என் மலர்
ராணிப்பேட்டை
- தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்தது
- தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்தது கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு பாராட்டு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் சுரக்ஷா 2023 திட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 288 கிராம ஊராட்சிகளில் உள்ள 1.89,324 தனிநபர் இல்லங்களில் 2022 அக்டோபர் மாதம் முடிய பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் 1,88,320 வழங்கப்பட்டுள்ளது.
இது மாநில அளவில் 98.96 சதவீதம் ஆகும். தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்குவதில் ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்திலும், அகில இந்திய அளவில் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. 288 கிராம ஊராட்சிகளில் இன்று வரை 285 கிராம ஊராட்சிகளில் தனிநபர் குடிநீர் இணைப்பு முழுவ துமாக வழங்கப்பட்டுள்ளது.
தனிநபர் இல்ல குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதிலும் நீர் பரிசோதனை செய்வதிலும், வீடு தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கி அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதிலும் அகில இந்திய அளவில் 60 சதவீதம் விழுக்காடு ராணிப்பேட்டை மாவட்டம் 4 நட்சத்திர குறியீடுகள் பெற்று 2022 அக்டோபர் மாதத்தில் சாதனை பெற்றுள்ளது.புதுடில்லி ஜல்ஜீவன் மிஷன் திட்ட தலைமை அலுவல கத்திலிருந்து நேற்று நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தினில் அதிக அளவில் இலக்குகளை எய்தியதற்கு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு மத்திய அமைச்சக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் நரேந்திர சின்ஹா பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் ஆறுமுகம், ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 2 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்
- தந்தை போலீசில் புகார்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மகள் ஆனந்தி. இவரும், சென்னை மந்த வெளி பகுதியை சேர்ந்த ஆதி கேசவன் மகன் பூமிநாதனும் 2 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஆனந்திக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. பூமிநாதன் சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். 2 மாதத்திற்கு முன்பு கலவைப்புத்தூர் கிராமத் திற்கு வந்து கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலை யில் நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத் தில் ஆனந்தி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆனந்தியின் தந்தை ஜெகநாதன் கலவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கலவை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி, ஆனந்தியின் உடலை வேலூர் அடுக் கம்பாறை அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- சிகிச்சைக்குப்பின் ஊக்கத்தொகையுடன் ரூ.5,100, ஒரு முட்டை அரிசி வழங்கப்படும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை மூலம் ஆண்களுக்கான இலவச நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வினை பொது மக்களிடையே ஏற்படுத்திடும் வா கனத்தினை கொடியசைத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
ஆண்களுக்கான இலவச புதிய, எளிய, நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம், வேலூர் மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பாக நேற்று முதல் வருகிற 4-ந்தேதி வரை அரசு மருத்துவமனை திருப்பத்தூர், அரசு மருத்துவமனை வாணி யம்பாடி மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும் ஆண்களுக்கான இலவச குடும்பநல புதிய எளிய நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளன.
தகுதி வாய்ந்த ஆண்களுக்கு செய்யப்படும் இக்கருத்தடை சிகிச்சைக்குப்பின் அரசு வழங்கும் ஊக்கத்தொ கையுடன் சேர்த்து ரூ.5,100 மற்றும் ஒரு முட்டை அரிசி வழங்கப்படும்.
மேலும், இக்கருத்தடை சிகிச்சை கத்தியின்றி, ரத்தமின்றி தையலின்றி, தழும்பின்றி புதிய எளிய நவீன முறையில் செய்யப்படும். மருத்துவ மனையில் தங்க வேண்டிய அவசியமும் இல்லை, கருத்தடைக்குப்பின் உடனே அனைத்து வேலைகளையும் செய்யலாம்.
