என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sum insured by private insurance company"

    • 1,234 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது
    • 265 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா, அம்மூரை அடுத்த கீழ்வேலம் கிராமத்தை சார்ந்த மணி மகன் ஏழுமலை தனியார் தொழிற்சாலை ஊழியர் இவர் கடந்த 10.07.2020 அன்று காலை சுமார் 6.00 மணிக்கு வீட்டில் இருந்து சோளிங்கரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் கொடைக்கல் மோட்டூர் மூகாம்பிகை நகர் அருகில் செல்லும்போது எதிர் திசையில் வந்த எய்சர் லாரி இருசக்கர வாகனத்தில் சென்ற ஏழுமலை மீது மோதியதால் படுகாயம் அடைந்த ஏழுமலை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.

    அவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும், சஞ்ஜனாஸ்ரீ என்ற மகளும் திவ்யதர்ஷன் மகனும் அவரது தாயார் லட்சுமி ஆகிய 4 பேரும் சேர்ந்து ராணிப்பேட்டை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்க்கு ரூ.25,00,000 (ரூபாய் இருபத்தி ஐந்து லட்சம்) எய்சர் லாரி காப்பீடு தொகையை தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவானது.

    இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்அண்ணாதுரை ஆஜரானார்.நேற்று மக்கள் நீதிமன்றத்தில் 1,234 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதில் 265 வழக்குகள் தீர்வு காணப்பட்டன.

    அதில் வாகன விபத்து வழக்குகள் செக் மோசடி வழக்குகள், சிறு வழக்குகள் சிவில் வழக்குகள் என மொத்தம் 265 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5கோடியே 35 லட்சம் வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்திய நீதிபதிகள் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ். ஜான் சுந்தர்லால் சுரேஷ் சார்பு நீதிபதி மருத சண்முகம் மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நவீன் துரைபாபு ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். இதில் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் கலந்து கொண்டனர்.

    ×