என் மலர்
நீங்கள் தேடியது "A surprise inspection by the Superintendent of Police"
- ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை
- போலீஸ் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க உத்தரவு
கலவை:
கலவை போலீஸ் நிலையத்தில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழக்கு விவரங்களை கேட்டறிந்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், கலவைப் பகுதியில் அடிக்கடி வாகன திருட்டு நடப்பதை தடுக்கவும் இரவு ரோந்து பணி செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் போலீஸ் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க உத்தரவிட்டார். போலீஸ் நிலைய கட்டிடத்தில் ஒரு சில இடங்களில் பழுதடைந்துள்ளதை பார்வையிட்டார். இன்ஸ் பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மூர்த்தி, சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.






