என் மலர்
ராணிப்பேட்டை
- மகன் சமாதியில் சடங்கு செய்ய சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். சலவைத் தொழிலாளி. இவரது மனைவி வசந்தா (வயது 58). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார்.
அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது உடலை அரக்கோணம் ரெயில்வே அருகே உள்ள சுடுகாட்டில் புதைத்தனர். வசந்தா தனது மகன் இறந்த துக்கம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்தார்.
மகன் இறந்த இடத்திற்கு சடங்கு செய்வதற்காக வசந்தா சுடுகாட்டிற்கு சென்றார். அப்போது ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அந்த வழியாக வந்த அரக்கோணத்தில்இருந்து திருத்தணி சென்ற புறநகர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர் வசந்தாவின் உடலை அரக்கோணம் ரெயில்வே போலீசார் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைகிறது
- வியாபாரிகள் பாராட்டு
நெமிலி:
வேலூர் மாவட்டம் பொய்கை மாட்டு சந்தையை விட அதிகமாக கால்நடைகள் ஆடுகள் மாடுகள் போன்றவை விவசாயிகள் வியாபாரிகள் விற்பனை செய்யும் இடமாகவும் வாங்கி செல்லும் இடமாகவும் நெமிலி வாரச்சந்தை நிலவி வருகிறது.
இந்நிலையில் பஜார் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளை ஒரே இடத்தில் வைப்பதற்காகவும் மேலும் ஒரு சில இடத்தில் உள்ள இறைச்சி கடை மற்றும் மீன் கடைகளால் பொதுமக்களும் மற்ற கடை வியாபாரிகளும் இடையூறாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் நெமிலி வாரச்சந்தை விரிவாக்கப்பட்டு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் வாரச்சந்தை கட்டிடங்கள் காய்கறி கடைகள் போன்றவை விரைவாக கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.
இந்த வார சந்தை விரிவாக பணியினால் வியாபாரிகளும் பொதுமக்களும் பயனடையவார்கள் மேலும் வாரச்சந்தை விரிவாக கட்டிடப் பணிகள் விரைவாக கட்டப்பட்டு வருவதற்கு அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- 50 போதை பாக்கெட்டுகள் பறிமுதல்
- போலீசார் எச்சரிக்கை
நெமிலி:
ஓச்சேரி அடுத்த ஆயர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 55). இவர் அதே பகுதியில் பங்க்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்கள் விற்பதாக அவலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தனிப்படை அமைத்து சம்பவ இடத்திற்கு போலீசார் நேரில் சென்று பங்க் கடையில் சோதனை செய்தனர்.
அப்போது கடையில் இருந்த குட்கா போன்ற 50 போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பரசுராமன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் மேலப்புலம், மாமண்டூர், பெரும்புலி பாக்கம், பொய்கைநல்லூர் பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் சென்று அங்குள்ள பங்க்கடைகளில் சோதனை செய்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கடைக்காரர்களுக்கு இதுபோன்ற போதை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
- மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
- பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்
வாலாஜா:
வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் உலக மக்கள் உடல், மன ரீதியான நோய்கள் நீங்கி நல் வாழ்வு பெறவும், ஸ்தல அபிவிருத்தி மற்றும் மூர்த்தி ஸ்தானத்திற்காகவும் லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்று வந்தது.
ஐப்பசி மாத ஏகாதசி முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு, நெல்லிப்பொடி மற்றும் பால், மஞ்சள், சந்தனம், பன்னீர் அபிஷேகமும், சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ தன்வந்திரி ஹோமமும், மூலவருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
மேலும் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த லட்சார்ச்சனையும் சிறப்பு பூஜைகளுடன் நிறைவுபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
- உடமைகள் காணவில்லை என புகார்
- ரெயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைப்பு
அரக்கோணம்:
சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3:30 மணி அளவில் புறப்பட்டு சென்றது. அப்போது ரெயிலின் பின்புறம் உள்ள மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பெட்டியில் கேட்பாரற்று 4 பைகள் இருந்தன.
இந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் இது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் டிக்கெட் பரிசோதகர் இது சம்பந்தமாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
ரெயில் அரக்கோணம் நிலையத்திற்கு வந்த நின்றவுடன், போலீசார் அந்தப் பைகளை சோதனை இட்டு அதை கைப்பற்றினர். இந்த நிலையில் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி புறப்பட்டு சென்றது.
அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தில் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த நபர் ஜபல்பூர் சேர்ந்த குடும்பத்தினர் டிக்கெட் பரிசோதகரிடம் தங்கள் உடமைகளை மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் வைத்திருந்தோம் அதனை காணவில்லை என புகார் செய்தனர்.
அதற்கு டிக்கெட் பரிசோதகர் கேட்பாரற்று கிடந்த பைகளை அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து அந்த உடமைகளை பெற்றுக் கொண்டனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- 40 சதவீத பள்ளி கட்டிடங்களை அகற்றி விட்டதாக தகவல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் சேதமடைந்த மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை அகற்றி விபத்துகள் ஏற்படும் முன்னரே அகற்றப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட முழுவதும் ஆரம்பப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பொதுப் பணியாளர் துறையை சேர்ந்த பொறியாளர்கள் ஆய்வு கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர் சேதம் அடைந்த கட்டிடங்களை இடிக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆணையிட்டார் அதன்படி ஜேசிபி எந்திரம் மூலம் நெமிலி அடுத்த வேடல் பகுதியில் உள்ள பழுதடைந்த நிலையில் உள்ள பழமையான பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.
