என் மலர்
ராணிப்பேட்டை
- அரக்கோணத்தில் இருந்து 2 குழுவினர் சென்றனர்
- 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப் பட்டுள்ளது
அரக்கோணம்:
பல்வேறு மீட்புப் பணிகளுக்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தலா 15 பேரை கொண்ட இரு குழுவினர், திங்கள்கிழமை கேரள மாநிலம், சபரிமலைக்கு சென்றனர்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள நகரிகுப் பத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படைத்தளம் உள்ளது. இங்கி ருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகம், கேர ளம், ஆந்திரம் மற்றும் புதுவை, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்க ளில் பேரிடர் ஏற்படும் காலங்களிலும், முன்னெச்சரிக்கைப் பணிக் காகவும் அந்தந்த மாநிலங்களின் கோரிக்கைக்கு ஏற்ப தேசிய பேரி டர் மீட்புப் படையினர் அந்தப் பகுதிகளுக்குச் செல்வர்.
இந்த நிலையில், வரும் 17-ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 20-ஆம் தேதி வரை மகரவிளக்கு காலத்தை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்க ளில்இருந்துலட்சக்கணக்கான பக் தர்கள் இருமுடி கட்டிச்செல்வர்.
இதற்காக, சபரிமலையில் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை யினரை அனுப்புமாறு கேரள அரசு, அரக்கோணம் தேசிய பேரி- டர் மீட்புப் படைத்தளத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தது.
இதையடுத்து, படைப் பிரிவின் கமாண்டண்ட் அருண் உத்தரவின் பேரில், ஆய்வாளர் சுரேஷ் தலை மையில், தலா 15 பேர் கொண்ட இரு குழுவினர் திங்கள்கிழமை சாலை மார்க்கமாக கேரள மாநி லம், பத்தனம்திட்டா மாவட்டம், பம்பைக்கு புறப்பட்டுச் சென்ற னர். இவர்களில் ஒரு குழு பம்பை யிலும், மற்றொரு குழு சபரிமலை யிலும் முகாமிட உள்ளனர்.
இவர்கள், பேரிடர் மீட்புக் கான அதிநவீன உபகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், முதலுதவி சிகிச்சைக்கான மருத் துவ உபகரணங்கள், பாதுகாப்புக் கான உபகரணங்களுடன் புறப்பட் டுச் சென்றுள்ளனர்.
மேலும், கேரள அரசு மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வா கத்துடன் தொடர்ந்து தொலைத் தொடர்பில் இருப்பதற்காக, அரக் கோணம் படைத் தளத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப் பட்டுள்ளது.
தேவைப்பட்டால் கூடுதலாக படை வீரர்கள் அனுப்பி வைக்கப் படுவார்கள் என்று தேசிய பேரிடர் மீட்புப் படைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்
- அதிகாரிகள் உடன் இருந்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் டவுன்ஹால் 4-வது தெருவை சேர்ந்தவர் பிரியதர்சினி. இவர் கடந்த 11-ந் தேதி அரக்கோணம் பஸ் நிலையத்தில் தனது 2 பவுன் தாலி செயினை தவற விட்டார்.
அப்போது அதனை கண்ட ஆட்டோ டிரைவர்களான தண்டபாணி மற்றும் ரமேஷ் ஆகியோர் கீழே கிடந்ததாலி செயினை எடுத்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைய டுத்து போலீசார் பிரியதர்சினிக்கு தகவல் தெரிவித்து, அவரை நேரில் வரவழைத்து அவரிடம் செயினை ஒப்படைத்தனர். தாலி செயினை பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ டிரை வர்களான தண்டபாணி மற்றும்ரமேஷ் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நேரில் அழைத்து, அவர்களின் நேர்மையை பாராட்டி பரிசு வழங்கினார்.
அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா (தலை மையிடம்), முத்துகருப்பன் இணையவழி குற்றப்பிரிவு), அரக்கோணம்துணை போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் ஆகியோர் உடனிருந்தனர்.
