என் மலர்
ராணிப்பேட்டை
- 1,234 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது
- 265 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா, அம்மூரை அடுத்த கீழ்வேலம் கிராமத்தை சார்ந்த மணி மகன் ஏழுமலை தனியார் தொழிற்சாலை ஊழியர் இவர் கடந்த 10.07.2020 அன்று காலை சுமார் 6.00 மணிக்கு வீட்டில் இருந்து சோளிங்கரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் கொடைக்கல் மோட்டூர் மூகாம்பிகை நகர் அருகில் செல்லும்போது எதிர் திசையில் வந்த எய்சர் லாரி இருசக்கர வாகனத்தில் சென்ற ஏழுமலை மீது மோதியதால் படுகாயம் அடைந்த ஏழுமலை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
அவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும், சஞ்ஜனாஸ்ரீ என்ற மகளும் திவ்யதர்ஷன் மகனும் அவரது தாயார் லட்சுமி ஆகிய 4 பேரும் சேர்ந்து ராணிப்பேட்டை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்க்கு ரூ.25,00,000 (ரூபாய் இருபத்தி ஐந்து லட்சம்) எய்சர் லாரி காப்பீடு தொகையை தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவானது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்அண்ணாதுரை ஆஜரானார்.நேற்று மக்கள் நீதிமன்றத்தில் 1,234 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதில் 265 வழக்குகள் தீர்வு காணப்பட்டன.
அதில் வாகன விபத்து வழக்குகள் செக் மோசடி வழக்குகள், சிறு வழக்குகள் சிவில் வழக்குகள் என மொத்தம் 265 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5கோடியே 35 லட்சம் வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்திய நீதிபதிகள் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ். ஜான் சுந்தர்லால் சுரேஷ் சார்பு நீதிபதி மருத சண்முகம் மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நவீன் துரைபாபு ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். இதில் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் கலந்து கொண்டனர்.
- சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி நிறைவு விழா
- டி.ஐ.ஜி. சாந்தி, ஜி.ஜெய்தேவ் பங்கேற்பு
அரக்கோணம்:
அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் 42 பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி நிறைவு விழா பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய முதல்வர் டி.ஐ.ஜி. சாந்தி ஜி ஜெய்தேவ் கலந்து கொண்டு வீரார்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு பேசினார்.
அப்போது அவர் இன்று ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம் பம். உண்மைத் தன்மை, விசுவாசம், நம்பகத்தன்மையின் நெறிமுறைகள், தைரியம், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகி யவற்றின் மதிப்புகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் வழிகாட் டும் கலங்கரை விளக்கமாக மாற வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து பயிற்சியின்போது சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள், கோப்பை வழங்கி பாராட்டினார். பயிற்சி நிறைவு செய்த வீரர்கள் நாட்டின் பல இடங்களில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் விண்வெளி மையங்கள் போன்ற இடங்க ளுக்கு பணிக்கு செல்கிறார்கள்.
நிகழ்ச்சியில் அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் பயிற்சி மைய கமாண்டன்ட், மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
- 22 பேர் காயம்
- வளைவில் திரும்பிய போது மோதியது
சோளிங்கர்:
வேலூரில் இருந்து திருத்தணிக்கு அரசு பஸ் சென்று கொண்டிரு்தது. சோளிங்கரை அடுத்த கொடைக்கல்- பெருங்காஞ்சி ஏரிக் கரை இடையே உள்ள வளைவு பகுதியில் சென்றபோது, சோளிங்க ரில் இருந்து வாலாஜா நோக்கி சுற்றுலா பஸ் ஒன்று வந்தது.
இந்த 2 பஸ்களும் மோதி க்கொண்டன. இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த 22 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சோளிங் கர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்ப ட்டனர்.
