என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tali gripped the chain tightly."

    • பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி (48 வயது). இவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தனது மகன் சதீஷ்குமாருடன் பைக்கில் கூடலூருக்கு சென்றார். அப்போது இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம கும்பல் சாவித்திரியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட சாவித்திரி தாலி செயினை கெட்டியமாக பிடித்துக் கொண்டார். ஆனாலும் விடாமல் மர்ம கும்பல் 4 பவுன் தாலி செயினை பறித்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து சாவித்திரி சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×