என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ மோதி பலி"

    • முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோதியது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு பெரிய தண்டுகாரன் தெரு பகுதியை சேர்ந்தவர் வில்லாளன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவர் ராணிப்பேட்டை பெல் பகுதியில் இருந்து, ஆற்காடு நோக்கி எம்.பி.டி.சாலையில் ஆட்டோவில் வந்துகொண்டிருந்தார்.

    சிப்காட் அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக இவரது ஆட்டோ முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த வில்லாளன் உடனடியாக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×