search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பு முகாம்
    X

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பு முகாம்

    • மாற்றுதிறனாளிகளுக்காக நடக்கிறது
    • கலெக்டர் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்க பெறுவதை உறுதி செய்திடவும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத் திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைசாளர முறையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

    செவ்வாய்க்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்ற முகாம்கள் 18.10.2022 செவ்வாய் அன்று வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் 1.11.2022 செவ்வாய்க்கிழமை நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும் இந்நாட்களில் கலெக்டர் அலுவலகத்தில் முகாம்கள் நடைபெறாது

    சிறப்பு முகாம்கள் நடைபெறும் ஒன்றியங்களில் விவரம்: திமிரி ஒன்றியத்தில் 7.10.2022 வெள்ளிக்கிழமை திமிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆற்காடு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 14.10.22 வெள்ளிக்கிழமையும், வாலாஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 18.10.2022 செவ்வாய்க்கிழமை, காவேரிப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 21.10.2022 வெள்ளிக்கிழமை, சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 28.10.2022 வெள்ளிக்கிழமை, நெமிலி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1.11.2022 செவ்வாய்கிழமை, அரக்கோணம் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4.11.2022 வெள்ளிக்கிழமை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாதாந்திர பராமரிப்பு தொகை, கல்வி உதவித் தொகை, வங்கி கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும் பதிவுகளும் மேற்கொள்ளப்படும்.

    உதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×