என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 17 ஏட்டுகள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
    X

    17 தலைமை காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யனை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 17 ஏட்டுகள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு

    • 1997-ம் ஆண்டு 2-ம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்தவர்கள்
    • சிறப்பாக பணிபுரிய போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பாராட்டு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    கடந்த 1997-ம் ஆண்டு 2-ம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்த 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த, சங்கர் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்), இளங்கோ (திமிரி போலீஸ் நிலையம்), மணி (வழைப்பந்தல் போலீஸ் நிலையம்) வேலுமணி (மது அமலாக்கப்பிரிவு) தியாக ராஜன் (ராணிப்பேட்டை போலீஸ் நிலையம்), பழனிவேல் (திமிரி போலீஸ் நிலையம்), சுரேஷ் பாபு (ஆற்காடு டவுன் போலீஸ் நிலையம்) வெங்கடேசன் (நெமிலி போலீஸ் நிலையம்), துறைவேலன் (அரக்கோணம் கிராமிய போலீஸ் நிலையம்), செல்வம் (திமிரி போலீஸ் நிலையம்), கவிதா, சித்ரா (ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்), புஷ்பா, வரலட்சுமி (ராணி ப்பேட்டை போலீஸ் நிலையம்), செல்வி (நெமிலி போலீஸ் நிலையம்), ஜான்சிராணி (அரக்கோணம் போலீஸ் நிலையம்), ஜோதி (அவலூர் போலீஸ் நிலையம்) ஆகிய 17 தலைமை காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் நேரில் அழைத்து வரும் காலங்களில் சிறப்பாக பணிபுரிய பாராட்டுக்க ளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

    இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஸ்வேஸ்வரய்யா (தலை மையிடம்) முத்துக்கருப்பன் (இணையவழி குற்றப் பிரிவு) மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் இராஜசங்கர் (மாவட்ட குற்ற ஆய்வு காப்பகம்) ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×