என் மலர்
நீங்கள் தேடியது "Railway overpass"
- கலெக்டரிடம் மாணவர்கள் மனு
- தண்டவாளத்தை ஆபத்தான நிலையில் கடந்து செல்வதாக புகார்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு உட்பட்ட கூத்தம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
அப்போது பானாவரம் அரசு பள்ளி 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அப்போது மாவர்கள் கூறும்போது தங்கள் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கழிப்பறைகள் இல்லை என்றும், இருக்கும் ஒருசில கழிப்பறைகளும் சுத்தமாக இல்லாததால் இயற்கை உபாதைகளை கழிக்க மிகுந்த சிரமப்பட்டு வருவதாகவும், குடிநீர், சத்துணவு, விளையாட்டு திடல், சுற்றுச்சூழல் மற்றும் இறைவணக்கம் நடத்தும் பகுதி ஆகியவற்றை மேம்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
பாணாவரத்தில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 2 மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்கள் காலையில் பள்ளி செல்லும் போதும், மாலை வீடு திரும்பும் போதும் 5 முதல் 10 கிலோ எடையுள்ள புத்தகப் பைகளை சுமந்துகொண்டு ெரயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும், இதனால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் ெரயில் தண்டவாளத்தை ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர் என்றும் கூறியிருந்தனர். மாணவ மாணவிகளின் நலன் கருதி ெரயில்வே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை யையும் வலியுறுத்தினர். சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி முனிரத்தினம் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மாணவர்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களிடம் தெரிவித்தார்.






