என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது
    • பொதுமக்கள் சாலை மறியல்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் பொதுமக்கள் மறியல் காரணமாக கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற் றுவதற்கான அளவீடு பணி நடந்தது. அரக்கோணம்-திருத்தணி பிரதான சாலையில் மங்கம்மா பேட்டை மேம்பாலம் அருகே செந்தில் நகர் பகுதி யில் ஆக்கிரமிப்புகளால் கால்வாய் இருந்தஇடம் தெரியாத அளவுக்கு உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் வெளியேறாமல் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற் பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வெளியே றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கடந்த 13-ந் தேதி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் தாசில்தார் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்ட னர்.

    இதனை தொடர்ந்து அப்ப குதிபொது மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் மனு மீதான நடவடிக்கை யாக அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு செய்யும் பணி நேற்று நடை பெற்றது.

    அப்போது தலைமை நில அலுவலர் ரவி, கைனூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, பாரஞ்சிவரு வாய் ஆய்வாளர் குழந்தை தெரேசா, கைனூர் கிராம நிர்வாக அலுவலர் சேகர், ராஜு மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

    • பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்
    • கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியைச் சேர்ந்தவர் சாருமதி (வயது 20). அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (21) இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.

    சாருமதியின் பெற்றோருக்கு இது தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த 20-ந்தேதி வீட்டில் இருந்து சாருமதி வெளியேறினார்.

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

    அதை தொடர்ந்து சாருமதி ராணிப்பேட்டை எஸ்.பி. ஆபீசில் பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளித்தார். 

    • 30-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    'ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வருகிற 30-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் ராணிப்பேட்டை கலெக்ட ர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டு வளர்ச்சி, மீன் வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக் கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பிரச்சினைகளை களைந்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாக வும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

    இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித் துள்ளார்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). பைக்கில் போர்வைகளை வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நாரணமங்கலம் கிராமம் முஸ்லீம் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருப்பதி சென்னை நெடுஞ்சா லையை கடக்க முயன்றார்.

    அப்போது அடையாளம் தெரியாத வாகனம் செல்வராஜ் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. அதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    திமிரி போலீசார் ஆற்காடு அடுத்த காவனூர் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆற்காடு நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்யறனர்.

    அதில் வந்த நபர்கள் நிற்காமல் சென்று விட்ட னர். பின்னர் போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதனால் கென்னடிபாளையம் செல்லும் வழியில் மோட் டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு மர்மகும்பல் தப்பிச் சென்று விட்டனர்.

    அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை சோதனை செய்தனர்.

    அப்போது சுமார் 5 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகள் இருப்பது தெரியவந்தது. மோட்டார் சைக்கிள் மற்றும் சந்தன கட்டை களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1.10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது
    • ரூ.25 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த சூரை கிராம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் குடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்கள் பயண்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்பாண்டியன் மக்கள் நல பணியாளர் முருகேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    இந்த தரைமட்ட கிணறு செம்பேடு சூரை, ஆயல், போளிப்பாக்கம், தப்பூர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ரூ.25 கோடி மதிப்பில் 10 தரைமட்ட கிணறுகள் அமைக்க பணி நடைபெற உள்ளது என‌ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
    • 3 பவுன் நகை பறிமுதல்

    சோளிங்கர்:

    சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி நகை வாங்குவது போல் வந்த 3 பெண்கள் போலிநகையை வைத்து விட்டு 3 பவுன் நகையை எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் சோளிங்கர் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 3 பெண்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று தக்கான்குளம் அருகே சோளிங்கர் போலீசார் ரோந்து பணியில் அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல் பட்டி கிராமத்தை சேர்ந்த மாதம்மாள் (வயது 56) என்பதும், சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள நகைக்கடையில் 3 பவுன் நகை திருடியதும் தெரியவந்தது.

    அவரிடம் இருந்த 3 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பெண்களை தேடி வருகின்றனர்.

    • 24 ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை
    • ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விட விவசாயிகள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்தது.பின்னர் மேக மூட்டத்துடன் மந்தமான தட்பவெப்ப நிலை காணப்பட்டது.

    இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராணிப்பேட்டை வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக சாரல் மழை பெய்தது.

    மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவிட்டார்.

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்தது.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகளின் காரணமாக சீரமைக்கப்படாத தெருக்களில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

    அதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது‌ மேகம் மந்தமாக காணப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. 12 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளது. 24 ஏரிகளுக்கு நீர்வரத்து கொஞ்சம் கூட இல்லை. மற்ற ஏரிகளில் 20 முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 29 ஏரிகள் நிரம்பிவிட்டன. அங்கு 4 ஏரிகளுக்கு மட்டும் தான் நீர்வரத்து இல்லை.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 125 ஏரிகள் நிரம்பி வழிகிறது. 145 ஏரிகளில் 50 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. இந்த ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 30 ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை.

    பாலாற்றில் ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    பாலாறு கவுண்டன்யா ஆறு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி தர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை பரவலாக சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் உள்ள பெரிய அணையான சாத்தனூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழை காரணமாக இன்று காலை பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் நனைந்தபடி சென்றனர்.

    • நாட்டுப்புற கலைஞர்கள் பாடல், தப்பாட்டம், நாடகங்கள் நடத்தினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி தக்கான்குளம் அருகே நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நகராட்சி 24-வது வார்டு உறுப்பினர் அருண் ஆதி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சோளிங்கர் அரசு மருத்துவமனை எச்.ஐ.வி. ஆலோசகர் சித்ரகலா கலந்துகொண்டு எய்ட்ஸ் பரவும் விதம், அதற்கான சிகிச்சை முறை, எய்ட்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கருவில் உள்ள குழந்தைக்கு நோய் வராமல் தடுப்பது, நோயால் பாதிக்கப்பட்ட நபரை சக மனிதனாக பார்க்க வேண்டும், பாலியல் நோய் குறித்தும், பாதுகாப்பான உடலுறவு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்கள் பாடல், தப்பாட்டம், நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் துறைசார்ந்த பணியா ளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீதேவி, பூதேவிக்கு மகா தீபாராதனை நடந்தது
    • தங்க கேடயத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட் டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதே விக்கு சிறப்பு பூஜை, அபி ஷேகம், அலங்காரம் செய் யப்பட்டு மகா தீபாரா தனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாலையில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக நடந்தது
    • மெட்டல் டிெடக்டருடன் தீவிர கண்காணிப்பு

    அரக்கோணம்:

    கர்நாடகாவில் நிகழ்ந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல் லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில்வே போலீஸ் இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்கள், ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள், பிளாட்பாரம் மற்றும் ரெயில் நிலைய வளாகம் வழியாக வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் மெட்டல் டிடக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் நடைெபறுவதையொட்டி நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட் டத்தை சேர்ந்த ராணிப் பேட்டை நகரம், வாலாஜா, ஒழுகூர் மற்றும் முசிறிதுணை மின்நிலையங்களில் அத்தி யாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்ப தால் நாளை (வியாழக்கி ழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரைராணிப் பேட்டை நகரம், முத்துக் கடை, ஆட்டோ நகர், வி.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந் திநகர், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்னத கரகுப்பம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி.மோட்டூர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லி யப்பா நகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை, ஒழுகூர், வாங் கூர், கரடிகுப்பம், ஜி.சி.குப் பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு, கன்னி காபுரம், எடையகுப்பம், படி யம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை ராணிப் பேட்டை மின்வாரிய செயற் பொறியாளர் குமரேசன் தெரி வித்துள்ளார்.

    இதேபோல ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த ஆற்காடு, திமிரி, கத் தியவாடி, ஆணைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி ஆகிய துணை மின் நிலையங் களில் அத்தியாவசிய மின்சா தன பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆற்காடு நகரம், அவுசிங்போர்டு, வேப்பூர்,

    விஷாரம், நந்தியாலம், தாழ னூர், ராமநாதபுரம், கூராம் பாடி,உப்புப்பேட்டை, கிருஷ் ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்திய வாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம், திமிரி, விளாப் பாக்கம், காவனூர், சாத்தூர், தாமரைப்பாக்கம், வளையாத் தூர் (ஒருபகுதி), மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது இந்த தகவலை செயற்பொறியள விஜயகுமார் தெரிவித்துள்ளார்

    ×