- 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- கவுன்சிலர்களுக்கு தெரியாமல் டெண்டர் விடுவதாக குற்றச்சாட்டு
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார் தலை மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பழுதடைந்துள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையங்களை இடித்து அகற் றுதல், பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுதல், பல்வேறு ஊராட்சிகளில் ஜல்லி சாலை, கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை அமைத்தல், கலையரங்கம் அமைத்தல், புதிய ஆழ் துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிராம சபை கூட்டம் நடைபெறும் போது, அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரி விப்பது இல்லை எனவும் ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு தெரியாமல் சில பணிக்கு டெண்டர்கள் விடுவதாகவும் குற்றம் சாட்டினார்கள்.
தொடர்ந்து பேசிய ஒன்றியக் குழு தலைவர் தற்போது மழை காலம் என்பதால் ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகங்களும் பேரிடர் பணிக்கு தயாராக இருக்க வேண்டும், கிராம சபை கூட்டங்கள் குறித்து ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனசேகரன், குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடந்தது
- மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த வேலூர் பேட்டை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதனையொட்டி பள்ளி மாணவ-மாண விகளுக்கு பல்வேறு போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.
வேலூர் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சஞ்சிவ் குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மரம் நடுதலின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு, போக்சோ சட்டம், குழந்தை தொழிலாளர் தடை, குழந்தை திருமண தடை, அரசு நலத்திட்ட உதவிகள் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- பால் விலை உயர்வை கண்டித்து நடத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகர பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து வாலாஜா பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு நகர தலைவர் காந்தி தலைமை தாங்கி னார்.ஆர்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், பால் விலை உயர்வு,மின்சார கண்டன உயர்வு,சொத்து வரி உயர்வு கண்டித்தும் விலை உயர்வுகளை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் சதீஷ், மாவட்ட செயலாளர் ஹேமாவதி, ஆன்மீக பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் நாகப்பன், அரசு தொடர்பு பிரிவு நிர்வாகி சஞ்ஜெய் லோகேஷ்,நகரமன்ற உறுப்பினர் சீனிவாசன், நகர பொது செயலாளர் சரவணன், நகர பொருளாளர் சுரேஷ் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்ட த்தில் கலந்து கொண்டனர்.
- இயற்கை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பணியினை மேற்கொண்டதற்காக வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் முழுக்க 288 கிராமப் பஞ்சாயத்துகள், 8நகரப் பஞ்சாயத்துகள் மற்றும் 6 நகராட்சிகளை உள்ளடக்கிய 2,500 சதுர கிலோமீட்டர் விரிவுள்ள இடங்களில் பயணித்து 186.9 டன் (186917.70 கிலோகிராம்) பிளாஸ்டிக் கழிவுகளை 3 மணி நேரத்தில் சேகரித்து சுத்தமான, சுகாதாரமான மாவட்டத்தினை உருவாக்கி "3 மணி நேரத்தில் 2500 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு பயணித்து மிக அதிக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த நிகழ்வு" எனும் உலக சாதனை படைக்கப்பட்டது.
முன்பு சுவிட்சர்லாந்து நாட்டில் 3 மணி நேரத்தில் 128.7 டன் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கி படைக்கப்பட்ட உலக சாதனையை முறியடித்த இந்த நிகழ்வில் 96,000கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், கவுன்சிலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அர்பணிப்புடன் ஈடுபட்டார்கள்.
தொடர்ந்து 03-10-2022 அன்று ஒரே நாளில் 5 மணி நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் 288 பஞ்சாயத்துகளில் 52,81,647 பனை விதைகளை 880 இடங்களில் நட்டு வைத்து "5 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் மிக அதிகமான பனை விதைகள் நடவு செய்த உலக சாதனை" எனும் உலக சாதனை படைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள், குட்டைகள் மற்றும் சாலையோரங்களில் இந்த பனை விதைகளனைத்தும் நடப்பட்டன.3 மாதங்கள் இந்த நிகழ்விற்காக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் 81,000கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், கவுன்சிலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அர்பணிப்புடன் ஈடுபட்டார்கள்.