இந்த புதிய எளிய நவீன முறையில் செய்யப்படும் ஆண்களுக்கான இலவச குடும்பநல புதிய, எளிய, நவீன கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள விரும்பும் தகுதி வாய்ந்த ஆண்கள் கீழ்காணும் தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி/தொலைப்பேசி எண்கள்: 1) 94861 30650 2) 94436 61155 (3) 63691 88112 (4) 98947 95689 (5) 0416-2221322 மேலும் ஆண்களுக்கான இலவச குடும்பநல புதிய, எளிய, நவீன கருத்தடை சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து நாட்களிலும் இலவசமாக செய்யப்ப டுகிறது. மேலும் விவ ரங்களை அறிய அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி பெற்றுக் கொள்ளுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (குடும்ப நலம்) மருத்துவர் மணிமேகலை, துணை இயக்குநர் (பொது சுகாதார பணிகள்) மருத்துவர் மணிமாறன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ரகுராமன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- செல்போனில் பேசிய படியும், பாடல்கள் கேட்ட வாறும் ஆபத்தை உணராமல் பயணம்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அரக்கோணம்:
சென்னை- ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அலுவலக ஊழியர்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பணியாளர்கள், பெண்கள் என அதிகமானோர் சென்று வருகின்றனர்.
இந்த ரெயில் நேற்று அரக்கோணம் ரெயில் நிலைய நடைமேடைக்கு வந்ததும் சில இளைஞர்கள் ரெயில் பெட்டிக்குள் செல்லாமல் 2 பெட்டிகளை இணைக்கும் கொக்கியில் உட்கார்ந்து கொண்டும் செல்போனில் பேசிய படியும், பாடல்கள் கேட்ட வாறும் ஆபத்தை உணராமல் பயணம் செய்தனர். இதனை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் செல்போன் மூலம் பிடித்து படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது போன்று ஆபத்தான முறையில் பயணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகமும், போலீசாரும் எடுக்க வேண்டும் என்றுபொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
- கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
- ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
சோளிங்கர்:
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கீழாண்டமோட்டூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்பாசன கால்வாயில் நகராட்சி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது.
அதிக அளவில் கொசுத்தொல்லை யும் உள்ளது. இதனால் அப்ப குதி மக்கள் காய்ச்சலில் அவதிப்படுவதாகவும் இந்த கழிவு நீர் விவசாய நிலங்களுக்குள் செல்வதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே கழிவுநீர் செல்ல முறையாக கால்வாய் அமைக் காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கீழாண்ட மோட்டூர் சாலையில் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவலறிந்த சோளிங்கர் தாசில்தார் ஆனந்தன், சோளிங்கர் பொதுப்பணித்துறை அலுவலர்சேரலா தன், போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் ராஜகோ பால், கிராம உதவியாளர்கள் சிவா, வேணு மற்றும் போலீசார் சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கால் வாயை தூர்வாரி கழிவுநீர் செல்லவழிசெய்வதாக உறுதி அளித்தனர்.
அதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மகள் கவலைக்கிடம்
- உடல் நிலை பாதிக்கப்பட்டதால் விபரீதம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 48) லாரி டிரைவர். இவரது மனைவி ஜோதி லட்சுமி (45) இவர்களுக்கு பவித்ரா (27) வைஷ்ணவி (25) பவானிசங்கர் (23) என இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில் பவித்ரா என்பவருக்கு அடுத்த மாதம் டிசம்பர் மாதத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மகாலிங்கம், பவானி சங்கர் ஆகியோர் திருமண பத்திரிகையை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்க சென்றுள்ளனர்.
