என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் ஓட்ட பந்தயம் இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாரத்தான் ஓட்டமானது புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கி சென்னை சித்தூர் செல்லும் நெடுஞ்சாலை வழியாக சிப்காட், புளியந்தாங்கல் சென்று பெல் பகுதியில் முடிவடைந்தது.

    இதில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாரத்தான் ஓட்ட பந்தயம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். கலெக்டர்.அமர்குஷ்வாஹா. கொடியசைத்து தொடங்கி வைத்தார், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி.அ.நல்லதம்பி எம் எல் ஏ, முன்னிலை வகித்தார். மினி மாரத்தான் போட்டியில் கலெக்டர், எம்எல்ஏ, டாக்டர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள் 350, பேர் கலந்து கொண்டனர். வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் செந்தில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லா, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள், பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பிரியாணி மாஸ்டர்அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகமதுல்லாவை கைது செய்தனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மலையடிவாரம் அம்சாத் நகரைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது45) , இவர் வேலூரில் உள்ள ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இஸ்மாயிலின் முதல் மகளின் கணவர் ரகமதுல்லா (30), டிரைவர். அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர்களுக்குள் குடும்பத் தகராறு இருந்து வந்தது.

    இதுகுறித்து நேற்று இரவு இஸ்மாயில் தனது மருமகன் ரகமதுல்லாவை அழைத்து பேசினார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரகமதுல்லா இஸ்மாயிலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து, மூச்சு பேச்சின்றி இஸ்மாயில் விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இஸ்மாயிலை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகமதுல்லாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ஊள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவரது வீட்டில் நேற்று இரவு கொள்ளையர்கள் புகுந்தனர். அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். அதேபகுதியை சேர்ந்தவர் குப்புராஜ், முன்னாள் ராணுவ வீரர். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூஜை அறையில் இருந்த உண்டியல் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இது குறித்து புகாரின் பேரில் கொண்டபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஓய்வு வயதை உயர்த்த வலியுறுத்தல்
    • கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ராணிப்பேட்டையில் நேற்று கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர்.பேரணிக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    இந்த பேரணியானது காரை கூட்ரோட்டில் தொடங்கி சென்னை மும்பை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

    பேரணியில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு பணியாளர்களை வைத்து நடத்த வேண்டும், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும், தேர்தல் வாக்குறுதியான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாபுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிர்வாகிகள் அளித்தனர்.

    • பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க வலியுறுத்தல்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ந் தேதி தேசிய குழந்தை தினம் கடைபிடிக்கப்ப டுகிறது. அன்றைய தினம் வீரதீர செயல் புரிந்த 13 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது.தேசிய பெண் குழந்தை தினத்தன்று விருது பெறுவதற்கு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு இருத்தல் வேண்டும். 13 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

    தகுதியுள்ள பெண் குழந்தைகள் பெயர், தாய்/ தந்தை பெயர், முகவரி, ஆதார் எண், புகைப்படம், குழந்தை ஆற்றிய அசாதாரண வீரதீர செயல் மற்றும் சாதனை ஆகியவற்றுக்கான ஆதாரங்கள், ஒரு பக்கத் துக்கு மிகாத குறிப்புகள் ஆகியவற்றுடன், "மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், ராணிப்பேட்டை" எனும் முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • புதிய கட்டிடம் கட்ட ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
    • அதிகாரிகள் உடன் சென்றனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த மேட்டுக்குன்னத்தூரில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் 45 ஆண்டு பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது.அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட உள்ளனர்.இந்த இடத்தை சோளிங்கர் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், ஒன்றிய குழு துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் மேட்டுக்குன்னத்தூர் காலனி பகுதியில் சிமெண்டு சாலை, மின் விளக்குகள் அமைப்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் கருணாநிதி, கிளைக் கழக செயலாளர் வெங்கடேசன், கிளை கழக அவைத்தலைவர் மணி, கிளை கழக பிரதிநிதி திருமால் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினர்
    • 1½ கிலோ கஞ்சா பறிமுதல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியில் டவுன் இன்ஸ் பெக்டர் சாலோமன் ராஜா தலைமையில் பயிற்சி சப்-இன்ஸ் பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத் திற்கு இடமளிக்கும் வகையில் ஸ்கூட்டரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஆந்திர மாநி லம் ஓ.ஜி.குப்பத்தை சேர்ந்த துர்காராவ் (வயது 38), அவரது தம்பி மகேந்திரா (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 1½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அண்ணன் தம்பி மீது வழக் குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பொருட்கள் எரிந்து சேதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் புதுத்தெருவில் உள்ள கந்தசாமி என்பவரது வீட்டில் அவர்களது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த போது வீடு தீப்பிடித்து எரிந்து வீட்டில் இருந்த 6 சவரன் நகை, ரூ.14,000 ஆயிரம் ரூபாய் எரிந்து நாசமானது. இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விசாரணையில் நகை, பணத்தை திருடிவிட்டு வீட்டிற்கு தீ வைத்துவிட்டு கும்பல் தப்பி சென்றது தெரியவந்தது.