அவர்களில் அரசு பஸ் டிரைவர் கண்ணன், முருகேசன், பர்வேஸ், பரமேஸ்வரி ஆகிய 4 பேர் வேலூர் அரசு மருத்து வமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் களை அரக்கோணம் உதவி போலீஸ்சூப்பிரண்டு யாதவ் கிரிஷ், சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
- போலீசார் விசாரணை
- இரவில் ரோந்து பணியில் ஈடுபட பொதுமக்கள் வலியுறுத்தல்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில் உப்பர ந்தாங்கல், ராஜபாளையம் அய்யம்பே ட்டைசேரி உள் ளிட்ட கிராமங்கள் உள்ளன. உப்பரந்தாங்கல் பஸ்நிறுத்தம் அருகே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
அதேபோன்று ராஜ பாளையம் பஸ் நிறுத்தம் அரு கில் கெங்கையம்மன் கோவி லும், அய்யம்பேட்டைசேரி பஸ் நிறுத்தம் அருகில் கன் னிக்கோவிலும் உள்ளன.
பஸ் நிறுத்தம் அருகில் கோவில்கள் இருப்பதால் வெளியூர் செல்லும் மாண வர்கள், தொழிலாளர்கள், பயணி கள் அனைவரும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு, உண்டியல்களில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள்.
இந்தநிலையில் 3 கோவில்களிலும் மர்ம கும்பல் சம்பவத்தன்று இரவு உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதனை நேற்று காலையில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.
நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கோவில்களின் உண்டியல் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றது அப்பகுதி பொதுமக் கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 20 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 31). ஒடிசாவில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக வேலை செய்து வந்தார். கவர் 20 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது மனைவி மற்றும் 2 மகள்கள் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஜானகிராமன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைபார்த்த அந்தப்பகுதி பொதுமக்கள் திமிரி போலீசார் மற்றும் அவரது மனைவி ராசாத்திக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஜானகிராமனின் தற்கொலைக்கான 'காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயணத்தின் போது 22 பவுன் தாலி செயின் அறுந்து விழுந்தது
- நேர்மையாக செயல்பட்ட டிரைவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன்ஹால் தெருவை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 34). இவர் நேற்று திண்டிவனம் செல்வதற்காக அரக்கோணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து புதுச்சேரி, செல்லும் பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 22 பவுன் தாலி செயின் அறுந்து விழுந்துள்ளது.
இதனை ஆட்டோ டிரைவர் தண்டபாணி பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் பிரியதர்ஷினியிடம் தெரிவிப்பதற்குள் பஸ் புறப்பட்டு சென்றுவிட்டது.
அதைத்தொடர்ந்து தாலி செயினை மீட்ட ஆட்டோடிரைவர், அதனை அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். செயினை தவறவிட்ட பயணி சென்ற பஸ் விவரத்தையும் தெரிவித்தார்.
உடனே சப்- இன்ஸ்பெக்டர் தாசன் சேந்தமங்கலம் அருகே சென்று கொண்டிருப்பதை அறிந்து பஸ்சில் பயணம் செய்த பிரியதர்ஷினியை வரவழைத்து விசாரணை நடத்தி தாலி செயினை அவரிடம் ஒப்படைத்தார். மேலும், நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ டிரைவர் தண்டபாணிக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.
- பழுது பார்த்த போது விபரீதம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த பத்மாபுரம் பகுதியில் பைக் ேஷாரும் உள்ளது. அந்த ேஷாருமில் ஒரு பைக் பழுது ஏற்பட்டதை சரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தீபற்றி எரிந்து முழுவதுமாக சேதமடைந்து. தகவலறிந்த சோளிங்கர் தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் தலைமையில் வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் 1 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி (48 வயது). இவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தனது மகன் சதீஷ்குமாருடன் பைக்கில் கூடலூருக்கு சென்றார். அப்போது இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம கும்பல் சாவித்திரியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட சாவித்திரி தாலி செயினை கெட்டியமாக பிடித்துக் கொண்டார். ஆனாலும் விடாமல் மர்ம கும்பல் 4 பவுன் தாலி செயினை பறித்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து சாவித்திரி சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொட்டு மழையிலும் திரளான பக்தர்கள் பங்கேற்பு
- பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ சபரி சாஸ்தா பூஜா சமிதியின் அய்யப்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரி்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று பாலாற்றங்கரையில் இருந்து மாலை அணிந்திருந்த அய்யப்ப பக்தர்கள் 101 குளத்தில் ஜலம் எடுத்து வந்து விநாயகர் பூஜை புண்யாஹ வாசனம், கணபதி பூஜை, லட்சுமி நவகிரக ஹோமம், கோ பூஜை, மஹா பூர்ணஹீதி தீபாராதணை, முதல் கால பூஜை நடந்தது.