நேற்று இரவு பவித்ரா அருகில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஜோதி லட்சுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஜோதிலட்சுமி நேற்று இரவு அரளி விதையை அரைத்து சாப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த அவரது மகள் வைஷ்ணவியும் அரளிவிதையை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பவித்ரா தனது தாய் மற்றும் சகோதரி 2 பேரும் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்கள் வீட்டிற்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த ஜோதிலட்சுமி மற்றும் வைஷ்ணவியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஜோதிலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வைஷ்ணவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
- போலீஸ் நிலையத்தின் செயல் முறை குறித்து எடுத்துரைத்தனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையம் சார்பில் உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினத்தை முன் னிட்டு பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக் டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் சுமார் 70-க்கும் மேற்பட்டவர்கள் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல போட்டிகளில் கலந்து கொண்டனர்,,
சிறப்பு அழைப்பாளராக அரசினர் ஆதிதிராவிடர் பெண் கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து மாணவிகளை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து சென்று போலீஸ் நிலையத்தின் செயல் முறை மற்றும் நடை முறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
- விவசாயிகளுடன் கலந்துரையாடினர்
- ஏரளாமானோர் கலந்து கொண்டனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பல்லவ ராயன் குளம் கிராமத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் தரிசு நில மேம் படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று 35 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்படும் தரிசு நில மேம்பாடு திட்டம் மேலும் ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
வேளாண்மைஇணை இயக்குனர் வடமலை, வேளாண்மை பொறியியல் துறை ஸ்ரீதர், வேளாண்மை உதவி இயக்குனர் ராமன், வேளாண்மை அலுவலர்கள் திலகவதி, பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்ஞானசேகரன், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்டது
- மாணவர்கள் ஏராளமனோர் கலந்துகொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக நடிகர் விவேக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
நிகழ்ச்சியில் நடிகர் விவேக் 61-வது பிறந்தநாளை முன்னிட்டு 610-மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடப்பட்டன.
இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு இந்தியன் ரெட்கிராஸ் துணை தலைவர் ஜெ.லட்சுமணன் ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்குமார், ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி பள்ளி தாளாளர் பாலாஜி மற்றும் ஏ.பி.ஜே அறக்கட்டளை தலைவர் கோபிநாத் உடன் பள்ளி மாணவர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம்ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் பாலாற்று படுக்கை அமையப்பெற்றுள்ளது.
இப்பகுதியில் இருந்து ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சோளிங்கர், அரக்கோணம், காவேரிப்பாக்கம், ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 88-குக்கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை பணி நேற்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மோகனசுந்தரம் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரூபாய் 41.98-கோடியில் செயல்படுத்தப்பட உள்ள கூட்டு குடிநீர் திட்டப்பணிக்கு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த திட்டத்தின் வாயிலாக 88-குக்கிராமங்களுக்கு பாலாற்று பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்பட உள்ளது.
இதனால் கிராம மக்களின் குடிநீர் தேவைகள் நிரந்தரமாக பூர்த்தி செய்யப்படும்.மேலும் 2022-அடிப்படை ஆண்டின் மக்கட்தொகை 54711-நபர்களுக்கு தினசரி தேவையான 2.50- மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. இதேபோல் இடைக்கால ஆண்டின் மக்கட்தொகை யான 64562, நபர்களுக்கு 2.70- மில்லியன் லிட்டர் தண்ணீரும், உச்சக்கட்ட ஆண்டின் மக்கட்தொகை யான 72219-நபர்களுக்கு 2.98- மில்லியன் லிட்டர் தண்ணீரும் வழங்கும் அளவில் வடி வமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி பாலாற்று பகுதியில் புதிய 5-நீர் உறிஞ்சு கிணறுகளை நிரந்தரமாக அமைத்து, இதன் மூலம் பெறப்படும் குடிநீரை புதியதாக அமைக்கப்பட உள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் சேகரிக்கப்படும். பின்னர் இதில் இருந்து நெகிழ் இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் உந்தப்பட்டு மக்கள் பயனுக்கு கொண்டு வரப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அரசு அதிகாரிகள் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து வரைபடம் மூலம் விளக்கம் அளித்தனர். அப்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி பொறியாளர் சுபவாணி, நெமிலி தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர் ஞானமணி, மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் சி.மாணிக்கம், காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி உட்பட பலர் உடன் இருந்தனர்.
- அரக்கோணத்தில் நிற்காத அந்த ரெயிலை பயணிகள் அரக்கோணத்தில் நிறுத்தினர்.
- ரெயில் 20 நிமிடங்கள் தாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
அரக்கோணம்:
சென்னை சென்டிரலில் இருந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகர் வரை செல்லும் வாராந்திர விரைவு ரெயில் நேற்று நள்ளிரவு புறப்பட்டு சென்றது.
