சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் எரும்பியப்பா சாற்றுமுறை உற்சவம்

நான்கு மாட வீதிகளில் சாமி உலா ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் எரும்பியப்பா சாற்றுமுறை உற்சவம்
Published on

சோளிங்கர்:

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் எரும்பியப்பா சாற்றுமுறை உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி மற்றும் எரும்பியப்பா சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி மற்றும் எரும்பியப்பா சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தனித்தனி தங்க கேடயத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் நான்கு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

X

Maalai Malar
www.maalaimalar.com