என் மலர்
ராணிப்பேட்டை
- எம்.எல்.ஏ, ஆசிரியர்கள் மாணவிகளை பாராட்டினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு மாவட்ட அளவில் அதிக இடங்களில் முதல் இடம் பிடித்துள்ளனர்.
அவர்கள் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினார்.
இதில் ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக் மற்றும் பள்ளியின் கல்விக் குழு தலைவர், உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினர்.
- 2 பேர் கைது
- செல்போன், பைக் பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த பரித்தி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 19). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் அருகே நடந்து சென்று கொண் டிருந்தார்.
செல்போன், பணம் பறிப்பு
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி ஜீவாவிடம் இருந்து பணம் மற்றும் செல் போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இது குறித்து ஜீவா அரக்கோணம் டவுன் போலீஸ் நிலை யத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா வழக்குப் பதிவு செய்தார்.
இதைதொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரக்கோணம் - காஞ்சீபுரம் சாலையில் வாகன சோதனையின் போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் அரக்கோணம் கிருஷ் ணாம் பேட்டையை சேர்ந்த முகமது உசேன் (27), கருமாரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அருள்ராஜ் (24) என்பதும், ஜீவாவிடம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்த அவர்களை போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,000 மற்றும் செல்போன், கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- பொருட்கள் வாங்குவது போல் பேச்சுக் கொடுத்து துணிகரம்
- சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து விசாரணை
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த அவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் அதே பகுதியில் பங்க் கடை நடத்தி வருகிறார்.
அந்த பங்க் கடைக்கு பைக்கில் 2 பேர் வந்தனர். அப்போது மகேஸ்வரியிடம் பொருட்கள் வாங்குவது போல் பேச்சுக் கொடுத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை திடீரென பறித்தனர்.
அவர் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மின்னல் வேகத்தில் பைக்கில் 2 மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து மகேஸ்வரி அவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கலெக்டர் தகவல்
- விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ- மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கு இன்று முதல் இணையதளம் செயல்பட தொடங்கும்.
புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 6.12.22-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய பதிவுக்கு 15.12.22 முதல் இணையதளம் செயல்படத் தொடங்கும்.
புதிய விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship shcemes- யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாலாஜா தடுப்பணை அருகே அவரது உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ரேஷ்மா லதாவை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா லதா (வயது 27). டிப்ளமோ நர்சிங் படித்து முடித்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.
அப்போது ஆற்காடு அருகே உள்ள மேல்விசாரத்தை சேர்ந்த குமரன் (29) என்பவர் அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சென்றார். இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த காதலுக்கு ரேஷ்மா லதாவின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சென்னையிலேயே அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். சென்னையில் அழகு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த கோபிநாத் என்பவருக்கும் ரேஷ்மா லதாவுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்கள் சென்னையிலேயே குடியேறினர். 5 மாத கைக்குழந்தை உள்ளது.
அதே போல குமரனுக்கும் திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் ரேஷ்மாலதா, குமரன் கள்ளத்தனமாக சந்திக்க தொடங்கினர். இருவரும் அடிக்கடி போனில் பேசி தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
இது ரேஷ்மாலதாவின் கணவருக்கு தெரிய வந்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ரேஷ்மா லதா ராமாபுரம் கிராமத்திற்கு வந்து தங்கி இருந்தார். ஆத்திரமடைந்த அவரது கணவர் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டார்.
ரேஷ்மா லதா கணவரை பிரிந்த நிலையிலும் குமரனுடன் போனில் பேசி வந்தார்.
கடந்த 22-ந் தேதி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு ரேஷ்மா லதா வெளியே சென்றார். அவரை சந்திப்பதற்காக குமரன் பைக்கில் வந்தார். இருவரும் வாலாஜா தடுப்பணை அருகே உள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் சந்தித்தனர். முதலில் இருவரும் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து கணவருடன் பிரச்சினை உள்ளதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குமரனை ரேஷ்மா லதா வற்புறுத்தினார். இதில் ஆத்திரமடைந்த குமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ரேஷ்மாவை தாக்கி அவரது துப்பட்டாவை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
மேலும் எந்தவித ஆதாரங்களும் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக ரேஷ்மா லதா வைத்திருந்த செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு பெங்களூருக்கு சென்று தலைமறைவாகிவிட்டார்.
ரேஷ்மா லதாவை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
வாலாஜா தடுப்பணை அருகே அவரது உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர்.
வாலாஜா அணைக்கட்டு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரேஷ்மா லதா குமரனுடன் பைக்கில் வந்தது பதிவாகி இருந்தது. இதனை வைத்து குமரனை போலீசார் தேடி வந்தனர்.
செல்போன் சிக்னல் மூலம் அவர் பெங்களூருவில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் பெங்களூரு சென்று குமரனை கைது செய்தனர்.
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ரேஷ்மா லதாவை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போக்குவரத்து பாதிப்பு
- காவேரிப்பாக்கம் ஒன்றிய குழு கூட்டத்தில் பரபரப்பு
நெமிலி:
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒரு தலைபட்சமாக தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்குவதாக கூறி அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் காவேரிப்பாக்கம் ஒன்றிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென சென்னை-பெங்களூர் 6 வழிச்சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது. போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
- பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜாவை அடுத்த சாத்தம்பாக்கம் கிராம கால்நடை தீவ னம் பண்ணையையொட்டி வனத்துறைக்கு சொந்தமான ஓடையில் நீரில் அடையாளம் தெரியாத பெண் பிணம் கிடந் தது.
சிவப்பு சுடிதார் அணிந்திருந்த அந்த பெண் குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இறந்து பிணமாக கிடந்த பெண் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ராமநாதபுரம் காலனி காந்தி தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் ரேஷ்மலதா (வயது 27) என்பது தெரியவந்தது.
