என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப் பாக்கம் சக்தி நகரை சேர்ந்தவர் சதாம்உசேன் (வயது 27). இவர் பனப்பாக்கம் பஸ் நிலையம் அருகில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை கடையை திறந்துள்ளார். அப்போது கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தை பயன்படுத்தினார்.

    அதில் மின் கசிவு ஏற்பட்டது தெரியாமல் சதாம் உசேன் மீது எதிர்பாராத விதமாக மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்த னர்.

    அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அவர் பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதாம் உசேன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் தகவல்
    • 7 ஒன்றியங்களில் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் அனைத்து ஊரக குடியிருப்புகளுக்கும் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2020 21-ஆம் ஆண்டு திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 79 கிராம ஊராட்சிகள் (அரக்கோணம்-12. ஆற்காடு-13. காவேரிப்பாக்கம் -4. நெமிலி-18, சோளிங்கர்-11. திமிரி-12 மற்றும் வாலாஜா-9) தேர்வு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாய் இணைப்பிற்கு பொதுமக்கள் பங்குத் தொகையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு குக்கிராமங்களுக்கு ரூ.600 மற்றும் பொது பிரிவு குடியிருப்புகுக் கிராமங்களுக்கு ரூ.1200 தொகையும் செலுத்தப் படவேண்டும்.

    இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் இதுநாள் வரையில் தங்களது பொதுமக்கள் பங்குத்தொகையினை செலுத்தாதவர்கள் அதற்கான தொகையினை தங்களது ஊராட்சியில் உள்ள ஊராட்சிகணக்கு ஜல் ஜீவன் கணக்கில் செலுத்தி அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் 2022-23-ம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 5 கிராம ஊராட்சிகள் (அரக்கோணம்- 17 பணிகள்) தேர்வு செய்யப்பட்டு வீடுதோறும் குடிநீர் வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே இதற்கான தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சியில் உள்ள பயனாளிகள் தங்களுக்கான பொதுமக்கள் பங்குத் தொகையினை உரியகணக்கில் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில் முன்கூட்டியே செலுத்தி அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ளவும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்தது
    • 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் லக்கி லாரன்ஸ் புவியரசு தலைமை தாங்கினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைக்கால ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 1.07.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவிக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் முடக்கப்பட்டுள்ள உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    மாணவர்கள் நலன் கருதி தேவையற்ற இணையவழி பதிவு பதிவேடுகளை நிறுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார அளவிலான நிர்வாகிகள், மாவட்ட, மாநில அளவிலான நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கம்பியை அப்புறப்படுத்தியபோது மின்சாரம் பாய்ந்தது
    • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அருகே கீழாண்டமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத், கூலிதொழிலாளி. இவரது இரண்டா வது மகள் நிவேதா (வயது 15) அரசு மகளிர் மேல்நி லைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நிவேதா நேற்று மாலை வீட்டின் மாடியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சென்று போடும் போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின் வயர் மீதுபட்டது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த நிவே தாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிறப்பு வகுப்புகள் எடுத்து ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தார்
    • சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலப் புலம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மணிகண்டன் என்பவரது மகன்பேரானந்தம் பிளஸ்-2 முடித்தார்.

    இவர் கடந்த முறை நீட் தேர்வில் வெற்றிபெற்றாலும் 125 மதிப் பெண்கள் மட்டுமே எடுத்ததால் மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும் நீட்தேர்வு எழுதி 430 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் 11-வது இடத்தையும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

    இதன் மூலம் சென்னை குமருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. தலைமை ஆசிரியை பரமேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன், இயற்பியல் ஆசிரியை பவானி ஆகியோர் சிறப்பு வகுப்புகள் எடுத்து ஊக்கப்படுத்தியதாக மாணவர் தெரிவித்தார்.

    • கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சி 8-வது வார்டு பகுதியில் பகுதி சபை கூட்டம், வார்டு உறுப்பினர் டி.கோபால் தலைமையில் நடை பெற்றது. நகராட்சி இளநிலை உதவியாளர் எபினேசன் முன் னிலை வகித்தார். கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பகுதி சபை உறுப்பினர்களான சுந்தர், முருகன் லட்சுமி, ஜெயந்தி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தனர்.