நள்ளிரவு 12.30 மணி அளவில் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தது.
அந்த ரெயிலில் ஏ1, ஏ2 மற்றும் பி1 முதல் பி4 என 6 ஏசி பெட்டிகளில் போர்வை மற்றும் தலையணை சுத்தப் படுத்தப்படாமல் அழுக்காக இருந்ததாக கூறப்படுகிறது. அதை மாற்றித் தருமாறு பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் கூறினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அரக்கோணத்தில் நிற்காத அந்த ரெயிலை பயணிகள் அரக்கோணத்தில் நிறுத்தினர். இதைத் தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் மற்றும் ரெயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் அங்கு சென்று பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ரெயில் நிலைய அதிகாரிகள் ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் புதிய போர்வை மற்றும் தலையணை வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து ஏக்தா எக்ஸ்பிரஸ் ரெயில் 20 நிமிடங்கள் தாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது
- 85 பேர் பயனடைந்தனர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை ( செல்ப்) சார்பில் அதன் காப்பாளர் வேலாயுதம் ஆலோசனை பேரில் அரக்கோணம் சுற்று பகுதியில் வசிக்கும் 85 ஏழை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ. 5.50 லட்சம் கல்வி உதவித் தொகை பகிர்ந்து அளிக்கப்பட்டது.
6 -ம் ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள் வளர்ச்சி சங்க தலைவர் கவுதம் தலைமை தாங்கினார். செல்ப் அறக்கட்டளை செயலாளர் கோவி.பார்த்திபன் வரவேற்றார்.
அன்னை தெரேசா கிராம வளர்ச்சி இயக்கத் தலைவர் ஐடி தேவாசிர்வா தம் சிறப்பு அழைப்பாளர்களை அறிமுகம் செய்தார்.
செல்ப் அறக்கட்டளை முன்னாள் செயலாளர் டாக்டர் ரவிச்சந்திரன், பொருளாளர் கருணாகரன், செல்ப் அறக்கட்டளை தன்னார்வ லர்கள் எஸ். இமையவன், செல்வராஜ். கலைச் செல்வன், சுந் தரம், முருகேசன், கனிமொழி, சரத்பாபு, கார்த்தி, தமிழ் முகி லன், சாம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரக்கோ ணம் நகராட்சி ஆணையாளர் ஆர்.லதா, மாவட்ட கல்வி அதி காரி ஹேமலதா, ராணிப் பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, அறம் கல்விச் சங்கத் தலைவர் முனைவர் கலை நேசன், தலைமையாசிரியர் பிரின்ஸ் தேவாசீர்வாதம், ஹானா பாண்டியன், குளோ அறக்கட்டளை ஜேம்ஸ், கொரோனா நல் லடக்க குழு தலைவர் முகமது அலி, சந்தர், அம்பேத் ஆனந் தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 85 மாணவர்களிடமும் காசோலைகளை வழங்கி வாழ்த்தி பேசியதாவது,
மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து அரசு பணிக்கு சென்று தன் குடும்பத்தை மேம்படுத்த முன் வர வேண்டும்.
அதுபோல் படிப்பை முடித்தவர்கள் கிராமபுற ஏழை மாண வர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும், மாணவர்கள் தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் ஒழுக்கத்துடன் தன்னடக் கத்துடன் பள்ளி, மற்றும் கல்லூரி படிப்புகளை முடிக்க வேண் டும் என்று ஊக்கப்படுத்தி பேசினர்.
இறுதியாக கல்வி உத வித் தொகை வழங்கிய நன்கொடையாளர்கள் சங்கீதா ராஜேஷ், டாக்டர் ஆனந்த் விஜயலட்சுமி, டாக்டர் ஜெயராஜ் சுபா, நவீனா பாபு, டாக்டர் மோகன் குமார், காயத்ரி கவிதா, சரவணன் உள்ளிட்ட அனைவருக்கும் செல்ப் அறக்கட்டளை சார்பில் பௌத்த அரசி நன்றி கூறினார்.






