search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது சுகாதார துறை நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி
    X

    ராணிப்பேட்டையில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் ஓட்ட அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    பொது சுகாதார துறை நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் ஓட்ட பந்தயம் இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாரத்தான் ஓட்டமானது புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கி சென்னை சித்தூர் செல்லும் நெடுஞ்சாலை வழியாக சிப்காட், புளியந்தாங்கல் சென்று பெல் பகுதியில் முடிவடைந்தது.

    இதில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாரத்தான் ஓட்ட பந்தயம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். கலெக்டர்.அமர்குஷ்வாஹா. கொடியசைத்து தொடங்கி வைத்தார், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி.அ.நல்லதம்பி எம் எல் ஏ, முன்னிலை வகித்தார். மினி மாரத்தான் போட்டியில் கலெக்டர், எம்எல்ஏ, டாக்டர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள் 350, பேர் கலந்து கொண்டனர். வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் செந்தில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லா, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள், பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×