என் மலர்
உள்ளூர் செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம், செல்போன் பறிப்பு
- 2 பேர் கைது
- செல்போன், பைக் பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த பரித்தி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 19). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் அருகே நடந்து சென்று கொண் டிருந்தார்.
செல்போன், பணம் பறிப்பு
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி ஜீவாவிடம் இருந்து பணம் மற்றும் செல் போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இது குறித்து ஜீவா அரக்கோணம் டவுன் போலீஸ் நிலை யத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா வழக்குப் பதிவு செய்தார்.
இதைதொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரக்கோணம் - காஞ்சீபுரம் சாலையில் வாகன சோதனையின் போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் அரக்கோணம் கிருஷ் ணாம் பேட்டையை சேர்ந்த முகமது உசேன் (27), கருமாரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அருள்ராஜ் (24) என்பதும், ஜீவாவிடம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்த அவர்களை போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,000 மற்றும் செல்போன், கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






