என் மலர்
ராணிப்பேட்டை
- இந்த ஆண்டு வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
- கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் நரசிம்மரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது. காசி, கங்கை, கயா போன்ற புண்ணிய தலங்களுக்குச் சமமாக இத்தலம் போற்றப்படுகிறது.
வருடத்தில் 11 மாதம் யோகநிலையில் இருக்கும் யோக லட்சுமிநரசிம்மர் கார்த்திகை ஒரு மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதனால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து பெரிய மலையில் எழுந்தருளியிருக்கும் யோகலட்சுமி நரசிம்மரை 1,305 படிக்கட்டுகளில் நடந்து சென்று தரிசனம் செய்கின்றனர்.
கார்த்திகை பெருவிழாவின் முதல் வெள்ளிக்கிழமை இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் நரசிம்மரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை ஞாயிற்றுகிழமைகளில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு அபிஷேகமும், பூஜைகளும் நடக்கும். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் 900 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்பட்டனர்.2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் கோவிலில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வேண்டும் வரம் அனைத்தையும் அள்ளித் தருவார். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் பில்லி சூனியத்தில் இருந்து விடுபடுவதாகவும், குடும்பம் செழிக்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்று பக்தர்கள் யோக நரசிம்மர் தரிசிக்கின்றனர்.
பக்தர்களின் அதிக அளவில் வருவார்கள் என்பதால் திருக்கோவில் நிர்வாகம் இரண்டு மலைகளிலும் குடிநீர் வசதி மின்வசதி கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பக்தர்களிள் நடவடிக்கைகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டுகிறது.
பக்தர்களை சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.
சோளிங்கர் நரசிம்ம சாமி பெரிய மலைக்கோவிலை 1305 படிகள் ஏறித்தான் செல்ல வேண்டும். இந்த மலைக்கு நேர் எதிரில் யோக ஆஞ்சநேயர் அருளும் சிறிய மலை உள்ளது. அனுமன் கோவிலை அடைய 406 படிகள் ஏறவேண்டும்.
பெரிய மலை அடிவாரத்திலிருந்து ஆலய நுழைவாயில் ராஜகோபுரம் வரை இளைப்பாற்றிக் கொள்ள 7 மண்டபங்கள் உள்ளன.
நரசிம்ம சாமி கோவில் அமைந்துள்ள பெரிய மலையில் ஏராளமான குரங்குகள் உள்ளன. படிக்கட்டுகளில் ஒவ்வொரு வளைவிலும் கூட்டம் கூட்டமாக குரங்குகள் காத்திருக்கும்.அவை பக்தர்களை சோதனை செய்யாமல் மேலே விடுவதே கிடையாது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் தலைவர் போன்ற பெரிய குரங்கு ஒன்று படுத்தபடி கண்காணித்து கொண்டிருக்கும். பக்தர்கள் அருகில் வந்ததும் அனைத்து குரங்குகளும் பயமுறுத்தி பக்தர்களை முழுமையாக சோதனை செய்யும் அளவிற்கு தொல்லைகள் உள்ளன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குரங்கு தொல்லை இருந்தாலும் சோளிங்கர் கோவிலில் உள்ள குரங்குகள் தான் அடாவடியில் பிரசித்தி பெற்றவை. எனவே கோவில் மலை அடிவாரத்தில் பக்தர்கள் குச்சி, கம்பு போன்றவை வழங்கப்படுகிறது.அதன் உதவியுடன் தான் பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.
சோளிங்கர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ரெயில் மூலம் அரக்கோணம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் எளிதில் சென்றடையலாம்.
