என் மலர்
நீங்கள் தேடியது "கால்நடைகளுக்கு காப்பீடு"
- 850 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
ராணிப்பேட்டை:
கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு செய்தல் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அளித்த செய்தி குறிப்பில் கூறியதாவது:-
விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு கால்நடை பராமரிப்புத்துறையின் தேசிய கால்நடைகள் இயக்கம் 2022-23 ன்படி கால்நடைகள் காப்பீடு செய்ய ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 850 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் ஆதிதிராவிடர்/ பழங்குடியினருக்கு (பி.பி.எல்) 70 சதவீதம் மானியத்திலும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு (எ.பி.எல்) 50 சதவீதம் மானியத்திலும் கால்நடைகளுக்கு காப்பீடுசெய்யப்படும்.
பசுக்கள் / எருமைகள் 2 வயது முதல் 8 வயது வரையிலும், ஆடு அலகுகள் 1 முதல் 3 வயது வரையிலும், பன்றிகள் 1 முதல் 5 வயது வரையிலும் காப்பீடு செய்யப்படும்.ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 5 அலகுகள் வரை காப்பீடு செய்யப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுள்ள பயனாளிகள் தங்கள் அருகாமையிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ளும்மாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தெரிவித்துள்ளார்.