கட்டிடக்கழிவுகள் அகற்றி அந்த இடத்தில் புதிய பள்ளி கட்டிடங்களை கட்ட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதே போல மாவட்டத்தில் 40 சதவீத பள்ளி கட்டிடங்களை அகற்றி விட்டதாகவும் மீதமுள்ள கட்டிடங்களை அகற்றி வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- இந்தி திணிப்பை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் பழனி பேட்டை பகுதியில் இந்தி திணிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் திராவிட கட்சியின் மண்டல மாணவர் அணி அமைப்பாளர் அமுதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மண்டல தலைவர் பூ எல்லப்பன் மண்டல செயலாளர் காஞ்சி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
என்றும் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு வேண்டாம் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரக்கோணம் ஒன்றிய செயலாளர் ச.சி சந்தர், நகர துணைத் செயலாளர் நாகராஜ், திராவிட கட்சியின் மாவட்ட தலைவர் சூ.லோகநாதன், மாவட்ட அமைப்பாளர் ஜீவன் தாஸ், நகரச் செயலாளர் ரமேஷ், மதிமுக மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
- 4 செயலாளர் குழு நியமனம்
- கூட்டத்தில் நகராட்சி தலைவர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் தமிழ்நாடு குடியிருப்பு வீட்டு வசதி வாரிய பகுதியில் நகர பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
கவுன்சிலர் செந்தில்குமார் தலைமையில் தாங்கினார். அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி, நகராட்சி ஆணையாளர் லதா, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
வார்டுகளில் உள்ள குறைகளை கண்டறிய 4 பிரிவாக பிரித்து 4 செயலாளர்களை இக்குழுவினர் நியமித்தனர்.
அரக்கோணம் சாஸ்திரி நகர் பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் வீட்டிற்குள் புகுவதால் சாலை அமைக்கும் போது சரி மட்டமாக அமைத்து தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம், சுகாதார அலுவலர் மோகன், களப்பணியாளர் ஸ்ரீகாந்த், வார்டு மக்கள் கலந்து கொண்டனர்.
- உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நடந்தது
- கலெக்டர் எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆற்காடு சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சனைகளைக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆற்காடு சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சனைகளைக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ வழங்கியுள்ள 10 மனுக்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்து, துறைகள் தங்களின் தலைமை இடத்திற்கு அறிக்கையை முறையாக தயார் செய்து வழங்கிட வேண்டும் எனவும், அனைத்து திட்டங்களும் அரசின் மூலம் ஒப்புதல் பெரும்படியாக முழுமையாக ஆராய்ந்து என்ன பிரச்சனைகள் அதனை நிவர்த்தி செய்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் துறைச்சார்ந்த அலுவலர்களை கேட்டுக் கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- பாதுகாப்பாக இருக்க கலெக்டர் அறிவுறுத்தல்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வாலாஜா தடுப்பணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து, மகேந்திரவாடி, சக்கரமல்லூர், தூசி, காவேரிப்பாக்கம் ஆகிய பாசன ஏரிகளுக்கு விநாடிக்கு 855 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.
855 கனஅடி நீர் வெளியேற்றம்
வாலாஜாபேட்டை அருகே உள்ள அணைக்கட்டு தடுப்பணைக்கு தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு 257 கனஅடியும், மகேந்திரவாடி ஏரிக்கு 110 கன அடியும், சக்கரமல்லூர் ஏரிக்கு140 கன அடியும், தூசி ஏரிக்கு 365 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மொத்தமாக வாலாஜாப்பேட்டை அனைக்கட்டு தடுப்பணையிலிருந்து விநாடிக்கு 872கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பாசன ஏரிகளுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.
- 850 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
ராணிப்பேட்டை:
கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு செய்தல் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அளித்த செய்தி குறிப்பில் கூறியதாவது:-
விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு கால்நடை பராமரிப்புத்துறையின் தேசிய கால்நடைகள் இயக்கம் 2022-23 ன்படி கால்நடைகள் காப்பீடு செய்ய ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 850 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் ஆதிதிராவிடர்/ பழங்குடியினருக்கு (பி.பி.எல்) 70 சதவீதம் மானியத்திலும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு (எ.பி.எல்) 50 சதவீதம் மானியத்திலும் கால்நடைகளுக்கு காப்பீடுசெய்யப்படும்.
பசுக்கள் / எருமைகள் 2 வயது முதல் 8 வயது வரையிலும், ஆடு அலகுகள் 1 முதல் 3 வயது வரையிலும், பன்றிகள் 1 முதல் 5 வயது வரையிலும் காப்பீடு செய்யப்படும்.ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 5 அலகுகள் வரை காப்பீடு செய்யப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுள்ள பயனாளிகள் தங்கள் அருகாமையிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ளும்மாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தெரிவித்துள்ளார்.






