என் மலர்
ராணிப்பேட்டை
- ரூ.6.75 லட்சத்தில் அமைக்கப்படுகிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 30ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் இல்லாமல் அவதிப்படுவதாக மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நாகராஜிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
மனுவை ஏற்றுக்கொண்டு கழிவுநீர் கால்வாய் அமைப்ப தாக உறுதியளித்தார். அதனை தொடர்ந்து கிருஷ்ணா புரம் கிரா மத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நிதியில் இருந்து 6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணசந்திர் தலைமையில் நடைபெற்றது.
இந்த பணிக்கான பூமி பூஜை போட்டு பணியை துவக்கி வைத்தார். பணியை விரைந்து முடிக்க வேண்டும் கட்டுமான பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளி, விதவை, முதியோருக்கு உதவித்தொ கை வழங்கினார்.30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றி தந்த மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நாகராஜிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
அப்போது ஒன்றிய குழு துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், புலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் திருமலை, புலிவலம் ஒன்றிய குழு உறுப்பினர் நதியாமதன்குமார், மத்திய ஒன்றிய நிர்வாகிகள் மணி, லோகநாதன், பார்த்திபன், தங்கதுரை, பாபு, பூபாலன், எத்திராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கொலையா? போலீசார் விசாரணை
- மாயமானவர்கள் புகார் விவரங்கள் சேகரிப்பு
வாலாஜா:
வாலாஜா அருகே பாலாறு அணைக் கட்டில் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாராவது கொலை செய்து பிணத்தை வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாலாஜா அருகே பாலாறு அணக்கட்டு உள் ளது. இங்கிருந்து சாத்தம்பாக்கம் கால்வாயில் தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை ஒரு இளம்பெண் பிணம் நீரில் உள்ள செடி கொடி களுக்கிடையே மிதப்பதாக அப்பகுதி யிலுள்ள மக்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். 20 வயது மதிக்கத்தக்க அந்த இளம்பெண் சுடிதார் அணிந்து இருந்தார். அவர் இறந்து 10 நாட்களுக்கு மேலாகியிருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவர் யார்? எந்த ஊர்? மேலும் அவர் கொலை செய்யப்பட்டரா? அல்லது தற்செயலாக நீரில் முழ்கி இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீசார் இளம்பெண்ணின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்டமாக சமீபத்தில் இளம்பெண் மாயமானதாக போலீஸ் நிலையங்களில் வந்த புகார் விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தந்தையை இழந்து வறுமையில் வாடிய குடும்பம்
- சிறுமியின் சகோதரனுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் தெரிவித்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் குடுகுடுப்பைகாரர் சமூகத்தை சேர்ந்த பாபு மற்றும் மல்லிப்பூ தம்பதி வசித்து வந்தனர்.
இவர்களுக்கு பழனி (20) என்ற மகனும், செல்வி (14) என்ற மகளும் உள்ளனர்.இவர்கள் சிறிய ஓலை குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் மல்லிப்பூ கணவர் பாபு சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ள நிலையில் மல்லிப்பூ தனது இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டு வீதி வீதியாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுருக்கு பை போன்றவற்றை விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் மல்லிப்பூ கால்கள் முறிவு ஏற்பட்டு அவர் தொடர்ந்து வியாபாரத்திற்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.
இந்த சூழலில் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக இவர்களது மகன் பழனி படிப்பை நிறுத்தி விட்டு குடுகுடுப்பை தொழிலினை மேற்கொண்டு வந்தனர்.
அதில் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்காக மல்லிப்பூ மகளான செல்வி 9-ஆம் வகுப்பு வரை அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்த நிலையில் தற்போது குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை தற்போது நிறுத்திவிட்டு தனது தாயார் மேற்கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுருக்குப்பை வியாபாரத்தினை வீதி வீதியாக தலையில் சுமந்தவாறு நடந்து சென்று விற்பனை செய்வதன் மூலமாக வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு அவர்களது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
இது குறித்த தகவல் அறிந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் அச்சிறுமியின் இல்லத்திற்கு நேரில் சென்று சிறுமியின் தாய்க்கு ஆறுதல் தெரிவித்தார்.மேலும் சிறுமியின் பள்ளி மற்றும் கல்லூரி செலவு முழுவதையும் அமைச்சர் ஆர்.காந்தி தானே ஏற்பதாக உறுதி அளித்தார். மேலும் மல்லிபூவிற்கு உடனடியாக அரசின் சார்பில் இலவச வீடு கட்டி தர ஆணையிட்ட அமைச்சர் உடனடியாக முதியோர் ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட்டார்.மேலும் சிறுமியின் சகோதரன் பழனிக்கு தனியார் தொழிற்சாலையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளை அழைத்த அமைச்சர் மாணவியை இன்றே பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார்.அதன்படி மாணவி சீருடை உடுத்தி மகிழ்ச்சியோடு புளியங்கன்று அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார்.
