என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள்"

    • ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நடந்தது
    • எம்.எல்.ஏ.க்கள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சோளிங்கர் எம்.எல்.ஏ. ஏ.எம்.முனிரத்தினம் மற்றும் அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவி ஆகியோர் வழங்கியுள்ள 10 மனுக்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்து துறைகள் தங்களின் தலைமை இடத்திற்கு அறிக்கையை முறையாக தயார் செய்து வழங்கிட வேண்டும் எனவும், அனைத்து திட்டங்களும் அரசின் மூலம் ஒப்புதல் பெரும்படியாக முழு மையாக ஆராய்ந்து என்ன பிரச்சினைகள் அதனை நிவர்த்தி செய்வதால் பொது மக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், மாவட்ட அளவில் முடிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை அரசின் மூலம் ஒப்புதழ் பெற உரிய கருத்துருக்களுடன் அனுப்பி வைக்க வேண்டுமெனவும், இதில் ஏதேனும் பிரச்சி னைகள் இருந்தால் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் துறைச்சார்ந்த அலுவ லர்களை கேட்டுக் கொண்டார்கள்.

    திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×