    வீட்டுக்கு தீ வைத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் நள்ளிரவு 12 மணிக்கு அரக்கோணத்திற்கு வந்தது.
    • பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி ரெயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர்.

    அரக்கோணம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் 10.50 மணிக்கு புறப்பட்டு சென்றது.

    பி 5 ஏசி கோச்சில் பயணிகள் பயணம் செய்தனர். அந்த பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது.

    அப்பெட்டியில் உள்ள பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் இது குறித்து கூறினர். டிக்கெட் பரிசோதகர் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ரெயில் நள்ளிரவு 12 மணிக்கு அரக்கோணத்திற்கு வந்தது. முதல் நடை மேடைக்கு வந்து நின்றது. அப்போது பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி ரெயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர்.

    இதனால் ரெயிலை அங்கிருந்து இயக்க முடியவில்லை. அதிகாரிகள் வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்த ஏசி மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு ஏசியை சரி செய்தனர். இதன் பின்னரே பயணிகள் ரெயிலில் ஏறினர்.

    இதையடுத்து பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு
    • விவசாய கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் தாலுகா வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தாசில்தார் சண்முகசுந்தரம் விவசாய கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும், பாரத பிரதமரின் அனைவருக் கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    தலைமையிடத்து துணை தாசில்தார் சமரபுரி, வருவாய் ஆய்வாளர்கள் ஜெயபால், பிள்ளையார், யுவராணி, குழந்தை தெரேசா, கிராம நிர்வாக அலுவலர்கள் நெடுஞ்செழியன், ராஜேஷ், லட்சுமி நாராயணன், கார்த்தி, கலைவாணன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • தொடர்மழையால் தண்ணீரில் மூழ்கி சேதம்
    • ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள பயிர்களை அகற்ற உத்தரவு

    ஆற்காடு:

    கலவை தாலுகாவில் பெய்த மழையால் கலவைபகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

    அதைத்தொடர்ந்து கலெக் டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவுப்படி, கலவை தாலுகாவில் உள்ள சென்ன சமுத்திரம் மாந்தாங்கல், மேட்டூர் போன்ற பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கலவை தாசில்தார் மதிவாணன் பார்வையிட்டார். மேலும் ஏரியின் அருகே உள்ள நீர் பிடிப்பு பகுதியில் உள்ள நிலங்களில் நெற்பயிர்களை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.

    வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம அதிகாரி விஜி, கிராம உதவியாளர் குப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • ராணிப்பேட்டை செயற்பொறியாளர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த, சிப்காட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (சனிக்கி ழமை) காலை 9 மணி முதல். பிற்பகல் 2 மணி வரை, ராணிப்பேட்டை நகரம், நவல்பூர் காரை, புளியங் கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், அவரக்கரை, சிப்காட், சிட்கோ, பெல், தெங்கால், புளியந்தாங்கல், அக்ராவரம், சீக்கராஜபுரம், வாணாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம் மற்றும் அதனை சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

    ×