இந்த இரண்டு உலக சாதனைகளும் இயற்கை மற்றும் பசுமையைக் காக்கும் விதமாகவும், மனித சமுதாயத்தை உள்ளடக்கிய உலகின் அனைத்து உயிர்களுக்கும் நன்மை விளைவிப்பதாகவும், வருங்கால சந்ததிகளுக்கும் பயனளிக்கும் படி மிகவும் உயர்ந்த நோக்கத்தில் படைக்கப்பட்டுள்தை பாராட்டி எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் ரபி பால்பாக்கி, அட்ஜூ கேட்டர் நௌரா அவர்களும் இணைந்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து கெளரவித்தார்கள்.
மேலும், மிக உயரிய நோக்கம் கொண்ட உலக சாதனைகளை உலகிற்கு அடையாளப்படுத்தி கௌரவிப்பதற்கு எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் கடமைப்பட்டுள்ளது எனவும், அதனை பெருமையாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவிக்கையில்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய இந்த இரு தொலை நோக்குத் திட்டங்களையும் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின் படி நிறைவேற்றுவதே இந்த சாதனைகளின் நோக்கம் என்றார்.
தொடர்ந்து ரபி பால்பாக்கி தெரிவிக்கையில்: 3 வருடங்களுக்கு ஒருமுறை உலக அளவில் "ஐகானிக் விருதுகள்" வழங்குவதை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது.ராணிப்பேட்டை நிர்வாகம் 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மூன்று மணி நேரத்தில் மிகப்பெரிய பிளாஸ்டிக் சேகரிப்பு இயக்கம் எனும் தலைப்பில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பிரிவில் ஐகானிக் 2022 விருதிற்கு தகுதி பெற்றுள்ளது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.அதற்கு வருகின்ற 2023 ஆம் ஆண்டின் மத்தியில் துபாய் நாட்டில் நடைபெறும் ஐகானிக் விருது விழாவிற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு அழைப்பு விடுத்தார்கள்.கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-
இயற்கையை பாதுகாத்திடும் வகையில் மாபெரும் இரண்டு உலக சாதனை நிகழ்வுகளை அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து மாவட்டத்தில் மேற்கொண்டோம்.அனைவருமே மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். அனைவரின் ஒத்துழைப்பினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்விற்கு அங்கீகாரம் அளித்திடும் வகையில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஐகானிக் 2022 உலக விருது தேர்வு செய்தமைக்கு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நிகழ்வுகள் சாதனைக்காக மட்டுமே மேற்கொள்ளப்படவில்லை வருங்கால சந்ததியினருக்கு நல்ல சுற்றுச்சூழலை இந்த பூமியில் வழங்கிட அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுமையாக தவிர்க்கவும் மேற்கொ ள்ளப்பட்டது.தொடர்ந்து இது போன்ற இயற்கை பாது காப்பதும் மேம்படுத்துவதும் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார் மற்றும் செயற்பொறியாளர், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கு எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரபிபால்பாக்கி, அட்ஜீடி கேட்டர் நெளரா ஆகியோர் அழைப்பு விடுத்த போது எடுத்த படம் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், திட்ட இயக்குனர் லோகநாயகி பங்கேற்றனர்.
- போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- விசாரணையின் போது திருடன் தப்பி ஓட்டம்
நெமிலி:
பாணாவரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள பாறைமேடு பகுதியில் சுமாா் 20 -க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் கூலி வேலை செய்யும் ஏழுமலை என்பவரின் வீட்டில் மா்மநபா் ஒருவர் நேற்று வீட்டின் வாசற்படியில் நுழைந்து வீட்டை நோட்டமிட்டார். வீட்டில் இருந்த ஏழுமலையின் பிளஸ்-2 படிக்கும் மகள் மா்மநபரை நீங்கள் யார்? என்ன வேண்டும் என கேட்டுள்ளாா்.