இதனை தொடர்ந்து இன்று காலை 7மணியளவில் மங்கள இசையுடன் பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை ஹோமம் நடைபெற்று கலச புறப்பாடு தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு வெகு விமர்சியாக கும்பாபிஷேக விழா நடந்தது.பின்னர் அய்யப்ப சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்கள் பங்கேற்பு
கும்பாபிஷேக விழாவில் வாலாஜா தன்வந்திரி பீடம் முரளிதர ஸ்வாமிகள், சித்தஞ்சி சித்தர் பீடம் மோகனானந்தா ஸ்வாமி, சிப்காட் ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவில் குருசாமி ஜெயசந்திரன் மற்றும் ஆலய நிர்வாகிகள் ஜெ.பி.சேகர், கிருஷ்ணன், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகரமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.எஸ்.சங்கர், குமார், அப்துல்லா, கோபிகிருஷ்ணன், ஜோதி சேதுராமன், நரேஷ் மற்றும் அனைத்து குருசாமிகள் அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நடந்தது
- எம்.எல்.ஏ.க்கள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சோளிங்கர் எம்.எல்.ஏ. ஏ.எம்.முனிரத்தினம் மற்றும் அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவி ஆகியோர் வழங்கியுள்ள 10 மனுக்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்து துறைகள் தங்களின் தலைமை இடத்திற்கு அறிக்கையை முறையாக தயார் செய்து வழங்கிட வேண்டும் எனவும், அனைத்து திட்டங்களும் அரசின் மூலம் ஒப்புதல் பெரும்படியாக முழு மையாக ஆராய்ந்து என்ன பிரச்சினைகள் அதனை நிவர்த்தி செய்வதால் பொது மக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், மாவட்ட அளவில் முடிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை அரசின் மூலம் ஒப்புதழ் பெற உரிய கருத்துருக்களுடன் அனுப்பி வைக்க வேண்டுமெனவும், இதில் ஏதேனும் பிரச்சி னைகள் இருந்தால் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் துறைச்சார்ந்த அலுவ லர்களை கேட்டுக் கொண்டார்கள்.
திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வாகன சோதனையின் போது பிடிப்பட்டனர்
- கார் மற்றும் 1 கிலோ கஞ்சா பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் - காஞ்சிபுரம் ரோடு ரெயில்வே மேம்பாலம் பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சால மன்ராஜா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது அந்தவழியாக பதிவு எண் இல்லாத கார் வந்தது. அதனை மடக்கி காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அரக்கோணத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 25) மற்றும் சிவ பிரகாசம் (35), சுரேஷ் (22) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து காரில் சோதனை செய்ததில் 1கிலோ 300 கிராம் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து 3 பேரையும் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் சசிகுமார் அரக்கோணம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்ததும், சிவபிரகாசம் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
- பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- வாலாஜா அரசு கல்லூரி அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது
வாலாஜா:
வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே சென்னை வேலூர் நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு சுமார் 3 மணியளவில் தாம்பரத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது.
அப்போது வாலாஜா அரசு கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது பணி மூட்டத்தினால் அரசு பஸ் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் ஏறி நின்று விபத்துக்குள்ளானது.
இதில் பஸ் முன் பக்க சக்கரங்கள் கழண்டு தனியாக விழுந்தது. இந்த விபத்தில் பஸ் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு சிறிது காயங்ளுடன் உயிர் தப்பினர்.
இதையடுத்து விபத்துக்குள்ளான அரசு பஸ்சை தனியார் பொக்லைன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