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பங்கேற்பு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள தனியார்" ஓட்டல் கூட்ட அரங்கில், 18 வயதுக்குட்பட்ட பெண் பிள் ளைகள் போதிய விழிப்புணர்வுடன் செயல்படுவது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் 18 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள், போக்சோ சட்டம், இளைஞர் நீதி சட்டம், பாலியல் துன்புறுத்தல், உள் ளிட்ட பிரச்சினைகளில் போதிய விழிப்புணர்வுடன் செயல்படுவது குறித்து இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர்பேசுகையில், குழந்தைதிருமணம் என்பது பண்டைய காலத்தில் சர்வ சாதாரணமாக இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் அதனால் ஏற்படும் விளைவுகள் பிரச்சினைகள், பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் ஆகிய வைகளை கருத்தில் கொண்டு குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் குழந்தை திருமணங்கள் சில இடங்களில் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் இதில் ஈடுபட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும். அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் பள்ளி, கல் லூரிகளில் மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அவர்களுக்கு தேவையான ஆலோசனை களை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் வேதநாயகம். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலு வலர் வசந்தி ஆனந்தன். மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசாத்திபுரம் பகுதியில் உள்ள குளம் சீரமைக்கப் பட்டு வருகிறது. இந்த குளத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஆற்காடு டவுன் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குளத்தில் கிடந்த உடலை மீட்டனர்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? என விசா ரணை நடத்தியதில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சலீம் (வயது 32) என் 'பது தெரிய வந்தது.
இவர் குளத்தில் கால் தவறி விழுந் தாரா அல்லது வேறு ஏதே னும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டரிடம் மாணவர்கள் மனு
- தண்டவாளத்தை ஆபத்தான நிலையில் கடந்து செல்வதாக புகார்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு உட்பட்ட கூத்தம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
அப்போது பானாவரம் அரசு பள்ளி 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அப்போது மாவர்கள் கூறும்போது தங்கள் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கழிப்பறைகள் இல்லை என்றும், இருக்கும் ஒருசில கழிப்பறைகளும் சுத்தமாக இல்லாததால் இயற்கை உபாதைகளை கழிக்க மிகுந்த சிரமப்பட்டு வருவதாகவும், குடிநீர், சத்துணவு, விளையாட்டு திடல், சுற்றுச்சூழல் மற்றும் இறைவணக்கம் நடத்தும் பகுதி ஆகியவற்றை மேம்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
பாணாவரத்தில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 2 மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்கள் காலையில் பள்ளி செல்லும் போதும், மாலை வீடு திரும்பும் போதும் 5 முதல் 10 கிலோ எடையுள்ள புத்தகப் பைகளை சுமந்துகொண்டு ெரயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும், இதனால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் ெரயில் தண்டவாளத்தை ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர் என்றும் கூறியிருந்தனர். மாணவ மாணவிகளின் நலன் கருதி ெரயில்வே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை யையும் வலியுறுத்தினர். சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி முனிரத்தினம் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மாணவர்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களிடம் தெரிவித்தார்.
- ஆபாசமாக பேசியதை தட்டி கேட்டதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த பூதேரி கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி பெண் ஆசிரியையை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் அத்திதாங்கல் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 22) என்பவர் ஆபாசமாக பேசி உள்ளார்.
இதுகுறித்து ஆசிரியை தனது மகனுடன் சென்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் தகராறு முற்றி ஆசிரியை மற்றும் அவரது மகனை ராமகிருஷ் ணன் சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதுகுறித்து ஆசிரியை ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிற்சாலையில் கிரேனை இயக்கிய போது விபரீதம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள லாலா பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 34). இவர் லாலாபேட்டை பகுதியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் லாலாபேட்டையை அடுத்த கிருஷ் ணாவரம் பகுதியில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் இருந்து, தனது தொழிற்சாலைக்கு தேவையான பொருட் களை ஏற்றி வர, டிராக்டரில் சென்று உள்ளார். அங்குள்ள தொழிற்சாலையில் கிரேன் இயக்க ஆள்இல்லாததால், அவரே இயக்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காணொளி காட்சி மூலம் நடந்தது
- அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் நக்ச லைட்டுகள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தாசில்தார்கள், மண்டல தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு காவல்துறை சிறப்பு அதிரடிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் காணொளி காட்சி மூலம் நக்சலைட்டுகள் உருவா காமல் எவ்வாறு தடுக்க வேண்டும் மற்றும் இடதுசாரி நக்சல்கள் எவ்வாறு உருவாகிறார்கள் என்றும் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது:-
இந்தியாவில் தற்போது மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஜார்கண்ட் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ளனர் அவர்கள் உருவாகாமல் தடுப்பது விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் தாங்கள் ஈடுபட வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் கூறினார்.