இவர் கடந்த மாதம் 22-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் மாயமானவராவார். இது குறித்து வெளியூரில் பணியாற்றும் ரேஷ்மலதாவின் கணவர் கோபிக்கு தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் ரேஷ்மலதாவின் உடல் குடும்பத் தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 16 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, மாதத்தின் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும்.
நேற்று நடைபெற்ற இம்முகாமில் கலந்த கொண்ட 132 நபர்களில் 78 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டையும், 27 நபர்களும் முதல் -அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பதிவும், மற்றும் 52 புதிய பயனாளிகளுக்கு யுடிஐடி போர்ட்டலில் பதிவும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 56 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியம் பதிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும், செயற்கை கால் வேண்டி 4 நபர்களும், அறிவுசார் குறைபாடுயவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவித்தொகை வேண்டி 19 நபர்களும், வங்கி கடன் வேண்டி 17 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 5 நபர்களும், சக்கர நாற்காளி வேண்டி 16 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இம்முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- அதிகாரி தகவல்
- சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டாரத் தில் நடப்பு சம்பா பட்டத்தில் இதுவரை 1,159-ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. இப்பட்டத்திற்கான பயிர் காப்பீடு கடந்த செப்டம்பர் 16-ந் தேதி முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கே கன மழை, முதல் மிக கனமழை பெய்து வருகிறது. எனவே பருவமழை மிக அதிகமாக பெய்து சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே, விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி விவசாயிகள் வருகிற 15-ந்தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேர பதிவை தவிர்த்து உடனடியாக விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி புதுப் பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்து கொள்ளு மாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய முன்மொழிவு விண்ணப் பத்துடன் கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங் கும் அடங்கல் சான்று (பசலி 1432) மற்றும் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், உள்ளிட் டவற்றை சமர்பித்து மேற்கண்ட ஆவணங்களின் புல எண். தற்போது பயிர் சாகுபடி செய்துள்ள பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம் என காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
- ரூ.40 ஆயிரம், மளிகை பொருட்களை அள்ளி சென்றனர்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காடு வீட்டு வசதி வாரிய பகுதி 2-ல் வசித்து வருபவர் நாகராஜன் (வயது 62). இவரது மனைவி வாணிஸ்ரீ. இவர்கள் மளிகை கடை நடத்தி வரு கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்ததும் நாகராஜன் மற்றும் வாணிஸ்ரீ ஆகியோர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். மீண்டும் நேற்று காலை கடையை திறக்க வந் துள்ளனர்.
அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கடை யில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் மளிகை பொருட் கள் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து நாகராஜன் ஆற்காடுடவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1997-ம் ஆண்டு 2-ம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்தவர்கள்
- சிறப்பாக பணிபுரிய போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பாராட்டு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
கடந்த 1997-ம் ஆண்டு 2-ம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்த 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த, சங்கர் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்), இளங்கோ (திமிரி போலீஸ் நிலையம்), மணி (வழைப்பந்தல் போலீஸ் நிலையம்) வேலுமணி (மது அமலாக்கப்பிரிவு) தியாக ராஜன் (ராணிப்பேட்டை போலீஸ் நிலையம்), பழனிவேல் (திமிரி போலீஸ் நிலையம்), சுரேஷ் பாபு (ஆற்காடு டவுன் போலீஸ் நிலையம்) வெங்கடேசன் (நெமிலி போலீஸ் நிலையம்), துறைவேலன் (அரக்கோணம் கிராமிய போலீஸ் நிலையம்), செல்வம் (திமிரி போலீஸ் நிலையம்), கவிதா, சித்ரா (ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்), புஷ்பா, வரலட்சுமி (ராணி ப்பேட்டை போலீஸ் நிலையம்), செல்வி (நெமிலி போலீஸ் நிலையம்), ஜான்சிராணி (அரக்கோணம் போலீஸ் நிலையம்), ஜோதி (அவலூர் போலீஸ் நிலையம்) ஆகிய 17 தலைமை காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் நேரில் அழைத்து வரும் காலங்களில் சிறப்பாக பணிபுரிய பாராட்டுக்க ளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஸ்வேஸ்வரய்யா (தலை மையிடம்) முத்துக்கருப்பன் (இணையவழி குற்றப் பிரிவு) மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் இராஜசங்கர் (மாவட்ட குற்ற ஆய்வு காப்பகம்) ஆகியோர் உடன் இருந்தனர்.
- கலெக்டர் ஆய்வு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் சமையல் தயார் செய்யும் சமையல் கூடங்கள் ஆகியவற்றினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள பழைய நூலக கட்டிடம் பழுத டைந்துள்ளதை பார்வை யிட்டு கட்டிடத்தை அகற்றி புதியக் கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி தலைவருக்கு கேட்டுக் கொண்டார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பா டுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தேவையான வசதிகள் மற்றும் குறைபா டுகளை கேட்டறிந்தார்கள்.
அப்போது மருத்துவர்கள் பற்றாக்குறைவு உள்ளது என தெரிவித்தார்கள். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வெளிப்புற நோயா ளிகள் பிரிவு கட்டிடப் பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கட்டிடத்தில் மழை தண்ணீர் தேங்காத வண்ணம் மேற்கூரைகள் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
தொடர்ந்து அருகில் இருந்த கால்நடை மருந்தகத்தினை பார்வை யிட்டு 25 ஆண்டுகள் முடிந்த கட்டிடத்தை அகற்றிட கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் அங்கு கால்நடை களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பதிவேடுகள், மருந்துகள் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், ஊராட்சி மன்றத் தலைவர் ஒன்றிய சரஸ்வதி குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.






