என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய கட்டிடம் கட்ட ஒன்றிய குழு தலைவர் ஆய்வு செய்த காட்சி.
மாணவர்களுக்கு போதிய வசதி இல்லாததால் பழைய பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது
- புதிய கட்டிடம் கட்ட ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
- அதிகாரிகள் உடன் சென்றனர்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த மேட்டுக்குன்னத்தூரில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் 45 ஆண்டு பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது.அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட உள்ளனர்.இந்த இடத்தை சோளிங்கர் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், ஒன்றிய குழு துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மேட்டுக்குன்னத்தூர் காலனி பகுதியில் சிமெண்டு சாலை, மின் விளக்குகள் அமைப்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் கருணாநிதி, கிளைக் கழக செயலாளர் வெங்கடேசன், கிளை கழக அவைத்தலைவர் மணி, கிளை கழக பிரதிநிதி திருமால் மற்றும் பலர் உடனிருந்தனர்.