இதில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட இலக்கிய அணி சிவஞானம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி, மாவட்ட மாணவரணி எஸ்.வினோத், கோட்டாட்சியர் வினோத் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
- கைப்பிடி முன் பகுதியில் பதுங்கியிருந்தது
- ஏராளமான கூட்டம் கூடியது
அரக்கோணம்:
அரக்கோணம் அம்மனூர் பகுதியை சேந்தவர் சிவா. இவரது நண்பர் ரகு. இவர்கள் இருவரும் பைக்கில் நேற்று இரவு எஸ் ஆர் கேட் பகுதிக்கு வீட்டு தேவையான பொருட்களை வாங்க சென்றனர்.
பொருட்களை வாங்கிக் கொண்டு பைக்கில் ஏற முயன்றனர். அப்போது பைக்கிற்குள் பாம்பு ஒன்று புகுந்து சென்றது. இதனை பார்த்து அவர்கள் கூச்சலிட்டனர்.
பைக்கை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அப்போது பாம்பு திடீரென பைக்கின் உள்பகுதிக்குள் புகுந்தது. அதற்குள் அங்கு ஏராளமான கூட்டம் கூடியது.
கம்பு மற்றும் சில பொருட்களைக் கொண்டு பைக்கை சுற்றி தேடிப் பார்த்தனர்.
பாம்பை பிடிக்க முடியாததால் அந்தப் பகுதியில் இருந்த மெக்கானிக்கை வரவழைத்து பைக்கின் பாகங்களை ஒவ்வொன்றாய் கழற்றினர். ஆனால் பாம்பு அவர்களிடம் சிக்காமல் ஆட்டம் காட்டியது.
பின்னர் முன் பகுதியில் உள்ள கைப்பிடி நடுவில் உள்ள மேல் பாகத்தை கழட்டிய போது 2 அடி நீளமுள்ள பாம்பு அங்கு பதுங்கி இருந்தது. அதனை பிடித்து வெளியில் எடுத்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அ.தி.மு.க.வை சேர்ந்த வரலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
- வாக்குப்பதிவு நடந்தது. இரு தரப்பினரும் 7 வாக்குகள் பெற்று சரிசமமாக இருந்தனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. 8, அ.தி.மு.க. 4, பா.ம.க. 2, சுயேட்சை 1 கவுன்சிலர்கள் இருந்தனர்.
பேரூராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏகே சுந்தரமூர்த்தி இருந்தார். இவர் உடல்நிலை குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார்.
இதையடுத்து தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் இன்று பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த வரலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நடந்தது. இரு தரப்பினரும் 7 வாக்குகள் பெற்று சரிசமமாக இருந்தனர்.
இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரான சரவணன், வரலட்சுமி பெற்றுள்ள 7 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாது என அறிவித்து சுயேட்சை வேட்பாளர் சங்கீதா வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் வாலாஜா சோளிங்கர் ரோட்டில் அம்மூர் பஸ் நிறுத்தம் நெடுஞ்சாலையில் தி.மு.க. அரசை கண்டித்தும், தேர்தல் அதிகாரியை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து கோஷங்களை எழுப்பி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க.வினர் திடீரென ஆத்திரமடைந்து தேர்தல் நடத்தும் அலுவலரான சரவணனை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அம்மூர் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- பாம்பு திடீரென பைக்கின் உள்பகுதிக்குள் புகுந்தது.
- பாம்பை பிடிக்க முடியாததால் அந்தப் பகுதியில் இருந்த மெக்கானிக்கை வரவழைத்து பைக்கின் பாகங்களை ஒவ்வொன்றாய் கழற்றினர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அம்மனூர் பகுதியை சேந்தவர் சிவா. இவரது நண்பர் ரகு. இவர்கள் இருவரும் பைக்கில் நேற்று இரவு எஸ் ஆர் கேட் பகுதிக்கு வீட்டு தேவையான பொருட்களை வாங்க சென்றனர்.
பொருட்களை வாங்கிக் கொண்டு பைக்கில் ஏற முயன்றனர். அப்போது பைக்கிற்குள் பாம்பு ஒன்று புகுந்து சென்றது. இதனை பார்த்து அவர்கள் கூச்சலிட்டனர்.