அதற்கு அந்த மா்மநபா் எதையும் கூறாமல் நின்றார் பக்கத்து வீட்டின் அருகே இருந்த ஏழுமலையின் மனைவிஅங்கு வந்தார். அவரை கண்டதும் மர்ம நபர் தப்பி ஓடி அருகில் இருந்த குளத்தில் குதித்து புதரில் மறைந்துள்ளாா்.
அப்பகுதி மக்கள் ஓடிவந்து மறைந்த மா்ம நபரை தேடினார். நீண்ட நேரத்திற்கு பிறகு மக்கள் அவனை பிடித்து கைகால்களை கட்டி போட்டனர். இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
ஆனால் ஒரு மணிநேரம் கழித்து போலீசார் வந்து மா்மநபரை கைகால்கள் கட்டவிழ்து விசாரித்தனர். அப்போது மா்மநபா் மீண்டும் தப்பி தலைமறைவாகி விட்டார்.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இதுகுறித்து முறையிட்டுள்ளனா்.
ஆனால் போலீசார் முறையான பதில் அளிக்காமல் அவர்களை வெளியேற்றினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
- தமிழரசி வீட்டின் தரையில் கழுத்தில் புடவை இறுகி வாய், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
- குழந்தை தனது தாயின் மீது அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட வள்ளியம்மாள் கூச்சலிட்டார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன். சரக்கு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தமிழரசி (வயது 21).
இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது தமிழரசி 7 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழரசி செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்த கணவர் ஜானகிராமன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 நாட்களாக தமிழரசி தனது தாய் வள்ளியம்மாளிடம் செல்போன் மூலம் பேசாமல் இருந்துள்ளார்.
நேற்று காலை வேறு ஒருவருடைய செல்போனில் இருந்து தமிழரசி தனது தாயிடம் விரக்தியில் பேசியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த வள்ளியம்மாள் நேற்று மதியம் பாலுசெட்டி சத்திரம் தாமல் ஊராட்சி தைப்பாக்கம் பகுதியில் இருந்து தனது மகளை பார்க்க தாழனூர் வந்துள்ளார். அவர் வீட்டின் முன்பக்க கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது மகள் தமிழரசி வீட்டின் தரையில் கழுத்தில் புடவை இறுகி வாய், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
அவரது குழந்தை தனது தாயின் மீது அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட வள்ளியம்மாள் கூச்சலிட்டார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர்.
இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தமிழரசி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து கணவர் ஜானகிராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் இளம்பெண் உயிரிழப்பு குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
- போலீசார் பத்திரமாக மீட்டனர்
- சமூக வலைதளங்களில் வீடியோ பரவல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கரியகுடல் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கள்ளாறு, சிறுணமல்லி தரைப்பாலத்தில் கனமழை காரணமாக அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் தரைப்பாலத்தில் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரக்கோணத்தில் இருந்து நெமிலி நோக்கி அவ்வழியாக மது போதையில் வந்த நபர் தண்ணீரின் ஆபத்தை அறியாமல் தரைப்பாலத்தில் நடந்து சென்றார்.
பாலத்தின் நடுவே வந்து நின்றுகொண்டு, செய்வது அறியாமல் தவித்தார்.
நெமிலி தனிப்பிரிவு போலீசார் தங்கராஜ் மற்றும் காவலர்கள் பிலால் அகமது, முரளி ஆகியோர் சென்று அந்த நபரை பத்திரமாக மீட்டு வந்தனர். அவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இந்த காட்சியை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வடிலைதளத்தில் பரவவிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.
- பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு பைரவருக்கு 1000 கிலோ விபூதி அபிஷேகம் நடக்கிறது
- இன்று சிறப்பு ஹோமம், பூஜைகள் நடந்தது
வாலாஜா:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, ஐப்பசி 25-ம்தேதி முதல் வருகிற மாசி மாதம் 7-ம்தேதி வரை தொடர்ந்து 101 நாட்கள் காலை, மாலையில் நடைபெற உள்ள யாகம் நேற்று தொடங்கியது.
அதன்படி நேற்று முதல் பிப்ரவரி 19-ம்தேதி முடிய ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய 3 ஹோமங்களும் தினந்தோறும் என 101 நாட்களும் நடைபெறுகிறது.
2-வது நாளான இன்று ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.மேலும் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு
ஸ்ரீ வினாயகர் தன்வந்திரிக்கும், ஸ்ரீ தன்வந்திரி வினாயகருக்கும் சிறப்பு ஹோமமும், பால், பன்னீர், திரவிய பொடி, மஞ்சள், சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.வருகிற ஐப்பசி 30-ம்தேதி, நவம்பர் 16ம்தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி மற்றும் கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்டகால மகா பைரவருக்கு 1000 கிலோ விபூதி அபிஷேகமும், 64 பைரவர் ஹோமங்கள், மகா கணபதி ஹோமம் ஆகியவையும் காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது.
மேலும் 16-ம்தேதி அகில உலக புரோகிதர்கள் மற்றும் புரோகிதர்களின் குடும்ப நலன் கருதி சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெறுகிறது.
- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலையை எதிர்த்து நடந்தது
- நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
வாலாஜாபேட்டை காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை காந்தி சிலை அருகே நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ அசேன் தலைமை தாங்கினார். நகர தலைவர் மணி, மாவட்ட நிர்வாகி நியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பதை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி காங்கிரஸார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 40-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
- தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக பேசினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி நிலைமுகவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று இரவு ராணிப்பேட்டை ஒட்டல் ஜிகே மில்லினியாவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார்.
அப்போது திமுக தலைவரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 68 ஆயிரத்து 36 பூக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இனிவரும் காலங்களில் பூத்துக்கான குழு முழுமையாக அமைக்கப்படும். பூத் கமிட்டி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் குழுவாக இல்லாமல் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றும் அணியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
பூட் கமிட்டி அமைத்த பிறகு அதில் உள்ள ஒவ்வொருவரும் 25 வீடுகளுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு வருக்கும் 100 ஓட்டுகள் என செயல்பட வேண்டும்.நான் செல்லும் இடங்களில் எல்லாம் பல ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறேன். மக்கள் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியை நாங்கள் பார்க்கிறோம்.
இந்த மக்களை ஓட்டு சாவடி வர வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது.ஓட்டு குறைந்தால் உங்களைத் தான் கேட்பேன் அதிகமானால் உங்களைத்தான் பாராட்டுவேன். 234 தொகுதிகளிலும் பூத்தமிட்டியை முழுமையாக அமைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கைப்பற்றுவது மிக மிக எளிது.அடிக்கடி உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வேன் இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி பேசியதாவது:-
தமிழகத்தில் நம் மாவட்டம் அனைத்து விதத்திலும் சிறந்து விளங்குகிறது.
அனைவரும் சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களை மனமாற வாழ்த்துகிறேன், நன்றி செலுத்துகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அயராது உழைப்போம்.யாரை நம் முதல்வர் சொல்லுகிறாரோ அவருக்கு சிறப்பாக உழைத்து வெற்றி வாகை சூடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட துணை செயலாளர் அமுதா, ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றியக்குழுதலைவர் சேஷா வெங்கட், நகர செயலாளர் பூங்காவனம், வாலாஜா நகர செயலாளர் தில்லை, அம்மூர் பேரூர் செயலாளர் பெரியசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத், தகவல் தொழில்நுட்ப அணி டான்போஸ்கோ வேதா சீனிவாசன், பிஎல்டி. சிவா மற்றும் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






