என் மலர்
ராணிப்பேட்டை
- ஓச்சேரியில் பா.ம.க. மகளிர் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
- கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட மகளிர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். க. சரவணன், மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிர் சங்க செயலாளரும் ஒன்றிய கவுன்சிலர் தீபா கார்த்திகேயன் வரவேற்புரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலம்மாள், மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராஜா ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
மேலும் வீடுகள் தோறும் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக அதிக இடங்களில் வெற்றி பெற உழைக்க வேண்டும். பெண்களை அதிகமாக கட்சியில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
இதில் மாநில இளைஞர் அணி செயலாளரும், நெமிலி ஒன்றிய துணை சேர்மன் எஸ். தீனதயாளன், மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சக்ரவர்த்தி, மூத்த நிர்வாகி இராமதாஸ், மாவட்ட துணை தலைவர் தட்சணாமூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர் கா.கி. சங்கர், காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர் கோ.வே.சங்கர், காவேரிப்பாக்கம் நகர செயலாளர் ராமு நாயக்கர், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் மாதவன், மருத்துவர் பாலாஜி, மகளிர் சங்கம் நிர்மலா முத்து, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
- தங்க தேரில் யோகநரசிம்மர் பவனி
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சோளிங்கர்:
சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகை பெருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் 11 மாதங்கள் யோக நிலையில் இருக்கும் யோக நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பக் தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.
கார்த்திகை பெருவிழா தொடங்கி முதல் வெள்ளியை முன்னிட்டு யோக நரசிம்மர் சுவாமி, அமிர்தவல்லி தாயார் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மாலை சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு தங்க தேரில் எழுந்தருளினார். மங்கள வாத்தியங்களு டன் திருக்கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கால்நடை துணை இயக்குனர் தகவல்
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரசுரம் வினியோகம்
ராணிப்பேட்டை:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெரியம்மை நோய் தாக்குதலில் இருந்து மாடுகளை காக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேலூர் மண்டல கால் நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன் கூறியதாவது:-
தற்போது மழைக்காலம் என்பதால் ஈ, கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஈ, கொசுக்கள் கடிப்பதன் மூலம் மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் ஏற்படுகிறது.
வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இந்த நோய் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. எனினும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தலின்பேரில் முன் எச்சரிக்கை நடவடிக்கை களும் எடுக்கப் பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக வேலூர் மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 25 ஆயிரம் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப் பெற்றுள்ளன. இந்த தடுப்பூசிகள் 135 கால்நடை மருந்தகங்கள், 8 கால்நடை மருத்துவமனைகள், 50 கிளை நிலையங்கள், மற்றும் பன் னோக்கு கால்நடை மருத்துவமனையிலும் போடப்பட்டு வருகிறது.
இது தவிர சிறப்பு கால் நடை சுகாதார விழிப்புணர்வு முகா ம்களிலும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
மூலிகை மருத்துவம் மேலும் மூலிகை மருத்துவம் குறித்த தகவல்கள் கொண்ட விழிப்புணர்வு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு வினியோகி க்கப்பட்டு வருகிறது.
பெரியம்மை நோய் அறிகுறி உள்ள மாடுகளுக்கு 10 வெற்றிலை, 10 கிராம் மிளகு, 10 கிராம் உப்பு, தேவையான வெல்லம் ஆகிய அனைத்தையும் அரைத்து முதல் நாள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும், 2-வது நாள் முதல் ஒரு நாளைக்கு 3 வேளை என 2 வாரங்களுக்கு மாடுகளுக்கு கொடுத்து வர பெரியம்மை நோய் குணமாகும்.
பெரியம்மையால் ஏற்படும் கொப்புளங்களுக்கு குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, 10 பல் பூண்டு, வேப்பிலை ஒரு கைப்பிடி, துளசி இலை ஒரு கைப்பிடி, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 500 மில்லி, மஞ்சள் தூள் 20 கிராம், மருதாணி இலை ஒரு கைப்பிடி ஆகிய வற்றை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து கொதிக்கவைத்து பின் னர் ஆறவிட்டு காயங்களை சுத்தப்படுத்தி மருந்தை தடவி வர புண் விரைவில் ஆறும். இவ்வாறு அவர் கூறினார்.
- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்க அறிவுரை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் தனியார் திருமண மண்டபத்தில் அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஆர்.சவுந்தர் அவைத் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.
வருகின்ற 20-ந்தேதி மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர் காந்தி தலைமையில் நடைபெறும் பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
26-ந்தேதி நடக்கும் சிறப்பு வாக்காளர் பட்டியலில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் ஆகிய பணிகளை செய்ய வேண்டும். வரும் 27-ந் தேதி திமுக கழக இளைஞர் அணி செயலாளர் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் எஸ்.இ.போர் பாபு, பிரகாஷ், பொருளாளர் பாலன் மாவட்ட பிரதிநிதிகள் என்.ராமலிங்கம், மூர்த்தி, குப்புசாமி, மற்றும் பல நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முடிவில் இணைச் செயலாளர் பூஷனா கன்னியப்பன் நன்றி கூறினார்.
- 1,140 கிலோ சிக்கியது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளி லிருந்து வெளி மாநிலங்க ளுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையின் வேலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் மேற் பார்வையில் இன்ஸ்பெக்டர் ரேகா, சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் வின்டர்பேட்டை பகுதியில் ஈடுபட்டனர்.
அப்போது சுகுமார் என்பவரது மனைவி விஜயா (வயது 50) 40 கிலோ எடை கொண்ட 26 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1,140 கிலோ ரேஷன் அரிசியை அவர்கள் பறிமுதல் செய்து அரக்கோணம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதனிடையே விஜயா தப்பிவிட்டார்.
அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
- காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்துவதாக புகார்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது.கோட்டாட்சியர் பாத்திமா தலைமை தாங்கினார்.
வங்கி கடன்
இதில் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகா பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:- மத்திய மாநில அரசு விவசாயிகளுக்கு கடன் தர ஒப்புதல் அளித்தும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகாரிகள் அலைக்கழிக்க செய்கின்றனர்.
பெருவளையம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக குளத்தை ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து பலமுறை வருவாய் துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்கு விவசாய நிலங்களில் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றது. இது சம்பந்தமாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறை தீர்வு கூட்டத்திற்கு அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், நெமிலி தாசில்தார் சுமதி, நேர்முக உதவியாளர் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, நெமிலி தோட்டக்கலை உதவி அலுவலர் சுமதி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு
- சமையல் ஒப்பந்ததாரருக்கு பாராட்டு
ஆற்காடு:
ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 பள்ளிகளில் 661 மாணவ- மாணவிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப் பட்ட காலை உணவு திட்டம் கடந்த சில மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது.
ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1-ல் உள்ள முதல்- அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் குழந்தை களுக்காக சமைக்கப்பட்ட உணவின் சுவை மற்றும் தரத்தினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
உணவு தரமாகவும் சுவையாகவும் உள்ளது என சமையல் ஒப்பந்ததாரர் ஜெமினி ராமச்சந்திரனை பாராட்டினார்.
பின்னர் ஆற்காடு தோப்புக்கானா வடக்கு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாச சேகர், நகராட்சி பொறியாளர் கணேசன், நகர மன்ற உறுப்பினர் குணா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பென்ஸ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- தண்டவாளத்தை கடந்த போது விபரீதம்
- ரெயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
அரக்கோணம்:
தென் மாநிலங்களுக்கான முதல் வந்தே பாரத் ரெயில் மைசூரு - சென்னை இடையே கடந்த 12-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், மைசூருவில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் மாலை வந்தே பாரத் ரெயில் சென்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மேல் பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கன்றுக்குட்டி மீது ரெயில் மோதியது.
இதில் கன்றுக்குட்டி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதன் காரணமாக வந்தே பாரத் ரெயில் சிறிது நேரம் வழியிலேயே நின்று பின்னர், மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.
இந்த விபத்தால் ரெயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
ஏற்கனவே குஜராத் மாநிலம் காந்தி நகர் - மும்பை இடையே செல்லும் வந்தே பாரத் ரெயில் கால்நடைகள் மீது மோதிய விபத்தில் ரெயிலின் முன்பக்கம் பகுதி பழுதடைந்தது குறிப்பிடத்தக்கது.
- பிளாட்பாரம் அருகே பதுக்கி வைத்திருந்தனர்
- போலீசார் விசாரணை
நெமிலி:
பாணாவரம் பகுதியில் சோளிங்கர் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் அடிக்கடி ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.
இதனை தடுக்கும் விதமாக ரெயில்வே பாதுகாப்பு படையினர், ராணிப்பேட்டை பறக்கும் படையினர், வருவாய்த்துறை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சோளிங்கர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை பிளாட்பாரம் அருகே 19 மூட்டைகளில் 1 டன் ரேசன் அரிசியை கடத்துவதற்காக மறைத்து வைத்திருந்தனர். இதனை கண்ட அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு தனிப்படையினர் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை ராணிப்பேட்டை தாசில்தார் இளஞ்செழியனிடம் ஒப்படைத்தனர். மேலும் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ரேசன் அரிசியை கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூட்ட நெரிசலால் படியில் நின்றதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த ஆனைமல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள், கூலி தொழி லாளி.
இவரது மகள் சாந்தகுமாரி (வயது 16), திமிரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக ஆனைமல்லூரில் இருந்து அரசு பஸ்சில் வந்துள்ளார். பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் படியிலேயே நின்று கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
காவனூரில் இருந்து திமிரி செல்லும் ரோட்டில் தனியார் பள்ளி அருகே செல்லும்போது சாந்தகுமாரி பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இது குறித்து திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதி
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு
நெமிலி:
நெமிலி அடுத்த சயனபுரத்தில் அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் 163 மாணவர்கள படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 4-ம் வகுப்புபடித்து வரும் மாணவர் ஒருவர் தனது பிறந்தநாளையொட்டி சக மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கியுள்ளார்.
சாக்லேட்டை சாப்பிட்ட 1 மணிநேரந்தில் மாணவர்கள் 24 பேர் தங்களுக்கு வயிற்றுபோக்கு மயக்கம் ஏற்படுவதாக ஆசிரியை விசாலாட்சியிடம் தெரிவித்தனர்.
உடனே அதிர்ச்சியில் அவர் தலைமையாசிரியர் வையாபுரியிடம் தெரிவித்ததையடுத்து உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளை மீட்டு புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மயக்கமடைந்த குழந்தைகளை சந்தித்து நலம் விசாரித்தார்.
கோட்டாட்சியர், பார்த்திமா அரக்கோணம் போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஸ் அசோக் நெமிலி ஒன்றிய தலைவர், வடிவேலு மற்றும் சைனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பொதுமக்கள் சாலை மறியல்
- போலீசார் வலிசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 38). அப்பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவில் அருகில் 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது கோயில் அருகே ஏன் மது குடிக்கிறீர்கள் என நாகராஜ் கேட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த கும்பல் பீர் பாட்டிலை உடைத்து நாகராஜை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் நாகராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் இதுபோன்று அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே அவர்களை கைது செய்யக்கோரி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அரக்கோணம்- காஞ்சிபுரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் மர்ம கும்பலை கைது செய்ய கோரி கோஷங்களை எழுப்பினர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