பைக்கை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அப்போது பாம்பு திடீரென பைக்கின் உள்பகுதிக்குள் புகுந்தது. அதற்குள் அங்கு ஏராளமான கூட்டம் கூடியது.
கம்பு மற்றும் சில பொருட்களைக் கொண்டு பைக்கை சுற்றி தேடிப் பார்த்தனர்.
பாம்பை பிடிக்க முடியாததால் அந்தப் பகுதியில் இருந்த மெக்கானிக்கை வரவழைத்து பைக்கின் பாகங்களை ஒவ்வொன்றாய் கழற்றினர். ஆனால் பாம்பு அவர்களிடம் சிக்காமல் ஆட்டம் காட்டியது.
பின்னர் முன் பகுதியில் உள்ள கைப்பிடி நடுவில் உள்ள மேல் பாகத்தை கழட்டியபோது 2 அடி நீளமுள்ள பாம்பு அங்கு பதுங்கி இருந்தது. அதனை பிடித்து வெளியில் எடுத்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- வாகன ஓட்டிகள் அவதி
- பொதுமக்கள் வலியுறுத்தல்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த குளத்தேரி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் வழியாக சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, காவேரிப்பாக்கம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு புகுதிகளுக்கு பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்றுவருகின்றன.
விவசாயிகள் பொதுமக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த மேம்பாலத்தின் கான்கிரீட் உடைந்து சேதமடைந்து உள்ளது. சேதமடைந்து பல மாதங்களாகியும் சீர மைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இரவு நேரத்தில் இரு சக்கர வாக னங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று சூரை அருகே உள்ள தரைப்பாலத்திலும் சில பகுதிகளில் கான்கிரீட் உடைந்து உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதால் தரைப்பலத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
- நான்கு மாட வீதிகளில் சாமி உலா
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சோளிங்கர்:
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் எரும்பியப்பா சாற்றுமுறை உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி மற்றும் எரும்பியப்பா சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி மற்றும் எரும்பியப்பா சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தனித்தனி தங்க கேடயத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் நான்கு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .
- 11, 25-ந் தேதிகளில் நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டும் மையங்களில் வருகிற 11 - ந் தேதி மற்றும் 25-ந் தேதி ஆகிய 2 நாட்களில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் பல தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள் ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 - ம் வகுப்பு , எஸ்.எஸ்.எல்.சி. , பிளஸ் -2 , பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ. , டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
மேற்காணும் கல்வித்தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் முகாம் அன்று காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் பணி நியமன ஆணை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித் துள்ளார்.
- அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
திமுக சார்பில் இளைஞர்களுக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் வாலாஜாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார்.
திராவிட மாடல் பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் இளைஞரணி அமைப்பாளரும் ஆற்காடு எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் மற்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் ஆகியோர் கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாறு குறித்தும், கழக வரலாறு, சாதனைகள் பெருமைகள் மற்றும் மாநில சுயாட்சி குறித்து பேசினார்கள்.
நிகழ்ச்சியில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரை மஸ்தான், குமுதா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முரளி, முகமது அலி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷாவெங்கட், நகர செயலாளர் தில்லை, நகரமன்ற தலைவர்கள் ஹரிணி தில்லை, சுஜாதா வினோத், வாலாஜா நகரமன்ற துணைத் தலைவர் கமலராகவன், இளைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- 450-க்கும் மேற்பட்ட மாடு, ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த போளிப்பாக்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணன் வரவேற்றார்.
இந்த முகாமில் 450-க்கும் மேற்பட்ட மாடு, ஆடுகளுக்கு தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்க மருந்து வழங்குதல், சினை ஊசி போடுதல், தாது உப்பு வழங்குதல், மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் பரா மரிப்பு குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள், ஏரிபாசன தலைவர் மன்னார், கிளை செயலாளர் சரவணன், ஊராட்சி வார்டு உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பாலாற்றில் வீணாக சென்றது
- சீரமைக்க பொதுமக்கள் வலியுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பாலாற்றின் கரையோரமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் செல்லும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் பீறிட்டு வெளியேறி வீணாகி வருகின்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆற்காடு அருகே பாலாற்றின் கரையோரமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வாலாஜாப்பேட்டை, அரக்கோணம், காவேரிப்பாக்கம் ஆகிய முக்கிய நகரங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் முக்கிய பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் பீறிட்டு வெளியேறி வீணாகி வருகிறது. இந்த உடைப்பு காரணமாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
குடிநீர் பற்றாக்குறை பல பகுதிகளில் நிலவி வரும் சூழலில் குடிநீர் வீணாகி வருவதால் இதனை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






