என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறேன்."

    • 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக பேசினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி நிலைமுகவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று இரவு ராணிப்பேட்டை ஒட்டல் ஜிகே மில்லினியாவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார்.

    அப்போது திமுக தலைவரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 68 ஆயிரத்து 36 பூக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இனிவரும் காலங்களில் பூத்துக்கான குழு முழுமையாக அமைக்கப்படும். பூத் கமிட்டி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் குழுவாக இல்லாமல் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றும் அணியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

    பூட் கமிட்டி அமைத்த பிறகு அதில் உள்ள ஒவ்வொருவரும் 25 வீடுகளுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு வருக்கும் 100 ஓட்டுகள் என செயல்பட வேண்டும்.நான் செல்லும் இடங்களில் எல்லாம் பல ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறேன். மக்கள் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியை நாங்கள் பார்க்கிறோம்.

    இந்த மக்களை ஓட்டு சாவடி வர வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது.ஓட்டு குறைந்தால் உங்களைத் தான் கேட்பேன் அதிகமானால் உங்களைத்தான் பாராட்டுவேன். 234 தொகுதிகளிலும் பூத்தமிட்டியை முழுமையாக அமைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கைப்பற்றுவது மிக மிக எளிது.அடிக்கடி உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வேன் இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி பேசியதாவது:-

    தமிழகத்தில் நம் மாவட்டம் அனைத்து விதத்திலும் சிறந்து விளங்குகிறது.

    அனைவரும் சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களை மனமாற வாழ்த்துகிறேன், நன்றி செலுத்துகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அயராது உழைப்போம்.யாரை நம் முதல்வர் சொல்லுகிறாரோ அவருக்கு சிறப்பாக உழைத்து வெற்றி வாகை சூடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட துணை செயலாளர் அமுதா, ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றியக்குழுதலைவர் சேஷா வெங்கட், நகர செயலாளர் பூங்காவனம், வாலாஜா நகர செயலாளர் தில்லை, அம்மூர் பேரூர் செயலாளர் பெரியசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத், தகவல் தொழில்நுட்ப அணி டான்போஸ்கோ வேதா சீனிவாசன், பிஎல்டி. சிவா மற்றும் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×