இதில் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தாசில்தார் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை
- போலீஸ் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க உத்தரவு
கலவை:
கலவை போலீஸ் நிலையத்தில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழக்கு விவரங்களை கேட்டறிந்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், கலவைப் பகுதியில் அடிக்கடி வாகன திருட்டு நடப்பதை தடுக்கவும் இரவு ரோந்து பணி செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் போலீஸ் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க உத்தரவிட்டார். போலீஸ் நிலைய கட்டிடத்தில் ஒரு சில இடங்களில் பழுதடைந்துள்ளதை பார்வையிட்டார். இன்ஸ் பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மூர்த்தி, சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கலெக்டர் தகவல்
- வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவிபுரியும் பணியில் தமிழ்நாடு அரசின் “அயலகத் தமிழர் நலத்துறை” ஈடுபட்டு வருகிறது
ராணிப்பேட்டை:
வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்று ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த பல் வேறு உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து செல்லப்படுகின்றனர்.
அங்கு கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்ற வற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து அரசுக்கு தகவல் பெறப்படுகிறது.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் இளைஞர்கள் இனிவரும் காலங்களில், இதனை தவிர்க்க மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால் தமிழக அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதர கங்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்து கொண்டும், மத்திய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளை பின்பற்றி வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும்.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவிபுரியும் பணியில் தமிழ்நாடு அரசின் "அயலகத் தமிழர் நலத்துறை" ஈடுபட்டு வருகிறது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் இத்துறை யின் 9600023645, 8760248625, 044-28515288 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 67 கிராம் தங்கம், 97 கிராம் வெள்ளி கிடைத்தது
- ஏராளமானோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ யோகலட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் மற்றும் யோக ஆஞ்சநேய சுவாமி கோவில் வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட கோவில் வளாகத்தில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கப்பட்டது.
இதில் 30 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் ரொக்கம் 67 கிராம் தங்கம் மற்றும் 97 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
- எவ்வளவு முயற்சி செய்தும் கதவை திறக்க முடியவில்லை
- தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு மகள், 1½ வயதில் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் தாயார் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது விளையாடிக் கொண்டிருந்த 1½ வயது குழந்தை திடீரென வீட்டின் உள்ளே இருந்த பெட்ரூமில் உள் பக்கமாக தாழ்பாள் போட்டுக் கொண்டான். இதனை திறக்க முடியாமல் குழந்தை கதறி அழுதுள்ளான்.
குழந்தையின் தாயார் எவ்வளவு முயற்சி செய்தும் கதவு திறக்க முடிய வில்லை.
உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராடி சிறுவனை மீட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சென்னை கோட்ட மேலாளர் தகவல்
- தண்டவாளங்கள் பராமரிப்பு, விபத்து இல்லாமல் தவிர்ப்பது குறித்து விளக்கம்
அரக்கோணம்:
அரக்கோணம் புளியமங்கலம் ரெயில் நிலையம் அருகே ரெயில் என்ஜின்கள் பராமரிப்பு பணிமனையில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் தென்னக ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மழைக்காலங்களில் சிறையில் தண்டவாளங்களை பராமரிப்பது குறித்தும், விபத்து இல்லாமல் தவிர்ப்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
வந்தே பாரத் சிறப்பு ரெயில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும் இதன் மூலம் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவித்தார்.
ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடக்கூடாது எனவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






