என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "There was a stir due to a bag lying on the train"

    • உடமைகள் காணவில்லை என புகார்
    • ரெயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைப்பு

    அரக்கோணம்:

    சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3:30 மணி அளவில் புறப்பட்டு சென்றது. அப்போது ரெயிலின் பின்புறம் உள்ள மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பெட்டியில் கேட்பாரற்று 4 பைகள் இருந்தன.

    இந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் இது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் டிக்கெட் பரிசோதகர் இது சம்பந்தமாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.

    ரெயில் அரக்கோணம் நிலையத்திற்கு வந்த நின்றவுடன், போலீசார் அந்தப் பைகளை சோதனை இட்டு அதை கைப்பற்றினர். இந்த நிலையில் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி புறப்பட்டு சென்றது.

    அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தில் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த நபர் ஜபல்பூர் சேர்ந்த குடும்பத்தினர் டிக்கெட் பரிசோதகரிடம் தங்கள் உடமைகளை மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் வைத்திருந்தோம் அதனை காணவில்லை என புகார் செய்தனர்.

    அதற்கு டிக்கெட் பரிசோதகர் கேட்பாரற்று கிடந்த பைகளை அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து அந்த உடமைகளை பெற்றுக் கொண்டனர்.

    இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×