என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ சபரி சாஸ்தா அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.
ஸ்ரீ சபரி சாஸ்தா அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
- கொட்டு மழையிலும் திரளான பக்தர்கள் பங்கேற்பு
- பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ சபரி சாஸ்தா பூஜா சமிதியின் அய்யப்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரி்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று பாலாற்றங்கரையில் இருந்து மாலை அணிந்திருந்த அய்யப்ப பக்தர்கள் 101 குளத்தில் ஜலம் எடுத்து வந்து விநாயகர் பூஜை புண்யாஹ வாசனம், கணபதி பூஜை, லட்சுமி நவகிரக ஹோமம், கோ பூஜை, மஹா பூர்ணஹீதி தீபாராதணை, முதல் கால பூஜை நடந்தது.
இதனை தொடர்ந்து இன்று காலை 7மணியளவில் மங்கள இசையுடன் பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை ஹோமம் நடைபெற்று கலச புறப்பாடு தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு வெகு விமர்சியாக கும்பாபிஷேக விழா நடந்தது.பின்னர் அய்யப்ப சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்கள் பங்கேற்பு
கும்பாபிஷேக விழாவில் வாலாஜா தன்வந்திரி பீடம் முரளிதர ஸ்வாமிகள், சித்தஞ்சி சித்தர் பீடம் மோகனானந்தா ஸ்வாமி, சிப்காட் ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவில் குருசாமி ஜெயசந்திரன் மற்றும் ஆலய நிர்வாகிகள் ஜெ.பி.சேகர், கிருஷ்ணன், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகரமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.எஸ்.சங்கர், குமார், அப்துல்லா, கோபிகிருஷ்ணன், ஜோதி சேதுராமன், நரேஷ் மற்றும் அனைத்து குருசாமிகள் அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






