என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Livestock Insurance"

    • 850 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    ராணிப்பேட்டை:

    கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு செய்தல் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அளித்த செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு கால்நடை பராமரிப்புத்துறையின் தேசிய கால்நடைகள் இயக்கம் 2022-23 ன்படி கால்நடைகள் காப்பீடு செய்ய ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 850 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    இவற்றில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் ஆதிதிராவிடர்/ பழங்குடியினருக்கு (பி.பி.எல்) 70 சதவீதம் மானியத்திலும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு (எ.பி.எல்) 50 சதவீதம் மானியத்திலும் கால்நடைகளுக்கு காப்பீடுசெய்யப்படும்.

    பசுக்கள் / எருமைகள் 2 வயது முதல் 8 வயது வரையிலும், ஆடு அலகுகள் 1 முதல் 3 வயது வரையிலும், பன்றிகள் 1 முதல் 5 வயது வரையிலும் காப்பீடு செய்யப்படும்.ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 5 அலகுகள் வரை காப்பீடு செய்யப்படும்.

    இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுள்ள பயனாளிகள் தங்கள் அருகாமையிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ளும்மாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தெரிவித்துள்ளார்.

    • சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • 13 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 20 முகாம்கள் என மொத்தம் 260 முகாம்கள் நடைபெறவுள்ளது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் புதுப்பை ஊராட்சி கணேசன் புதூரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 20 முகாம்கள் என மொத்தம் 260 முகாம்கள் நடைபெறவுள்ளது. பராமரிப்புத்துறையில் தேசிய கால்நடை இயக்கம், தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலமாக கால்நடை காப்பீட்டு திட்டம் - 2022-2023 திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்படவுள்ளது.

    இத்திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிக்கு ஒரு மாட்டினத்திற்கு அதிகபட்சமாக 70 சதவீதம்மானியமாக ரூ.356 தொகையும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள பயனாளிக்கு ஒரு மாட்டினத்திற்கு அதிகபட்சமாக 50 சதவீதம் மானியமாக ரூ.254 தொகையும் வழங்கப்படும். (ரூ.35,000 மதிப்புள்ள கால்நடைக்கு) 1900 கால்நடைகளுக்கு மொத்தமாக ரூ.5,40,740 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 5 மாட்டினங்களுக்கு அல்லது 50 ஆட்டினங்களுக்கு அல்லது 50 பன்றிகளுக்கு ஏதாவது ஒரு இனத்திற்கு காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

    ×