முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த வில்லாளன் உடனடியாக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 12 பவுன் நகை அபேஸ்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டைமாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 68) என்பவ ரது வீட்டில் 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கோலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று காலை புதுகேசாவரம் பகுதி யில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழி யாக பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பாணாவரம் பகுதியை சேர்ந்த மதன் (30) என்பதும், முனுசாமி வீட்டில் நகைகள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மதனை கைது செய்தனர்.
- தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
- கலவையில் 75.4 மி.மீ. மழை கொட்டியது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.அதிகபட்சமாக கலவையில் 75.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆற்காடு, காவேரிப்பாக்கம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது மற்ற இடங்களில் சாரல் மழை பெய்தது.
நெமிலி, காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 6 மணி முதல் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தெருக்களின் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மீண்டும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆற்காடு-20.4, காவேரிப்பாக்கம்-27, வாலாஜா-8.7, அம்மூர்-9, சோளிங்கர்-12, கலவை-75.4.
- ஒன்றிய குழு தலைவர் திறந்து வைத்தார்
- ரூ.57 லட்சத்தில் கட்டப்பட்டது
நெமிலி:
நெமிலி அடுத்த சயனபுரம், புதுகண்டிகை, சயனபுரம் காலனி ஆகிய 3 இடங்களில் ஊராட்சி நிதி மற்றும் ஒன்றிய நிதி மூலம் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் 3 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டது.
இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவெடுக்கப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடிவேலு தலைமை தாங்கினார்.
நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சுகன்யா ரவி, ஊராட்சி எழுத்தர் யுவராஜ், முஹம்மது அப்துல் ரஹ்மான், ரமேஷ், பெருமாள், ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- திரைப்பட இயக்குனருக்கு ‘ஆத்மீக பால ரத்னா’ விருது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமிக்கு, 'ஆத்மீக பால ரத்னா' விருதை கவிஞர் நெமிலி எழில்மணி வழங்கி பாராட்டினார்.
அவர் தயாரித்து வெளி யான மாமனிதன் எனும் திரைப்படத்தில், கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்து - ரைத்தார். தனக்கு அளிக் கப்பட்ட பட்டம் மனித நேயத்துக்கு அளிக்கப்பட்ட மதிப்பு என இயக்குனர் சீனுராம்சாமி குறிப்பிட்டார்.
அப்போது, குருஜி நெமிலி பாபாஜி தாம் எழுதிய ஆத்மீக நுால்களை அவருக்கு பரிசாக வழங்கினார். விழா ஏற்பாடுகளை நெமிலி ஆத்மீக குடும்பத் தினர் செய்திருந்தனர்.
- 71 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்
- 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட் டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் ஏற்கனவே தொற்று பாதித்த 71 பேர் வீட்டு தனிமை சிகிச்சையில் உள்ளனர்.
2 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 பேர் டெஸ்ட் ரிசல்ட்டுக்காக காத்திருக்கின்றனர்.
- ரூ.1.90 ேகாடி செலவில் பராமரிக்கப்படுகிறது
- அறிக்கை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு
வாலாஜாபேட்டை:
வாலாஜாபேட்டை நகராட்சியில் திடீரென அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார். அவரை கமிஷனர் குமரி மன்னன், சேர் மன் ஹரிணி தில்லை மற்றும் அதிகாரிகள் வர வேற்றனர்.
தற்போதுள்ள வாலாஜா பஸ் நிலையம் ரூ.1.90 ேகாடி செலவில் நவீனப்படுத்தும் திட்டத்தை தொடங்கி பணிகளை விரைவாக முடிப்பது குறித்து நகராட்சி கமிஷனர் குமரி மன்னன், சேர்மன் ஹரிணி தில்லை, துணை சேர்மன் கமல ராகவன் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் காந்தி ஆலோசனை நடத்தினார்.
மேலும், நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டுவது குறித்தும், நகராட்சிக்கு வருவாய் உருவாக்கும் திட்டமாக தற்போதுள்ள வணிக வளாகங்கள் அடங்கிய நகராட்சி கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதி தாக வணிக வளாகம் நவீன முறையில் 'மால்' போன்று கட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
- பாட்டியின் அரவணைப்பில் உள்ளனர்
- படிப்பு உபகரணங்கள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தில் தாய் தந்தை இழந்து பாட்டி அரவணைப்பில் சிறிய வாடகை வீட்டில் வறுமையில் வசிக்கும் இரட்டை குழந்தைகளுக்கு தேவையான படிப்பு உபகரணங்கள் மற்றும் மளிகை பொருட்களை சமூக சேவகர் தினேஷ் வழங்கினார்.
- மாற்றுதிறனாளிகளுக்காக நடக்கிறது
- கலெக்டர் அறிவிப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்க பெறுவதை உறுதி செய்திடவும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத் திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைசாளர முறையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
செவ்வாய்க்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்ற முகாம்கள் 18.10.2022 செவ்வாய் அன்று வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் 1.11.2022 செவ்வாய்க்கிழமை நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும் இந்நாட்களில் கலெக்டர் அலுவலகத்தில் முகாம்கள் நடைபெறாது
சிறப்பு முகாம்கள் நடைபெறும் ஒன்றியங்களில் விவரம்: திமிரி ஒன்றியத்தில் 7.10.2022 வெள்ளிக்கிழமை திமிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆற்காடு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 14.10.22 வெள்ளிக்கிழமையும், வாலாஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 18.10.2022 செவ்வாய்க்கிழமை, காவேரிப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 21.10.2022 வெள்ளிக்கிழமை, சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 28.10.2022 வெள்ளிக்கிழமை, நெமிலி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1.11.2022 செவ்வாய்கிழமை, அரக்கோணம் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4.11.2022 வெள்ளிக்கிழமை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாதாந்திர பராமரிப்பு தொகை, கல்வி உதவித் தொகை, வங்கி கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும் பதிவுகளும் மேற்கொள்ளப்படும்.
உதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேலின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையர்கள் வழிப்பறி செய்ய முயன்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பழனிவேல்.இவர் பணியை முடித்துவிட்டு ரத்தனகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
நந்தியாலம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேலின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையர்கள் வழிப்பறி செய்ய முயன்றனர்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தனது பைக்கில் உள்ள சைரனை ஆன் செய்ததால், அதன் சத்தத்தை கேட்ட கொள்ளையர்கள் தப்பியோடினர். இது குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்
- கத்தி, உருட்டுகட்டை பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் பகுதிகளிலில் கஞ்சா, வழிபறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கைது செய்யவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனி சேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இநத்நிலையில் நேற்று அரக்கோணம் - திருவள்ளூர் ரோட்டில் உள்ள அரக் கோணம் அரசு ஐ.டி.ஐ. அருகே புதர்மண்டியிருந்த இடத்தில் 3 பேர் பேசும் சத்தம் கேட்டு அந்த இடத்தில் போலீசார் சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு சிலர் திருவள்ளூர் ரோட்டில் செல்ப வழிப்பறியில் ஈடுபடுவது குறித்து பேசிக் கொண்ட வர்களிடம் டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து 3 பேர் தப்பி ஓடினர்.
அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டதில் அரக்கோணம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (23), அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் பகுதியை சேர்ந்த அஜித் (20), ஆவடியை சேர்ந்த நரேஷ் (22) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தபோலீசார் கத்தி, உருட்டுகட்டை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.