    கூட்டத்தில் பாட்டிக்குளம் பகுதியில் நிழற்கூரை அமைக்க வேண்டும், அருகில் உள்ள கூட்டு சாலை பகுதியில் உயர்கோ புர மின் விளக்கு, மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். போர்டின் பேட்டை அருகே உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும், தெருக்களில் அமைக்கப்பட்ட கண்கா ணிப்பு கேமராக்களை முறையாக பராமரிப்பு செய்ய வேண் டும், 8-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால் வாய் அமைக்க வேண்டும், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதேபோன்று 24, 25, 26 ஆகிய வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. 24-வது வார்டு உறுப்பினர் அருண் ஆதி, 25-வது வார்டு உறுப்பினர் தீப அரசி ஆகியோர் தலை மையில் நடைபெற்றது. நகராட்சி இளநிலை உதவியாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில். 24-வது வார்டு பகுதிக்கு பொன்னை ஆற்று குடிநீர் வழங்க வேண்டும், ஸ்ரீராம் நகருக்கு பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண் டும், மயானத்திற்கு பாதை மற்றும் சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பொதுமக்கள் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

    25-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பொதுமக்கள் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள அழைப்பு
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாட்கோ அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது.

    தாட்கோ அலுவலகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மக்கள் பதிவு செய்வதற்கு விண்ணப்பதாரரின் புகைப்படம், சாதிச்சான்று. வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்), குடும்ப அட்டை, ஆதார் அட்டை விலைப்புள்ளி, திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் தாட்கோ இணையதளம் (ஆதிதிராவிடர்களுக்கு https://application.tahdco.com மற்றும் பழங்குடியினர்களுக்கு https://fast.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பம் செய்தோ அல்லது மாவட்ட மேலாளர் தாட்கோ அலுவலகத்தில் உரிய ஆவணகளுடன் நேரில் வந்து விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் கலெக்டர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கையை அளிக்க உத்தர விட்டிருந்தனர்.

    அதன் அடிப்படையில் ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 170 பள்ளி கட்டிடங்கள் நீண்ட நாட்கள் ஆகிவிட்ட தாலும், பழுதடைந்து உள்ளதாலும், இடிக்க கணக்கெ டுக்கப்பட்டது. அவற்றில் 77 பள்ளிகளை இடிக்க முதற்கட்டமாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில் வாலாஜா ஒன்றியம் சென்னசமுத்திரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பழமை வாய்ந்த பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது. இந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்படுவதை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக் காலம் தொடங்கி உள்ளதால் எஞ்சியுள்ள பள்ளி கட்டிடங்கள் உத்தரவு வழங்கி ஒரு வாரத்திற்குள் எடுக்க வேண்டும் என திட்ட இயக்குநரிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டார்.

    அதேபோல ஏற்கனவே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பழமை வாய்ந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு வழங்க ப்பட்டிருந்தது. மொத்தம் 118 பள்ளி கட்டிடங்கள் பழமை வாய்ந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்க உத்தரவு வழங்கப்பட்டதில் இதுவரையில் 116 பள்ளி கட்டிடங்கள் பொதுப்பணி துறையினரால் இடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 பள்ளி கட்டிடங்கள் இந்த வார இறுதிக்குள் இடிக்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மங்கள சண்டியாகம் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஐப்பசி மாத சப்தமி திதியை முன்னிட்டு நேற்று நவக்கிரக தோஷங்கள் அகல, நிலம், பூமி, வீடுமனை மற்றும் சொத்து தகராறு வழக்குகள் நீங்கிட, தோஷங்கள், திருமணத்தடை அகல, மனஅமைதி பெற்று, மன சோர்வு நீங்கி, திருஷ்டி, செய்வினை அகன்றிட, கணவன் மனைவி ஒற்றுமை பெற, கடன் தொல்லை அகன்றிட, பதவி, படிப்பு, தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஏற்படும் தடைகள் விலகிட வேண்டி மங்கள சண்டியாகம் நடைபெற்றது.

    மங்கள சண்டி யாகத்தை முன்னிட்டு காலை கோ பூஜை, கணபதி சங்கல்பம், யாகசாலை பூஜைகள், நவதானியங்கள், பல்வேறு வகையான பூக்கள், பழங்கள், கரும்பு, இனிப்பு வகைகள், பூசணிக்காய் உள்பட பல்வேறு வகையான பொருள்கள் வைத்து நடைபெற்ற சண்டி யாகம், பைரவர் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • அடையாள அட்டைகள் வினியோகம்
    • கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    நெமிலி:

    நெமிலியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம், நெமிலி அரசினர் ஆண்கள் மேநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இந்த முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மருத்துவர்கள் உரிய பரிசோதனை செய்து அவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். மாற்றுத்திறனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன், நெமிலி ஒன்றிய குழுத்தலைவர் வடிவேலு, நெமிலி பேரூரட்சி மன்றத் தலைவர் ரேணுகாதேவி சரவணன் ஆகியோர் வழங்கினர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மாணவர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

    அதன்படி ராணிப்பேட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    ேரணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முத்துக்கடை பஸ் நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.

    இந்த பேரணியில் 'லஞ்சம் கொடுப்பது குற்றம்' வாங்குவதும் குற்றம்' உட்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களின் பதாகைகளை ஏந்திய படி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சுப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னை உள்பட 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • கனமழையால் ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை:

    வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது. மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    ×